ETV Bharat / opinion

உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி: அரிதான நம்பிக்கை - INDIGENOUS DEFENCE MANUFACTURING

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என இரண்டின் மூலமும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி சீராக அதிகரித்திருக்கிறது என்பது அண்மைகால சாதகமான அம்சமாகும்.

மே 12 அன்று புது டெல்லியில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது (இடது-வலது) டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி மற்றும் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத்.
மே 12 அன்று புது டெல்லியில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது (இடது-வலது) டிஜிஎம்ஓ லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய், ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி மற்றும் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத். (ANI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2025 at 7:43 PM IST

5 Min Read

BY டாக்டர்.ஆனந்த் எஸ்

ஹைதராபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மை கால மோதல், எந்த ஒரு இதர மோதலைப்போலவே ஒரு பொருளாதார செலவினத்தைக் கொண்டிருக்கும் என்பது மாறாத ஒன்றாகும். போரை முன்னெடுத்துச் செல்வதற்கும், நீடித்திருப்பதற்கும் போர்களுக்கு எப்போதுமே பெரும் அளவில் பணம் தேவைப்படும். அண்மைகால இந்தியா-பாகிஸ்தான், உக்ரைன்-ரஷ்யா இடையேயான மோதல்கள் மூலம் போரின் இயல்பு தன்மை மாறி இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. ஒரு போர் தொடுத்தல் தொடர்ந்து மதிப்பிடப்பட வேண்டும் என்ற முறைகளில் ஏதோ ஒரு முடிவைக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், எந்த ஒரு நாடும் பாதுகாப்பு உபகரணங்களுக்காக இறக்குமதியை சார்ந்திருப்பது அபாயகரமானது என்பதை வெளிப்படுத்துகிறது.இல்லையென்றால், ராணுவ ரீதியாக தற்கொலைக்கு சமமானதாகும்.

இந்திய பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்கானது சீராக குறைந்து வருகிறது என்பது ஒரு ஆச்சர்யகரமான அம்சமாக இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் என இரண்டின் மூலமும் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி சீராக அதிகரித்திருக்கிறது என்பது அண்மைகால சாதகமான அம்சமாகும். பாகிஸ்தானுக்கு ராணுவ தளவாடங்கள் அளிப்பது என்ற சீனாவின் மாற்றத்துக்குறிய செயல்பாடு என்பது, ஒரு புதிய தீவிரத்தை உருவாக்கி உள்ளது.

உள்நாட்டு உற்பத்தி

பாதுகாப்பு துறைக்கு செலவிடுவதில் நான்காவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகியவை முறையே முதல் மூன்று இடங்களைக் கொண்டுள்ளன. 40 சதவிகித பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 2020 முதல் 2024ஆம் ஆண்டுக்கு இடையே இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் மிக முக்கிய விநியோகஸ்தர்களாக ரஷ்யா (36%), பிரான்ஸ் (33%), இஸ்ரேல் (18%), இதர நாடுகள் (13%) ஆகியவை இருந்திருக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் என்பது 2013-14ஆம் ஆண்டில் ரூ.2.53 லட்சம் கோடியாக இருந்தது, 2025-26ஆம் ஆண்டில் 6.8 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. தற்போதைய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கான கொள்முதலுக்கு ரூ.1.7 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் பாதுகாப்பு தொடர்பான உபகரணங்கள் உற்பத்தி என்பது தனி சிறப்பு வாய்ந்த வகையில் சிறப்பு வாய்ந்த உற்பத்தி இலக்குகளுடன் 16 வெவ்வேறு பொதுத்துறை நிறுவனங்களைக் கொண்ட பொதுத்துறை நிறுவனங்கள் துறை சார்ந்ததாக இருந்து.

பாதுகாப்பு உற்பத்தி இன்ஃபோ கிராபிக்ஸ்
பாதுகாப்பு உற்பத்தி இன்ஃபோ கிராபிக்ஸ் (ETV Bharat)

பாதுகாப்பு துறையில் உபகரணங்கள் உற்பத்தி என்பது இப்போது 16 பொதுத்துறை நிறுவனங்கள் தவிர, அங்கீகாரம் பெற்ற 430 நிறுவனங்கள், குறு சிறு நடுத்தர தொழில்கள் துறையின் 16000 நிறுவனங்கள் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் சேவையை வழங்குகின்றன. 2023-24ஆம் ஆண்டின் முடிவில் ஒட்டு மொத்த பாதுகாப்பு உபகரண உற்பத்தி என்பது தோராயமாக ரூ.1.27 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. பாகிஸ்தான் உடனான மோதல் தொடங்குவதற்கு முன்பே ஏற்கனவே இதில் 90,000 கோடி எட்டப்பட்டு விட்டது.

தமிழ்நாடு காரிடர்

இது இல்லாமல், 2024-25ஆம் ஆண்டு ரூ.2.09 லட்சம் கோடி மதிப்புள்ள 193 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 92 சதவிகித ஒப்பந்தங்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்கள், இந்துஸ்தான் ஏரோநேட்டிக் லிமிடெட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ரூ.4.25 லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கு பாதுகாப்பு கொள்முதல் வாரியம் அனுமதி அளித்திருக்கிறது. இதில் 90 சதவிகித உபகரணங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. பெரும்பாலான புதிய பாதுகாப்பு உபகரணங்கள் திட்டங்கள் என்பது உபி காரிடர், தமிழ்நாடு காரிடரில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் டாடா நிறுவனங்கள் குஜராத்தில் உள்ள வதோதராவில் தயாரிக்கின்றன.

முப்படைகளில் உள்ள ஏற்கனவே உள்ள கருவிகள், முறைகளை நவீன மயமாக்க மேலும் அதிக தொகை செலவிட வேண்டிய தேவை இருக்கும் நிலையில் இது இன்னும் கூட ஒரு சிறிய தொகைதான். தொழில்நுட்ப முன்னேற்றங்களை மனதில் கொண்ட புதிய முதலீட்டு செலவினங்கள் சேர்க்கப்படவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்ப முன்னேற்றங்கள், புவிசார் அரசியல் சூழல்கள் மாறி வருவதைக் கருத்தில் கொண்டு நமது ராணுவப்படைகளின் அனைத்து கட்டமைப்பு மற்றும் அனைத்து அம்சங்களைக் கொண்ட கருவிகளை நவீனப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது.

2032ஆம் ஆண்டு இலக்கு

உதாரணத்துக்கு, இந்தியாவின் படைகளை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து விமானங்கள் சோவியத்தின் பழைய மாடல்களை சார்ந்தே இருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை தற்போதைய யுகத்துக்கு ஏற்றவாறு மிகவும் திறன் கொண்டவை அல்ல. அதே போல முன்கூட்டியே எச்சரிக்கை செய்யக் கூடிய நவீன உபகரணங்கள் தேவை. மலிவான ட்ரோன் தாக்குதல்களை செலவு குறைந்த முறையில் எதிர்கொள்வதற்கான வழிகள் காலத்தின் தேவை. மேலும், மாறக்கூடிய சூழலில், விநியோக தரப்பில் பிரச்னை ஏதும் இல்லாமல் இருக்க தொடர்ச்சியாக இருப்பு இருப்பதை நிர்வகிக்க வேண்டும்.

இந்திய கப்பற் படை மட்டும் 400 வகையான தடவாளங்கள் உள்ளிட்ட கருவிகளை இருப்பு வைத்திருக்கும் நிலையில் இது ஒரு பெரிய சவாலான பணியாகும். ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தொழிலக கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்துடன், உள்நாட்டில் தயாரிப்பது என்ற நோக்கத்துடன் தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்கும் வகையிலான நடவடிக்கைகள் கடந்த இரண்டு தசாப்தங்களாக படிப்படியாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதையும் படிங்க: பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் ஐரோப்பா- சர்வதேச பசுமை கூட்டாண்மையை புதிதாக கட்டமைக்குமா இந்தியா?

ஏற்கனவே 2500 இறக்குமதி வகைகள் உள்நாட்டு தயாரிப்பாக ஆக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது 310க்கும் மேற்பட்ட வகைகள் உடனடியாக உள்நாட்டு தயாரிப்பாக மாற்றுவதில் கவனம் செலுத்தப்படுகிறது. 36,000 வகைகள் உள்ளடக்கிய உள்நாட்டில் தயாரிக்கப்படும் பட்டியல், தனியார் துறை வழங்கக் கூடியவற்றை உள்ளடக்கிய முழு பட்டியலை கொண்டுள்ளது. இந்தியா முழு அளவிலான உள்நாட்டு தயாரிப்பு என்ற இலக்கை 2032ஆம் ஆண்டு அடையும். இந்த நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பது மட்டுமின்றி, வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் தொடர்ச்சியாக பெரும் எண்ணிக்கையில் பொருளாதார காரணிகளைக் கொண்டிருக்கும்.

மே 9 ஆம் தேதியன்று மத்திய மாஸ்கோவின் செஞ் சதுக்கத்தில் நடந்த வெற்றி நாள் ராணுவ அணிவகுப்பின் போது, ​​எஸ்-400 ட்ரையம்ஃப் ரக ரஷ்ய ஏவுகணை இடம் பெற்றது
மே 9 ஆம் தேதியன்று மத்திய மாஸ்கோவின் செஞ் சதுக்கத்தில் நடந்த வெற்றி நாள் ராணுவ அணிவகுப்பின் போது, ​​எஸ்-400 ட்ரையம்ஃப் ரக ரஷ்ய ஏவுகணை இடம் பெற்றது (AFP)

இந்தியாவில் பாதுகாப்புத்துறையில் பொருளாதார பங்களிப்பு என்பது அதிகரிப்பது என்பதில் சிறிய சந்தேகம் உள்ளது. இந்திய பொருளாதாரத்துடன் ஒப்பிடும் போது, இது இன்னும் ஒரு சிறிய அம்சமாகவே இருக்கிது. இதர பெரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் கூட சிறிய பங்களிப்பைத்தான் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் பாதுகாப்பு துறை உற்பத்தி மற்றும் சேவை துறை அல்லது ராணுவப்படைகள் தவிர்த்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறைகள் பங்களிப்பு அந்நாட்டின் பொருளாதாரத்தில் 4 சதவிகிதம் ஆகும். அதன் கட்டமைப்பானது, 2 லட்சம் நிறுவனங்களையும், 22 லட்சம் வேலைவாய்ப்புகள் அலது வேலைவாய்ப்பில் 1.4 சதவிகிதத்தையும் கொண்டிருக்கிறது.

கண்காணிப்பு அவசியம்

முன்னே உள்ள பாதை என்பது மிகவும் சிக்கலுக்கு உரியதாக இருக்கிறது. முதலாவதாக ராணுவ-தொழிலக கட்டமைப்பை உருவாக்குதல் என்பது எளிதானதல்ல. இது தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும். மிகவும் முக்கியமாக ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக தொடர்ச்சியான பெரும் அளவிலான முதலீடுகள் தேவைப்படும். பெரும் அளவிலான லாபம் மற்றும் தொடர்ச்சியான ஒப்பந்தங்களை பெறும் நம்பிக்கையுடன் சில ஆரம்ப கட்ட முதலீடுகளைப் போட்டு பெரும் நிறுவனங்கள் செயல்படுவது என்பது தொடர்ந்து நிலத்திருக்க முடியாது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரும் திறனைக் கொண்டு சீனா விளங்குவதால் சர்வதேச புவிசார் அரசியல் காட்சியானது மாற்றத்துக்கு உரியதாக இருப்பதால், இதர நாடுகளுக்கும் இது தேவையாக இருக்கிறது. குறிப்பாக இந்தியாவானது, அதே இடத்தில் நிலைத்திருக்க வேகமாக செயல்பட வேண்டியிருக்கிறது.

முக்கிய நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு நிறுவனங்கள் தொடங்குதல், கூட்டாண்மை நிறுவனங்களாக செயல்படுதல் என்ற பொருளாதார அம்சம் இன்னும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டி இருக்கிறது. இந்தியா இப்போது பாதுகாப்புத்துறை உற்பத்தி பிரிவுகளில் 74 சதவிகிதம் அளவுக்கு நேரடி அந்நிய முதலீடை அனுமதிக்கிறது. ரஷ்யாவில் ஒரு ராணுவ தொழிலக கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடனும், ரஷ்யா போன்ற நாடுகள், லாபம் தரக்கூடிய சாத்திய கூறுகள் காரணமாக கூட்டாண்மை கொண்ட அமைப்புகளை உருவாக்குவதில் தீவிரமாக இருப்பதில் ஆச்சர்யமில்லை. இந்தியாவில் அதிநவீன எஸ்-500 ரக ஏகவுகணைகளை இணைந்து உற்பத்தி செய்வது என்ற நடப்பு ஆண்டின் மார்ச் மாத ஒப்பந்தத்தை ரஷ்யா புதுப்பிப்பது என்பது முக்கியமான கருத்தாக இருக்கக்கூடும்.

பெரும்பாலும் ஒவ்வொரு பகுதியிலும் இந்தியா பின் தங்கியிருக்கும் நிலையில், உயர்ந்த தரத்தை நிர்வகிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பது மூன்றாவது முக்கிய அம்சமாகும். ஆகவே, கருவியின் உறுதியான தரம், தர கட்டுப்பாடு அளிக்கப்பட வேண்டியது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அச்சமின்றி அல்லது யார் ஒருவருக்கும் சாதகமாகவோ செயல்படாமல், தொடர்புடைய துறை தரக்கட்டுப்பாட்டை கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், எந்த ஒரு முதலீடும், எந்த ஒரு பலனையும் தருவதாக இருக்காது. பொருளாதார பலன்கள் தேவையானதாக, ஈர்க்கக் கூடியதாக இருக்கும்போது, பொருளாதாரத்தின் இதர பிரிவுகள் அவை எதிர்பார்கப்பட்ட அளவுக்கு வளரவில்லை எனில், பாதுகாப்பு உபகரணங்கள் அல்லது பாகங்கள் தவறான கைகளுக்கு சென்று விடாதவாறு, போதுமான வலுவான அமைப்பை அரசு உருவாக்க வேண்டியது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த அம்சமாகும்.

(பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவை எழுத்தாளரின் கருத்துகள். அவை ETV பாரத்தின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.