By டாக்டர் ஜி.வி.ராவ், இயக்குநர் ஏஐஜி மருத்துவமனை
ஹைதராபாத்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, நவீன மருத்துவ பரப்பை குறிப்பாக அறுவை சிகிச்சை துறையில் சீராக மறு சீரமைப்பை மேற்கொண்டு வருகிறது. முடிவு எடுக்கும் திறனை விரிவாக்குவது முதல் துல்லியமான மேம்பாடு, விரைவில் குணம் பெறுதல் வரை அறுவை சிகிச்சை நடைமுறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்தல் என்பது நோயாளி குணம் பெறுதலை புரட்சிகரமாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இரைப்பை குடல் (GI) அறுவை சிகிச்சையில் சிக்கலான உடற்கூறு இயல் மற்றும் ஊடுறுவும் நுட்பங்களை குறைத்து ஏஐ தொழில்நுட்ப முன்னேற்றங்களில் இருந்து குறிப்பிடத்தக்க வகையில் பலன் அளிப்பதைக் கொண்டுள்ளது. லேப்ராஸ்கோபிக் கோலெக்டோமியின் போது, ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் பார்வையில் முன்கணிப்புக்கு அப்பாற்பட்டு, அதிக ஆபத்துள்ள பகுதிகளை முன்னிலைப்படுத்தி மாற்று அறுவை சிகிச்சை அணுகுமுறைகளை பரிந்துரைக்கும் ஒரு ஏஐ அமைப்பை கற்பனை செய்து பாருங்கள். ஏஐயின் இது போன்ற பயன்பாடுகள், நடைமுறை அபாயங்களை குறைக்கும், கட்டி அகற்றுதலின் போது துல்லியமாக செயல்படுவதை விரிவாக்கும். நிகழ்நேர தனிப்பயனாக்கப்பட்ட நுண்ணறிவுகளை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இரைப்பை குடல் (GI) அறுவை சிகிச்சையில் ஏஐ பயன்பாடுகள்
இண்டோசயனைன் பச்சை (ICG) ஒளிர்வு இமேஜிங் மற்றும் மஞ்சள் மேம்பாட்டு போன்ற பயன்பாடுகள் வாயிலாக ஏஐ அல்கரிதம் என்பது நிகழ்நேர இமேஜிங்கை மேம்படுத்துகிறது. லேப்ராஸ்கோபிக் கருவிகளை ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம், அறுவை சிகிச்சை நிபுணர்கள் வாஸ்குலர் மற்றும் நிணநீர் கட்டமைப்புகளின் உயர்வான காட்சிகளை பெற முடியும். முன்கணிப்பு அல்கரிதம்கள், உகந்த பிரிப்பு தள ஆலோசனைகளை விரைவில் வழங்கும். கட்டி அகற்றுதலின் போது துல்லியமாக செயல்படுவதை விரிவாக்கும் மற்றும் நடைமுறை அபாயங்களை குறைக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட ரோபாட்டிங் முறைகள் ஏற்கனவே, இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் குறைந்த அளவில் உதவி கரம் நீட்டி ஊடுருவுவதன் மூலம் அறுவை சிகிச்சைக்கு இடையேயான தரவுகளை அதிக அளவில் கைப்பற்றியுள்ளன. இந்த தரவுகளில் இருந்து உள்ளார்ந்த நுட்பங்களை உருவாக்கி அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்களை அவை செம்மையாக்கும். முன் கணிப்பு வழிகாட்டுதல்களை வழங்கும். தொடர்ச்சியான கற்றல் சுழற்சியை செயல்படுத்துவதன் காரணமாக நோயாளிகளை காப்பதை அதிகரிப்பதுடன் மனித தவறுகளை குறைக்கும்.
அறுவை சிகிச்சைக்கு முந்தைய திட்டமிடல் மற்றும் உருவகப்படுத்துதலில் ஏஐ மாதிரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும். ஏஐ உருவாக்கிய, நோயாளிகளுக்கு ஏற்ற உருவகப்படுத்தலைக் கொண்டு, மெய்நிகர் சூழல்களில் சிக்கலான நடைமுறைகளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒத்திகை பார்க்க முடியும். கடந்த கால அறுவை சிகிச்சைகளை ஆய்வு செய்து ஏஐ அல்கரிதம்கள், ஒவ்வொரு நோயாளியின் உடலுக்கு ஏற்றபடியான உகந்த அணுகுமுறைகளுக்கு ஏற்ப சிகிச்சைகளை வடிவமைப்பதில் ஆலோசனைகளை வழங்கும். உதாரணமாக கல்லீரல் அறுவை சிகிச்சைக்கு முன்பாக, மிகவும் சாதகமான திட்டம் மற்றும் பாதுகாப்பான முறை எது என்பதை தீர்மானிப்பதற்கான வெவ்வேறு வித்தியாசமான அறுவை சிகிச்சை அணுகுமுறைகளை மறு உருவாக்கம் செய்ய, டிஜிட்டல் அடிப்படையில் நோயாளியின் இரண்டு கல்லீரலை உருவாக்க முடியும். அதே போல ரோபாடிக் உதவியுடனான இரைப்பை அறுவை சிகிச்சையில், ஏஐ முறையானது நிகழ்நேர பயோ மெட்ரிக் தரவுகளை கண்காணிக்கும். ரோபாடிக் இயக்கங்களை மேற்கொள்ளும். பாதகமான விளைவுகளை முன்னறிவித்தல், பாதுகாப்பு மற்றும் துல்லியத்தை மேம்படுத்தும்.
ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக ஜெனரேட்டிவ் ஏஐ பயன்படுத்துதல்
தொடர்ச்சியான கற்றல், முன்கணித்தல் நுட்பங்கள், தீர்மானித்தலில் விரிவான ஆதரவு ஆகியவற்றை மேற்கொள்வதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஜெனரேட்டிவ் ஏஐயை பயன்படுத்த முடியும். கருவி வழிகாட்டுதல், ஒழுங்கின்மை கண்டறிதல், திசுக்களை அடையாளம் காணுதலில் உதவி, நடைமுறைகள் ஆகியவற்றின் போது ஏஐ அல்கரிதம்கள் நிகழ்நேர பரிந்துரைகளை வழங்கும். முன்கணிக்கும் ஏஐ முறைகள் நோயாளியின் தரவுகளை ஆய்வு செய்து சிக்கலான நிலைகள் குறித்து முன்னறிவிக்கும். முன்முயற்சியுடன் கூடிய முடிவுகள் எடுப்பதற்கு அறுவை சிகிச்சை நிபுணர் திறம்பட செயல்பட உதவும். பெருங்குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் போன்ற தரவு அடிப்படையிலான நடைமுறைகளில், ஏஐ ஆனது முக்கியமான அறிகுறிகளை கண்காணித்து பாதகமான விளைவுகள் நேரிடுவதை குறைக்க முன்னெச்செரிக்கை கணிப்புகளை வழங்கும்.
ஏஐ திறன் கொண்ட தளங்கள் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தரவுகளை ஆய்வு செய்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விதம் மற்றும் நுட்பத்தை செம்மைப் படுத்துதல் ஆகியவற்றில் பின்னூட்டங்களை வழங்கும். முந்தைய அறுவை சிகிச்சையில் இருந்து உள்ளார்ந்த நுணுக்கங்களை மேற்கொண்டு, ஒவ்வொரு நடைமுறையும் பாதுகாப்பானதாக, மேலும் திறன் வாய்ந்ததாக இருப்பதை ஏஐ உறுதி செய்கிறது. தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலம் தனிப்பட்ட நோயாளிகளின் குறிப்பிட தேவைகளை மேற்கொள்வதில் பன்முக உதவியை வழங்குவதாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு முடிவு எடுக்கும் திறனை விரிவாக்கும் வகையிலும் அது இருக்கும்.
ஏஐ மூலம் நோயாளி ஈடுபாடு
அறுவை சிகிச்சை நடைமுறைகள் முழுவதும் தனிப்பட்ட கற்றல் மற்றும் கண்காணிப்புகளை அளிப்பதன் மூலம் ஏஐ முறையானது நோயாளிகளை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும். அறுவை சிகிச்சைக்கு முன்பு, ஏஐ உதவியுடன் கூடிய மெய்நிகர் உதவியாளர்கள், அடுத்து மேற்கொள்ளப்பக் கூடிய நடைமுறைகள், கேள்விகளுக்கு பதில் அளித்தல், அறுவை சிகிச்சைக்கு முந்தைய வழிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்தல் போன்ற நோயாளியின் அனைத்து தகவல்களையும் வழங்கும். இத்தகைய ஏஐ முறைகள், தனிநபர் அபாயம் குறித்தும் எச்சரிக்கை செய்யும் மற்றும் அறுவை சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகளை பரிந்துரைக்கின்றன. நோயாளியின் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், மொபைல் செயலிகள், நோயாளி அணிந்திருக்கும் கருவிகள் வாயிலாக நோயாளிகளின் குணம் அடையும் நிலை குறித்து ஏஐ திறன் கொண்ட பயன்பாடுகளை கண்காணிக்க முடியும். இந்த மூலாதாரங்களில் இருந்து தரவுகளை ஆய்வு செய்து, வரக் கூடிய சிக்கல்களின் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டுபிடித்தல், இடையீடுகளை பரிந்துரைத்தல், தேவைப்பட்டால், சுகாதார நலன் வல்லுநர்களை எச்சரித்தல் ஆகியவற்றை ஏஐ அல்கரிதம்கள் மேற்கொள்ளும்.
ஏஐ நுட்பத்தின் திறன் பெற்ற தனிப்பட்ட குணம் பெறும் திட்டங்கள், நோயாளிகள் சிறப்பாக பின்பற்றுதலையும் மேம்பட்ட ஒட்டுமொத்த விளைவுகளையும் உறுதி செய்கிறது. உதாரணமாக, லேப்ராஸ்கோபிக் பித்தப்பை அறுவை சிகிச்சையில் இருக்கும் நோயாளி, வலி நிர்வகிப்பு, உணவு முறை மாற்றங்கள், உடல் பயிற்சி இலக்குகள், ஆகியவற்றில் ஏஐ பரிந்துரைகளை பெற முடியும். மெய் நிகர் ஆரோக்கிய உதவியாளர்கள் மூலம் நிகழ்நேர ஆதரவு கிடைக்கும்.
ஏஐ ஒருங்கிணைப்பில் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி
இரைப்பை குடல் (GI) அறுவை சிகிச்சையில் ஏஐயை வெற்றிகரமாக மேற்கொள்ளுதலில், அறுவை சிகிச்சை குழுக்கள், அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இலக்குடன் கூடிய பயிற்சி திட்டங்கள் தேவைப்படுகிறது. அல்கரிதம் முறைகள், தரவு விளக்கம், கருவி கற்றல் அம்சங்களை புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ஏஐ கற்றல் பயிற்சி முகாம்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏஐயால் இயக்கப்படும் நுண்ணறிவுகளை விளக்குவதில் தேர்ச்சி பெறுதல் என்பது அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஏஐயால்- மேம்படுத்தப்பட்ட மெய்நிகர் சூழல்களைப் பயன்படுத்தி உருவகப்படுத்துதல் அடிப்படையிலான பயிற்சி பெறுதலை அனுமதிக்கிறது. தரவு விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட ஏஐ சிறப்பு நிபுணர்களுடனான கூட்டாண்மை என்பது அறுவை சிகிச்சை பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஏஐ வழிமுறைகளை மேலும் செம்மைப்படுத்தும். தொடர்ச்சியான கற்றல் மாதிரிகள் மற்றும் சான்றிதழ் திட்டங்கள் ஆகியவை நவீன ஏஐ முன்னெடுப்புகளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்வதையும், இந்த கருவிகளை உபயோகிப்பதில் திறமை பெறுவதையும் உறுதி செய்யும்.
ஏஐயை நோயாளி பராமரிப்புக்கு மாற்றுதல்
தனிப்பட்ட பாதுகாப்பின் வழியே நோயாளிகள் குணம் பெறுவதை விரிவாக்குவதற்கு இரைப்பை குடல் (GI) அறுவை சிகிச்சையில் ஏஐயை ஒன்றிணைப்பதே முடிவான இலக்காகும். ஏஐ திறன் மிக்க முறைகள் விரைவாக, முடிவுகள் எடுக்கும் வகையில் முன் கணிப்பு அல்கரிதம்கள் செயல்படுவதால், நடைமுறைகளை நெறிப்படுத்துவதால் அறுவை சிகிச்சைக்கான நேரம் குறையும் என நோயாளிகள் எதிர்பார்க்கலாம். துல்லியமான அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் மனித தவறு நேரிடுவதற்கான சாத்தியம் குறைவு போன்ற நிகழ்நேர ஏஐ நுண்ணறிவு வாயிலாக சிக்கலான நிலையின் விகிதம் குறைப்படுவதை அடையமுடியும். விரைவான ஏஐ வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக மருத்துவமனையில் தங்கும் காலகட்டம் குறையும். குணம் அடைவதும் விரைவாக இருக்கும். கூடுதலாக, ஏஐயால் உருவாக்கப்பட்ட நுண்ணறிவுகள், நோயாளிக்கு ஏற்ற குறிப்பிட்ட பராமரிப்பை மேம்படுத்தும் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டங்களை உறுதிசெய்து, வடிவமைக்கப்பட்ட அறுவை சிகிச்சை அணுகுமுறைகளை செயல்படுத்தும்.
துணையாக இருக்கும் கருவி என்பதில் இருந்து சுதந்திரமான அறுவை சிகிச்சை உதவியாளராக ஏஐயை மதிப்பிடும் காலம் வெகுதூரத்தில் இல்லை. திறன் மிகுந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் வெளி இடங்களில் இருந்து கண்காணிப்பு மேற்கொள்ளும் முறையில் வசதி குறைந்த பகுதிகளில், ஏஐ திறன் மிக்க ரோபாடிக் முறைகள் மூலம் பகுதி அளவு சுதந்திரமான முறைகள் மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம். லட்சகணக்கான கடந்த கால நடைமுறைகளின் அடிப்படையில் நிகழ்நேர வழிகாட்டுதல்களை ஏஐ அளிக்கும். இதன் மூலம் நோயாளிக்கு நிலையான உயர்தரமான சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும். தொலைதூரத்தில் இருந்து பயிற்சி கொடுக்கும் வகையில் ஏஐயை விரிவாக்கம் செய்யமுடியும். இளம் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மிகை யதார்த்தமான உருவகப்படுத்துதல்களில் பயிற்சி பெற வழிவகுக்கும். தொடர்ச்சியான மேற்கொள்ளல்கள், பின்னூட்டங்கள் வாயிலாக, செயற்கை நுண்ணறிவு என்பது உதவியாக மட்டுமின்றி, அடுத்த தலைமுறை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கற்பிக்கவும், திறன்படைத்தவர்கள் ஆக்குவதற்கும் உதவும்.
இரைப்பை குடல் (GI) அறுவை சிகிச்சையில் ஏஐயை இணைப்பது என்பது நோயாளிகள் பராமரிப்பு, முடிவுகளை தீர்மானித்தல் , அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணுகும் முறைகளில் ஒரு மகத்தான மாற்றத்தைக் குறிக்கிறது. ஜெனரேட்டிவ் ஏஐயை மேற்கொள்வதன் மூலம் முன்கணிப்பு பகுப்பாய்வு மற்றும் ரோபாட்டிக்ஸ் சார்ந்த நுண்ணறிவுகளுடன், அறுவை சிகிச்சை நிபுணர்கள் துல்லியத்தை மேம்படுத்தவும், சாதகமான விளைவுகளை மேம்படுத்தவும், அறுவை சிகிச்சை சிறப்பின் எல்லைகளை கடக்கவும் உதவும். எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை என்பது வெறுமனே ஏஐ உதவியுடன் கூடியது மட்டுமின்றி, ஏஐ அதிகாரம் படைத்தாக, உலக அளவில் நோயாளிகள் பராமரிப்பில் மேலும் தனிச்சிறப்பானதாக பாதுகாப்பானதாக, விரைவானதாக இருக்கும்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்