தட்கல் டிக்கெட் புக்கிங்கில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஆதார் அடிப்படையிலான பரிசீலனை செய்யப்படும் என்றும் இந்த நடைமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கடைசி நிமிடங்களில் ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர்கள் தட்கல் டிக்கெட் மூலம் பயணம் செய்யலாம். ரயில் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு தட்கல் தொடங்கும். AC கிளாஸ் டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கும் AC அல்லாத பிற கிளாஸ் டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கு தொடங்கும் என்பதால், சரியான நேரத்தில் முன்பதிவு செய்தால் தான், டிக்கெட் கிடைக்கும். இப்படியிருக்க, தட்கல் டிக்கெட் ஃபுக் செய்வது எப்படி? எப்போது செய்ய வேண்டும் போன்ற விவரங்களை பார்க்கலாம்.
Bharatiya Railways will soon start using e-Aadhaar authentication to book Tatkal tickets.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 4, 2025
This will help genuine users get confirmed tickets during need.
தட்கல் டிக்கெட் ஃபுக் செய்வது எப்படி?:
- முதலில் உங்கள் மொபைல் அல்லது லேப் டாப்பில் IRCTC செயலி அல்லது அதிகாரப்பூர்வ இணையத்தளம் மூலம் உங்கள் ஐடியை லாக் இன் (Log in) செய்யவும். தட்கல் முன்பதிவு தொடங்குவதற்கு குறைந்தது 10 முதல் 15 நிமிடங்களுக்கு முன் லாக் இன் செய்வது கடைசி நிமிடத்தில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உதவும்.
- உங்கள் பயணத் தேதியுடன் நீங்கள் புறப்படும் மற்றும் சேருமிடத்தை பதிவிடவும். பின்பு தட்கல் ( Tatkal) ஆப்சனை தேர்வு செய்யவும். ரயில் விருப்பங்களை பார்த்து நீங்கள் விரும்பும் வகுப்பில் தட்கல் இருக்கைகள் உள்ள ஒன்றை தேர்ந்தெடுக்கவும். அடுத்ததாக Book Now ஆப்ஷனை கிளிக் செய்து, பயணம் செய்பவர்களின் பெயர், வயது, பாலினம் மற்றும் ஆதார் அடையாள அட்டை போன்ற தகவல்களை நிரப்ப வேண்டும்.
- விவரங்களை சரியாக பதிவிட்ட பின்னர், கட்டணப் பக்கத்திற்குச் செல்லவும். கட்டணத்தை முடிக்க ஐந்து நிமிடங்கள் கொடுக்கப்படும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு UPI அல்லது நெட் பேங்கிங் போன்ற ஆப்ஷன்களில் உங்களுக்கு விருப்பமான கட்டன முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
டிப்ஸ்:
- தட்கல் டிக்கெட்டுகள் ஒரு நாள் முன்னதாகவே முன்பதிவு செய்ய வேண்டும். AC கிளாஸ் டிக்கெட்டுகள் காலை 10 மணிக்கும் AC அல்லாத பிற கிளாஸ் டிக்கெட்டுகள் காலை 11 மணிக்கு கிடைக்கும்.
- பயணிகளின் விவரங்களை முன்கூட்டியே வைத்திருப்பது நேரத்தை மிச்சப்படுத்தும்.
- தட்கல் முன்பதிவு செய்வதில் பலரும் செய்யக்கூடிய தவறு என்னவென்றால் கேப்ட்சா குறியீட்டை தவறாக டைப் செய்வது. இது அனைத்து செயல் முறையையும் மீண்டும் செய்ய வேண்டி இருக்கலாம்.
- கட்டணம் செலுத்துவதற்கு ஏடிஎம் கார்டு பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது இண்டர்நெட் பேக்கிங் மற்றும் UPI பரிவர்த்தனைகள் நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.
- தட்கல் டிக்கெட் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டலோ இந்திய ரயில்வே விதிகளின்படி பகுதியளவு பணத்தை திரும்ப பெறலாம்.
புதிய நடைமுறையால் ஏற்படும் மாற்றம்? : ஆதார் வெரிபிகேஷன் செய்யப்பட்ட லாக்-இன் வைத்திருப்பவர்கள் மட்டுமே தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்ய முடியும். மேலும், ஆதார் மூலம் வரும் OTP வைத்து டிக்கெட் புக் செய்ய முடியும்.
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.