ETV Bharat / lifestyle

அடிக்கிற வெயிலுக்கு எலுமிச்சை பழத்தில் 3 வகை ஜூஸ்; மிக்ஸியில் ஈஸியா செய்யலாம்! - LEMON JUICE RECIPES

கோடை வெப்பத்தில் இருந்து உடலை பாதுகாக்க எலுமிச்சை பழத்தை வைத்து தயார் செய்யக்கூடிய இந்த மூன்று வகையான பானங்களை செய்து குடியுங்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : March 19, 2025 at 5:26 PM IST

2 Min Read

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தொடங்கி சருமத்தை மேம்படுத்துவது, செரிமானத்திற்கு உதவுவது வரை, தினமும் எலுமிச்சை பழ ஜூஸ் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, கோடை காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பில் தொடங்கி சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து எலுமிச்சை பழம் நம்மை பாதுகாக்கிறது. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க எலுமிச்சை பழ சாறு சிறந்த தேர்வாகும். அதன் படி, கோடையில் உடலை குளுகுளுவென வைக்க, எலுமிச்சை பழத்தை வைத்து செய்யக்கூடிய இந்த மூன்று வகையான ஜூஸ்களை வீட்டில் தயார் செய்து குடியுங்கள்.

  • எலுமிச்சை பழ ஜூஸ்:

தேவையான பொருட்கள்: 1 எலுமிச்சை, சர்க்கரை - 2 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, ஜஸ் கட்டி - 1, தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை: ஒரு மிக்ஸி ஜாரில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும். அதோடு, சர்க்கரை, உப்பு, ஐஸ் கட்டி மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இப்போது, அதில், உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பருகலாம்.

  • புதினா லெமன் ஜூஸ்:

தேவையான பொருட்கள்: எலுமிச்சை - 1, சர்க்கரை - 2 டீஸ்பூன், புதினா இலை - 1 கைப்பிடி, ஐஸ் கட்டி - 1, சாட் மசாலா - 1/4 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன்.

செய்முறை: ஒரு மிக்ஸி ஜாரில், எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும். அதனுடன், சர்க்கரை, புதினா, ஐஸ் கட்டி, சாட் மசாலா மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். பின்னர், மீண்டும் அரை கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது, அதில் உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பருகலாம்.

  • சப்ஜா லெமன் ஜூஸ்:

தேவையான பொருட்கள்: எலுமிச்சை பழம் - 1 , சர்க்கரை - 2 டீஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை, ஊற வைத்த சப்ஜா விதைகள், ஐஸ் கட்டி மற்றும் தண்ணீர்.

செய்முறை: ஒரு மிக்ஸி ஜாரில் எலுமிச்சை பழ சாறு, சப்ஜா விதைகள்,உப்பு, சர்க்கரை, ஐஸ் கட்டி மற்றும் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்னர், உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பருகி மகிழுங்கள்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.