ETV Bharat / lifestyle

மருதாணி சிவப்பாக பிடிக்க 'இதை' சேர்த்து அரைங்க - சிவக்காத மருதாணியும் பளீச்சென சிவக்கும்! - HOW TO MAKE MARUTHANI DARKER

கையில் மருதாணி வைத்த பிறகு அவற்றை இயற்கையாக காய வைக்க வேண்டும். வேகமாக உலர வேண்டும் என ஹேர் ட்ரையர் போன்றவற்றை பயன்படுத்தினால் மருதாணி சிவப்பாக பிடிக்காது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : June 8, 2025 at 9:39 AM IST

2 Min Read

வீட்டில் விஷேசம் என்றால் போது, பெரியவர்கள் ஒரு புறம் தடல் புடலாக வேலைகளை பார்க்க, மறுபுறம் பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள என்ன செய்யலாம் என்பதை யோசிக்க தொடங்கி விடுவார்கள். அந்த வரிசையில் முதலில் வருவது கைகளில் மெஹந்தி அல்லது மருதாணி இடுவது தான். நாம் வைத்த மருதாணி நன்கு சிவப்பாக பிடித்து விட்டால் போதும், புத்துணர்ச்சியும் உற்சாகமும் தானகவே தொற்றிக்கொள்ளும்.

இப்படி ஆசை அசையாக நாம் வைக்கும் மருதாணி சில சமயங்களில் கொஞ்சம் கூட சிவக்கவே செய்யாது. அப்போது நமக்குள் ஏற்படும் கவலையை அனுபவித்தால் தான் புரியும். இப்படி மருதாணி மீது அதீக காதல் கொண்டு சிவப்பாக மருதாணி பிடிக்க வேண்டும் என்று அதிகம் மெனக்கெடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்கள். மருதாணி கைகளில் சிவப்பாக பிடிக்க என்ன செய்வது? மருதாணி இலைகளை பக்குவமாய் அரைப்பது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

  • சர்க்கரை மற்றும் எலுமிச்சை கலந்த சாற்றை மருதாணி மீது தடவும் போது, மருதாணி விரைவில் காயாமல் நீண்ட நேரத்திற்கு கைகளில் ஒட்டிக்கொண்டு இருப்பதால் கையில் மருதாணி சிவப்பாக பிடிக்கும்.
  • மருதாணி வைத்த பிறகு அதில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து மணி நேரம் தண்ணீரைத் தொடக்கூடாது.
  • 5 கிராம்புகளை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மருதாணி அரைக்கும் போது அல்லது ஹென்னா பவுடர் கலக்க பயன்படுத்தினால் நல்ல சிவப்பாக நிறம் இருக்கும்.
  • மருதாணியை கழுவ தண்ணீரை பயன்படுத்தாமல், முதலில் கடுகு எண்ணெய்யை பயன்படுத்தி மருதாணியை நீக்க வேண்டும். கடுகு எண்ணெயிற்கு பதில் யூகிலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
  • மருதாணி வைப்பதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். மாய்ஸ்சுரைசர், எண்ணெய் போன்ற கிரீம்களை தடவினால் மருதாணி சிவப்பாக பிடிக்காது.
  • மருதாணி வைத்த பிறகு அவற்றை இயற்கையாக காய வைக்க வேண்டும். வேகமாக உலர வேண்டும் என ஹேர் ட்ரையர் போன்றவற்றை பயன்படுத்தினால் மருதாணி சிவப்பாக பிடிக்காது.
  • மருதாணி உலர்ந்து விழுந்ததும், கைகளில் நீலகிரி எண்ணெய் தடவினால் சிவப்பாக பிடிக்கும்.
  • தோசைக்கல்லில் நான்கு கிராம்புகளை வைத்து சூடானதும், உள்ளங்கை மற்றும் விரல்களை அந்த ஆவி படும் படி காட்டினால் மருதாணி சிவப்பாக பிடிக்கும். மருதாணி நன்கு காய்ந்த பின்னரே இவ்வாறு செய்ய வேண்டும்.
  • சில சமயங்களில் மருதாணி அல்லது மெஹந்தி வைத்தவுடன் உடனடியாக நிறம் வராது. இரண்டு மூன்று நாட்கள் கழித்து நல்ல நிறம் வந்துவிடும். அதனால் மருதாணி வைப்பதாக இருந்தால் விஷேசத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பே மருதாணி வைப்பது சிறந்தது.

மருதாணி அரைப்பது எப்படி?: மருதாணி இலைகளை தண்டு இல்லாமல் நீக்கி தண்ணீரில் கழுவிய பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் பெரிய நெல்லிக்காய் அளவு புளி மற்றும் 5 முதல் 10 கிராம்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். இப்படி அரைத்த மருதாணியை கையில் வைத்தால் நல்ல சிவப்பாக பிடிக்கும்.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.