ETV Bharat / opinion

தமிழ்நாட்டில் ஊராட்சிகளின் செயல்திறன்! சிறந்த பஞ்சாயத்தாக தேர்வு பெற்ற மாதம்பட்டு! - PANCHAYATS PERFORMANCE

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் சிறந்த 10 ஊராட்சிகள் மற்றும் பின் தங்கிய 10 ஊராட்சிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிராம சபைக் கூட்டம் - கோப்புப்படம்
கிராம சபைக் கூட்டம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 11, 2025 at 8:09 PM IST

2 Min Read

"கிராமம் உயர நாடு உயரும்" என்றார் காந்தியடிகள். நாடு சுதந்திரம் அடைந்த போது, 70 சதவீத மக்கள் கிராமப்புறங்களில் வசித்து வந்தார்கள். அதனால் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. வேளாண்மையில் தொடங்கி, பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும், கிராமப்புற மேம்பாடு, கிராமப்புற வறுமை ஒழிப்பு, கிராமப்புற வேலைவாய்ப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1984-ம் ஆண்டு ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமாரன பின், கிராமப்புற மக்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் கூடுதல் பங்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்காக பஞ்சாயத்துராஜ் சட்டம் கொண்டு வந்தார். இதன் பின்னர், இந்த சட்டம் நாட்டில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊராட்சிகளின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆய்வு மேற்கொண்டது. நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) உள்ளூர்மயமாக்குதல் மற்றும் அடிமட்ட நிர்வாகத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாக, பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் பஞ்சாயத்து முன்னேற்ற குறியீட்டை (PAI) அறிமுகப்படுத்தியுள்ளது.

கிராம சபைக் கூட்டம் - கோப்புப்படம்
கிராம சபைக் கூட்டம் - கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

இது நாடு முழுவதும் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கான ஒரு முறையாகும். பஞ்சாயத்தில் வறுமை இல்லாத மற்றும் மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரங்கள், ஆரோக்கியமான சூழல், குழந்தைகளுக்கு உகந்த பஞ்சாயத்து, தண்ணீர் வசதி நிறைந்த கிராமங்கள், சுத்தமான மற்றும் பசுமை பஞ்சாயத்து, தன்னிறைவு பெற்ற உள்கட்டமைப்பு கொண்டவை, சமூகநீதி மற்றும் சமூகரீதியாக பாதுகாப்பான பஞ்சாயத்து, நல்லாட்சி நடத்தும் ஊராட்சி மற்றும் பெண்களுக்கு உகந்த பஞ்சாயத்து ஆகிய 9 கருப்பொருள்களில் பஞ்சாயத்துகளின் செயல்திறனை PAI அளவீடு செய்கிறது.

இதில் சிறந்த செயல்பாடுகளில் மாநிலவாரியாக, குஜராத் 346 கிராம பஞ்சாயத்துகளுடன் முன்னணியில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களை மகாராஷ்டிரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில பஞ்சாயத்துகள் பெற்றுள்ளன.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சக புள்ளிவிவரம்
பஞ்சாயத்து ராஜ் அமைச்சக புள்ளிவிவரம் (Ministry of Panchayati Raj)

தமிழ்நாட்டில் சிறந்த பஞ்சாயத்துகளின் கருப்பொருள்வாரியான மதிப்பெண்கள்

  1. வறுமை இல்லாத & மேம்படுத்தப்பட்ட வாழ்வாதாரங்கள் - கட்டளை, விழுப்புரம் மாவட்டம்
  2. ஆரோக்கியமான பஞ்சாயத்து - கவரப்பட்டு, கடலூர் மாவட்டம்
  3. குழந்தைகளுக்கு சாதகமான பஞ்சாயத்து - வெள்ளிமேடுபேட்டை, விழுப்புரம் மாவட்டம்
  4. போதுமான நீர் வசதி உள்ள பஞ்சாயத்து - வேலம்பூர், மதுரை மாவட்டம்
  5. சுத்தமான மற்றும் பசுமையான பஞ்சாயத்து - வேலம்பூர், மதுரை மாவட்டம்
  6. தன்னிறைவு பெற்ற உள்கட்டமைப்பு கொண்ட பஞ்சாயத்து - வேங்கைவாசல், செங்கல்பட்டு மாவட்டம்
  7. சமூகநீதி மற்றும் சமூகப் பாதுகாப்பான பஞ்சாயத்து - எட்டூர், திருவள்ளூர் மாவட்டம்
  8. நல்லாட்சி கொண்ட பஞ்சாயத்து: சாஸ்தாவிநல்லூர், தூத்துக்குடி மாவட்டம்
  9. பெண்களுக்கு சாதகமான பஞ்சாயத்து - கருவாட்சி, விழுப்புரம் மாவட்டம்

மேலும், செயல்திறன் அடிப்படையில் தமிழ்நாட்டின் முதல் 10 ஊராட்சிகள்...

கிராம பஞ்சாயத்துவட்டாரம்மாவட்டம்செயல்திறன் மதிப்பெண்
மாதம்பட்டுதிருவெண்ணெய்நல்லூர்விழுப்புரம்74.07
தென்மங்கலம்திருவெண்ணெய்நல்லூர்விழுப்புரம்72.29
எரையூர்வானூர்விழுப்புரம்71.63
பனபாக்கம்திருவெண்ணெய்நல்லூர்விழுப்புரம்71.26
புதுரை வானூர்விழுப்புரம்71.21
உளியநல்லூர்நெமிலிராணிப்பேட்டை70.77
பாப்பாபட்டிசெல்லம்பட்டி மதுரை70.69
பிரம்மதேசம்விக்கிரவாண்டிவிழுப்புரம் 70.54
திருப்பாச்சனூர்கோளியனூர்விழுப்புரம் 70.45
ஆர்.அய்யம்பாளையம்பழனிதிண்டுக்கல்70.41

செயல்திறன் குறைவாக உள்ள பஞ்சாயத்துகள்...

தாண்டவராயன்சோழகன்பேட்டைபரங்கிப்பேட்டைகடலூர்37.50
செம்மாங்குடிதிருவையாறுதஞ்சாவூர்38.89
கவனிப்பாக்கம்கிளியனூர்விழுப்புரம்39.06
மளியக்காடுபட்டுக்கோட்டைதஞ்சாவூர்39.34
வி.நல்லாளம்மயிலம்விழுப்புரம்39.42
கீழப்பாளையூர்ஸ்ரீமுஷ்ணம்கடலூர்39.58
பண்ணவாயல்பட்டுக்கோட்டைதஞ்சாவூர்39.63
சித்தாநாங்கூர்திருவெண்ணெய்நல்லூர்விழுப்புரம்39.64
அழகியநாயகிபுரம்சேதுபாவாசத்திரம்தஞ்சாவூர்39.69
உத்தமசோழமங்கலம்பரங்கிப்பேட்டைகடலூர்39.71

இவ்வாறு மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் நாடு வாட்ஸ் ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ் நாடு வாட்ஸ் ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.