ETV Bharat / lifestyle

சப்பாத்தி சாஃப்டா உப்பி வரணுமா? இப்படி ஒரு முறை மாவு பிசைந்து பாருங்க!

சாஃப்டான சப்பாத்திக்கு மாவு எப்படி பிசைவது? எண்ணெய் பயன்படுத்தாமல் சப்பாத்தி மென்மையாக வர என்ன செய்வது என பார்க்கலாம் வாங்க.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : June 24, 2025 at 4:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

என்ன தான் தினசரி வீட்டில் சப்பாத்தி செய்தாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தான் வரும். நாமும் சப்பாத்தி சாஃப்டாக வருவதற்கு கோதுமை மாவில் பால், எண்ணெய், வாழைப்பழம் என பலவற்றை சேர்த்து செய்தாலும் சில நேரங்களில் சப்பாத்தி முறுக்கு போன்று மொறு மொறுப்பாக இருக்கும், இல்லையென்றால் மென்று சாப்பிடுவதற்கு கடினமாக இருக்கும். ஒரு முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றி சப்பாத்தி செய்து பாருங்க. இரண்டு நாள் ஆனாலும் சப்பாத்தி சாஃப்டாக இருக்கும்.

சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள்:

  • கோதுமை மாவு - 3 கப்
  • தண்ணீர் - 2 கப்
  • உப்பு - 1 டீஸ்பூன்

சாஃப்டான சப்பாத்தி செய்வது எப்படி?

  • அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். தண்ணீர் சூடானதும் கோதுமை மாவு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  • இப்போது கரண்டி பயன்படுத்தி கோதுமை மாவை நன்கு கலந்து விடவும். மாவு புட்டு பதத்திற்கு வந்ததும் தட்டு போட்டு மூடி ஆற வைக்கவும்.
  • 10 நிமிடங்களுக்கு பின் மாவு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போது, மாவை ஒன்று சேர திரட்டவும். பின்னர், மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  • அடுத்ததாக சப்பாத்தி தேய்க்கும் கல்லில் கோதுமை மாவை தூவி, உருட்டி வைத்த உருண்டையை தேய்க்கவும்.
  • பின்னர் அடுப்பில் தோசைக் கல்லை வைத்து நன்கு சூடானதும், அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து தேய்த்து வைத்த மாவை சேர்த்து ஒரு புறம் வெந்ததும், மறு புறம் திருப்பி போட்டு எடுத்தால் சாஃப்டான சப்பாத்தி தயார்.

டிப்ஸ்:

  • தண்ணீருக்கு எந்த கிளாஸ் அல்லது கப் பயன்படுத்தப்பட்டதோ அதே கிளாஸ் அல்லது கப்பில் தான் கோதுமை மாவு அளவு வைக்க வேண்டும்.
  • பிசைந்து வைத்த மாவை இரண்டு நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
  • ஹாட் பாக்சில் காட்டன் துணி வைத்து அதன் மீது சப்பாத்தி வைத்தால் இரண்டு நாட்கள் ஆனாலும் சப்பாத்தி சாஃப்டாக இருக்கும்.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.