ETV Bharat / lifestyle

கோடை காலமும் சரும பராமரிப்பும் - இந்த 6 வழிகளை பின்பற்றினால் போதும்! - SUMMER SKIN CARE

கோடை வெப்பத்தில் இருந்து உதடுகளை பாதுகாக்க SPF உள்ள லிப் பாம்களை பயன்படுத்தவும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : March 22, 2025 at 2:17 PM IST

2 Min Read

கோடை காலத்தில் சரும பராமரிப்பு மிகவும் சவாலானது. வெப்பம், தூசி மற்றும் வியர்வை அனைத்தும் சருமத்தின் ஆரோக்கியத்தை மோசமாக்கும். அதனால் தான், வெயில் காலம் வரும்போது பலருக்கும் அவர்களது சருமம் பற்றிய கவலை ஏற்படுகிறது. தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க செய்யக்கூடிய சில குறிப்புகளை காணலாம்.

  • சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்: சன்ஸ்கிரீன் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும். SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். SPF 50 ஏற்றது. அதிக வியர்வை ஏற்படும் சூழ்நிலைகளில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் மீண்டும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும். காதுகள், கழுத்து மற்றும் கைகளுக்கு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதை மறக்க வேண்டாம்.
  • நீரேற்றத்துடன் இருங்கள்: கோடையில் நீரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, உடலில் போதுமான நீரேற்றத்தை பராமரிக்க சிறப்பு கவனம் செலுத்துங்கள். இது சருமத்திலிருந்து ஈரப்பதம் இழப்பைத் தடுக்க உதவும். நிறைய தண்ணீர் குடிப்பதும், மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துவதும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும்.
  • நைட் க்ரீம்: இரவு தூங்க செல்வதற்கு முன் உங்கள் சருமத்தில் நைட் கிரீம் தடவவும். ஹைலூரோனிக் அமிலம், பெப்டைடுகள் மற்றும் ரெட்டினோல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நைட் க்ரீமைத் தேர்வு செய்யவும். மருத்துவ ஆலோசனையுடன் பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: உயிரிழப்பை ஏற்படுத்தும் 'ஹீட் ஸ்ட்ரோக்'; தற்காத்துக் கொள்ள என்ன வழி?
  • ஆரோக்கியமான உணவுமுறை: சரும ஆரோக்கியத்தை ஆதரிக்க அவசியமான வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்ட உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தை சரி செய்யவும், சருமத்தின் பளபளப்பைப் பராமரிக்கவும் உதவும். மேலும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • லிப் பாம்: சருமத்தை பாதுகாப்பது போல உதட்டை சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பது அவசியம். உதடுகளைப் பராமரிக்க SPF உள்ள லிப் பாமைப் பயன்படுத்தவும். இது சூரியக் கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கவும், உதடுகளில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவும். இதனால், உதடு வறட்சி அடைவது மற்றும் உதடு கருமையாவது தடுக்கப்படும்.
  • இதமான ஆடைகள் அவசியம்: உங்கள் உடலுக்கு ஏற்ற பருத்தி ஆடைகளை அணியுங்கள். அடர் நிற ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். வெயிலில் வெளியே செல்வதை முடிந்தவரையில் தவிருங்கள். முடியாத பட்சத்தில், தொப்பி, குடை ஆகியவற்றை உடன் எடுத்துச்செல்லுங்கள்.
இதையும் படிங்க: நெற்றியில் இந்த மாதிரி சுருக்கமா? எப்படி சரி பண்ணலாம்?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.