டீ கடை ஸ்டைல் வெங்காய போண்டா - சிம்பிளான 4 ஸ்டெப் இதுதான்!
டீ கடை சுவையில் வீட்டிலேயே ஈஸியா மற்றும் சுவையா வெங்காய போண்டா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

Published : July 12, 2025 at 10:56 AM IST
உளுந்த வடை, பருப்பு வடை, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி என பல வகை இருந்தாலும், வெங்காய போண்டாவிற்கு தனி மவுசு என்றால் மிகையில்லை. அதிலும், டீ கடையில் கிடைக்கும் வெங்காய போண்டாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால், இன்றோ நாம் ரசித்து ருசித்து சாப்பிட்ட வெங்காய போண்டா பல டீ கடைகளில் கிடைப்பது இல்லை. இதற்காக, வீட்டில் செய்து சாப்பிட்டாலும், டீ கடை டேஸ்டில் இருப்பது இல்லை என்கின்றனர் பலர். இனிமேல் அந்த கவலை வேண்டாம். ஒரு முறை கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றி வீட்டில் வெங்காய போண்டா செய்து பாருங்க. அசந்து போயிடுவீங்க!
வெங்காய போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
- பெரிய வெங்காயம் - 3
- மைதா மாவு - 1 டீஸ்பூன்
- அரிசி மாவு - 1 1 /2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 3
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பொரிப்பதற்கு எண்ணெய்
வெங்காய போண்டா செய்முறை:
- ஒரு அகல பாத்திரத்தில் நீட்டமாக நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்கு பிசைந்து மூடி போட்டு தனியாக வைக்கவும்.
- 15 நிமிடங்களுக்கு பின்னர், அந்த கலவையில் பெருங்காயத்தூள், மைதா மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்து வைக்கவும். இதற்கிடையில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
- இப்போது, உங்களுக்கு தேவையான அளவு அந்த கலவையை எடுத்து இறுக்கமாக உருட்டி உள்ளங்கையில் லேசாக தட்டவும். பின்னர் சூடான எண்ணெயில் போடவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி, எண்ணெயில் சலசலப்பு அடங்கியதும் எடுக்கவும். அவ்வளவு தான் டீ கடை ஸ்டைல் வெங்காய போண்டா தயார்.
- சூடான டீயுடன் மொறு மொறுப்பான வடை வைத்து சாப்பிட்டு பாருங்க. சுவை அட்டகாசமாக இருக்கும்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.


