ஹைதராபாத்: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் தோல்வியுற்றதை மறைக்க பாகிஸ்தான் இரண்டு விஷயங்களை மேற்கொண்டது. சண்டை நிறுத்தம் செய்யும்படி இந்தியாவை நிர்பந்திக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாகிஸ்தான் ஆளானது. அதே நேரத்தில் ஆபரேஷன் புன்யானும் மார்சூஸ் என்ற அரபிய வார்த்தையின்படி முன்னெடுப்பால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பு என்ற வெற்றியைப் பெற்றதாக பிரசாரத்தை முன்னெடுத்தது.
தோல்விக்குள் வெற்றி: ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனிருக்கு பீல்டு மார்ஷல் ஆக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இரண்டாவதாக போலியான குற்றச்சாட்டுகள் அடங்கிய இந்தியா குறித்த ஆதாரங்களை பாகிஸ்தான் வெளியிட்டது. பாகிஸ்தானின் கட்டுப்படுத்தப்பட்ட ஊடக நிறுவனங்கள் இதனை வெளியிட்டன. பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அந்த நாட்டு ராணுவத்தின் நிபுணர்கள் போலியான செய்திகளை பரப்பினர்.
வரலாற்றுப்பூர்வமாகவே, பாகிஸ்தான் மட்டும்தான் தொடர்ந்து, தோல்விக்குள் வெற்றி என்ற தலைப்பில் இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் ராணுவ தளபதியாக இருந்த பீல்டு மார்ஷெல் விஸ்கவுண்ட் சிலிம் எழுதிய புத்தகத்தை உண்மையாகவே கூறி வருகிறது. அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஐநா கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாகிஸ்தான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டது.

1948ஆம் ஆண்டு காஷ்மீரில் இருந்து துரத்தப்பட்ட போதிலும், காஷ்மீரின் சில பகுதிகளை பிடித்ததால் தாங்கள் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் கூறியது. 1971ஆம் ஆண்டில் சரண் அடையும் நாளுக்கு முன்பு வரை, பாகிஸ்தான் ஆட்சியாளர் யாஹ்யா கான் ஊடகங்களிடம் இந்தியா தரப்பில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வெற்றியை நோக்கி நெருங்கி வருகிறது என்று கூறினார். அதே நேரத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரண் அடைந்ததை அடுத்து அவரது பொய் புதைகுழிக்குள் தள்ளப்பட்டது.
நாடு கடத்தப்பட்ட முஷாரப்: கார்கில் போரில் இருந்து 1999ஆம் ஆண்டு அவமதிக்கப்பட்டு படைகளை விலக்கிக் கொண்டபோதிலும், ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், நவாஸ் ஷெரீப் அரசை கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றினார். தர்க்க ரீதியாக, பாகிஸ்தானை சிக்கலில் தள்ளும் வகையில் ஆயிரகணக்கானோர் உயிரிழக்க காரணமாக இருந்த தோல்வியுற்ற ஆபரேஷனை நடத்திய முஷாரப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். வலுக்கட்டாயமாக நாடுகடத்தப்படுவதற்கு முன்பு முஷாரப் பாகிஸ்தான் அதிபராக இருந்தார். அவரது தோல்வியை பாகிஸ்தானின் ஜெனரல் யாருமே ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை.
இப்போதைய தோல்வியை வெற்றியாக மாற்றும் வகையில், ராணுவ தளபதி அசிம் முனிரின் கைபாவையான ஷெபாஸ் ஷெரீஃப் தலைமையிலான அமைச்சரவை அசிம் முனிருக்கு பீல்டு மார்ஷல் ஆக பதவி உயர்வு அளித்தது. இந்தியா தோல்வி அடையும் வகையில் ஒரு தீர்க்கமான முடிவை ஏற்படுத்திய ஊக்கமுள்ள தலைவராக அவரது முதன்மையான யுக்திக்கு அங்கீகாரம் தரும் வகையில் இந்த அந்தஸ்து அளிக்கப்படுவதாக அமைச்சரவை குறிப்பில் கூறப்பட்டது. பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் முனிர் மறைந்து கொண்டிருந்தபோது தோல்விக்குப் பின்னர் சண்டை நிறுத்தம் கோரி மண்டியிட்ட நிலையில் அதனை முதன்மையான யுக்தி மற்றும் ஊக்கமுள்ள தலைமை பதவி என்று கூறப்பட்டுள்ளது நகைச்சுவையாகும்.
மார்ஷல் பதவிக்கு தகுதியற்றவர்கள்: இதற்கு முன்பு பீல்டு மார்ஷல் ஆக இருந்த அயூப் கான், இப்போதைய பீல்டு மார்ஷல் அசிம் முனிர் இடையே சில ஒற்றுமைகள் நிலவுகின்றன. இங்கிலாந்தின் பாரம்பரியத்தில் ஈக்கப்பட்டு 1959ஆம் ஆண்டு ஒரு புரட்சி மூலம் பீல்டு மார்ஷல் பதவியில் தமக்கு தாமே அயூப் கான் நியமித்துக் கொண்டார். அதே நேரத்தில் இப்போது அசிம் முனிர், தம்மை பீல்டு மார்ஷல் ஆக நியமிக்க பரிந்துரைக்கும் ஆவணத்தை ஷெபாஸ் ஷெரீஃப் ஒப்புதலுக்காக அனுப்பினார். இருவருமே அந்தப் பதவிக்கு தகுதி அற்றவர்கள்தான்.

இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்கள் தொகுப்பை பாகிஸ்தான் அரசு வெளியிட்டது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த தருணத்தில் அதன் முக்கியத்துவத்தை குறைக்க இந்தியாவே பெஹல்காம் தாக்குதலை மேற்கொண்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது. உள்நாட்டு அரசியல் நோக்கத்துக்காக இதனை இந்தியா செய்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
பொய்யான ஆதாரங்கள்: இந்தியா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, புல்வாமா தாக்குதலின் போது நேரிட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியது தொடர்பான புகைப்படங்களை பெஹல்காம் தாக்குதலின் போது இத்தகைய கருத்தை அவர்கள் தெரிவித்தாக பொய்யான ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவுடன், ஏதும் அறியா சுற்றுலா பயணிகளை தீவிரவாதிகள் கொன்றது குறித்து ஒருபோதும் அதில் குறிப்பிடப்படவில்லை. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, பயங்கரவாதத்தின் உலகளாவிய மையமாக அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அதன் தீவிரவாத ஆதரவை மறைப்பதை முக்கியமாக மேற்கொண்டது.
இதையும் படிங்க: உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி: அரிதான நம்பிக்கை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்தியா மசூதிகளை குறிவைத்து தாக்கியதாகவும், ஏதும் அறியா அப்பாவி மக்களை கொன்றதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. முரிட்கேயில் உள்ள லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் கட்டடத்தில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் உசேன் ஷா, மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான் சர்தாஜ் மற்றும் பிரிகேடியர் முகமது ஃபுர்கான் ஷபீர் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதைக் குறிப்பிடத் தவறிவிட்டது. அவர்களின் சவப்பெட்டிகள் அந்த நாட்டின் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டிருந்தன, ஆயுதப்படையினர் இறந்தால் எப்படி மரியாதை அளிக்கப்படுமோ, தீவிரவாதிகளுக்கு அவ்வாறு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரார்த்தனைகளுக்கு தலைமை தாங்கியவர் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் தளபதி அப்துல் ரவூஃப் ஆவார். இவர் அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர். அவரது தலைக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. ரவூஃப் ஒரு பயங்கரவாதி அல்ல, ஒரு சாதாரண தனிநபர் என்ற கூற்றுக்களுடன் அவரது கருத்துக்களை மறைக்க பாகிஸ்தான் டிஜிஐஎஸ்பிஆர் முயன்றது. அவரது பொய்களை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
போலியான படங்கள்: பாகிஸ்தான் ராணுவத்தால் பலுசிஸ்தான் பகுதியில் கொல்லப்பட்ட அடையாளம் தெரியாத நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் இந்தியாவின் தாக்குதலால் கொல்லப்பட்டவர்கள் என்ற பொய்யான தகவலையும் வெளியிட்டுள்ளது. எந்த இடம் என்று அறிய முடியாத இடத்தில் உள்ள அவர்களின் கட்டமைப்புகள் சேதம் அடைந்தது குறித்த படங்களையும் வெளியிட்டுள்ளது. இது எல்லாமே போலியானதாகும்.
பாகிஸ்தான் மீதான தாக்குதலுக்கு முன்னும் பின்னும் இந்திய அதிகாரிகள் ஊடக சந்திப்புகள் நடத்தினர். குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்ட இலக்குகளுக்கான ஆதாரங்கள் தரப்பட்டன. அவை தாக்குதலின் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்தன. பாகிஸ்தானின் ஊடக விளையாட்டு உலகளவில் விமர்சிக்கப்பட்டது.ஆனால் DGISPR ஆல் அங்கீகரிக்கப்பட்டதைத் தவிர வேறு எதையும் எந்த ஊடக நிறுவனமும் வெளியிட முடியாது என்பதால் இத்தகைய தவறான செய்திகள் பாகிஸ்தானுக்குள் பிரபலமடைந்தன.
மேலும், பாகிஸ்தானின் தொடர் துல்லிய தாக்குதலில் இந்திய ராணுவ கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டதாக பாகிஸ்தானின் ஆதாரத்தில் கூறப்பட்டிருந்தது. ஆதம்பூர், புஜ் பகுதிகளில் 3x ரஃபேல், மிக் -29 ரக போர் விமானங்கள், எஸ்-400 பேட்டரி அமைப்புகள் உள்ளிட்ட பெரும் அளவிலான ஆளில்லா வாகனங்கள் 5x இந்திய விமானம் ஆகியவை தாக்கப்பட்டன மற்றும் 84x இந்திய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் கூறப்பட்டிருக்கிறது. பியாஸ் மற்றும் நக்ரோட்டா பகுதியில் வைக்கப்பட்டிருந்த பிரமோஸ் ஏவுகணைகளையும் அழித்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது.
பாகிஸ்தான் அமைத்த குழு: பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் ஒப்புக்கொண்டபடி, 'சமூக ஊடகங்கள்' தவிர தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தம் தொடங்கிய உடனேயே பிரதமர் நரேந்திர மோடி ஆதம்பூர் சென்றார். அங்குள்ள விமானப்படை தளத்தில் இறங்கினார். எஸ் 400 பேட்டரி அமைப்புகள் அப்படியே இருக்கின்றன என்பதை தெரிவிக்கும் வகையில் அதன் பின்னால் நின்று அவர் புகைப்படம் எடுத்தார். இந்திய ராணுவ கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்கியதாக பாகிஸ்தான் கூறிய ஒவ்வொரு பொய்யும் மறுக்கப்பட்டது.
பெஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறது என உலகநாடுகளிடம் எடுத்துச் சொல்வதற்காகவும், பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மேற்கொள்ளப்பட்டது என்றும், சிந்து நதிநீர் ஓப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து விளக்கவும் நாடாளுமன்ற எம்பிக்களைக் கொண்ட ஏழு குழுக்களை இந்தியா அறிவித்தது. உடனே இதனைப் பின்பற்றி பாகிஸ்தானும் ஒரு குழுவை அமைத்தது. பிலாவல் பூட்டோ தலைமையில் அந்த குழு அமைக்கப்பட்டது. இது குறித்து கூறியுள்ள பிலாவல் பூட்டோ, சர்வதேச அரங்கில் அமைதிக்கான பாகிஸ்தானின் வாதத்தை முன்வைக்க ஒரு குழுவை நான் வழிநடத்துகின்றேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தானின் வழக்கம்: உண்மையான இழப்புகளை மறைக்கும் வகையில் பாகிஸ்தான் பிரச்சாரம் செய்யும் என்பதை இந்தியா உணர்ந்தே இருக்கிறது. ராணுவ நிலைகள், தீவிரவாத முகாம்கள், ராணுவ சோதனை சாவடிகள் மீது நடந்த தாக்குதல்கள், எல்லை முழுவதும் நடந்த உண்மையான தாக்குதல்களை இப்போது படிப்படியாக வெளியிடத் தொடங்கியுள்ளது. உண்மையில் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்திய படைப்பிரிவுக்கு கட்டளையிட்டவர்களால் இந்த வீடியோக்கள் பகிரப்படுகின்றன. பாகிஸ்தான் அழித்ததாகக் கூறும் அதே தலைமையகங்களில்தான் ஊடகச் சந்திப்புகளும் வீடியோக்களும் ஒளிபரப்பப்படுகின்றன, இது பாகிஸ்தானின் பொய்களை மேலும் வலுப்படுத்துவதாக இருக்கிறது.
பாகிஸ்தான் நாடானது, பொய் சொல்லி தோல்வியை வெற்றியாக மாற்றுவதை மிகவும் வழக்கமாக கொண்டுள்ளது என்பது இறுதியில் வெளிப்படுகிறது. பாகிஸ்தானின் அனைத்து பொய்களையும் நிரூபிக்கும் இந்திய அரசின் உலகளாவிய தொடர்பு மற்றும் தகவல் தாக்குதலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தற்போது பாகிஸ்தான் குழப்பத்தில் உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர், ஃபீல்ட் மார்ஷல் ஸ்லிம் புத்தகத்தை தவறாகப் புரிந்துகொண்டு, ‘பாகிஸ்தான் ராணுவத்தின் தோல்வி எனக்கு வெற்றி’ என்று படித்திருக்கிறார்.
(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவை எழுத்தாளரின் கருத்துகள். அவை ETV பாரத்தின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை)
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.