தமிழ் புத்தாண்டைக் கொண்டாடவும் இந்நாள் உறுதியளிக்கும் புதிய தொடக்கங்களை வரவேற்க அனைவரது வீட்டிலும் இனிப்பு பலாகாரம் செய்து சுவைப்பது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு தமிழ் புத்தாண்டை வரவேற்க பாசி பருப்பு பாயசம் செய்து சுவைத்து மகிழுங்கள். சுவையான பாசி பருப்பு பாயசம் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.
பாசி பருப்பு பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
- பாசி பருப்பு - 1/2 கப்
- பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்
- ஜவ்வரிசி - 1/4 கப்
- தேங்காய் பால் - 1 கப்
- வெல்லம் - 2 கப்
- ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
- முந்திரி - 1 கைப்பிடி
- உலர் திராட்சை - 1 டீஸ்பூன்
- பொடியாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
- நெய் - தேவையான அளவு
பாசி பருப்பு பாயசம் செய்வது எப்படி?:
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து பாசி பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். பருப்பு கொஞ்சமாக வறுப்பட்டு வந்ததும் பச்சரிசியை சேர்த்து வறுக்கவும். பின்னர் அதனுடன், ஜவ்வரிசி சேர்த்து வறுத்ததும் தண்ணீர் சேர்த்து கழுவி கொள்ளவும்.
- இப்போது இதனை குக்கரில் சேர்த்து அதனுடன் 2 கப் தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து 4 விசில் வைத்து எடுங்கள். இப்போது அடுப்பை லோ பிளேமில் வைத்து வெல்லம் சேர்த்து கரையும் வரை கலந்து விடவும்.
- வெல்லம் முழுமையாக கரைந்ததும், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும். அடுத்ததாக, கட்டியான தேங்காய் பால் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கலந்து அடுப்பை அணைக்கவும்.
- இப்போது, தாளிப்பதற்கு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து, உலர் திராட்சை சேர்த்து உப்பி வந்ததும் தட்டிற்கு மாற்றி வைக்கவும். அடுத்ததாக, பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்த்து வதக்கி அனைத்தையும் பாயாசத்தில் சேர்த்து கலந்து விட்டால் சுவையான பருப்பு பாயாசம் தயார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.