ETV Bharat / lifestyle

முடி காடுபோல வளர உதவும் ஹேர் மாஸ்க் - இந்த 3 பொருட்கள் இருந்தால் போதும்! - EFFECTIVE HAIR MASK FOR HAIR GROWTH

கறிவேப்பிலை, அரிசி மாவு மற்றும் வெந்தயம் சேர்த்து தயார் செய்த ஹேர் மாஸ்க் முடியின் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்வதை தடுக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : April 29, 2025 at 5:06 PM IST

2 Min Read

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் முடி சார்ந்த பிரச்சனையும் ஒன்று. முடி உதிர்வு, முடி வறட்சி, நுனி முடி பிளவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. இதற்காக, கடையில் முடி பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனினும், தலைமுடி ஆரோக்கியத்திற்கு இயற்கையான வைத்தியங்களை கையாள்வது நல்லது. அந்த வகையில், வீட்டில் உள்ள 3 பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ஹேர் மாஸ்க் முடி உதிர்வு பிரச்சனையை நீக்க உதவுகிறது. அதை எப்படி செய்வது மற்றும் எப்படி அப்ளை செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • அரிசி மாவு - 2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • ஊறவைத்த வெந்தயம் - 3 டீஸ்பூன்

ஹேர் மாஸ்க் செய்வது எப்படி?

  • அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலக்கவும். இப்போது அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். மிதமான சூட்டில் கைவிடாமல் கிளறி விட வேண்டும். மாவு கட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
  • இதற்கிடையில் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயம், கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை ஆறவைத்த அரிசி மாவில் சேர்த்து நன்கு கலந்தால் ஹேர் மாஸ்க் தயார்.

அப்ளை செய்வது எப்படி?: முடியை சிக்கு இல்லாமல் சீவி இரண்டு பகுதியாக பிரிக்கவும். ஹேர் மாஸ்கை முதலில் உச்சந்தலையில் தேய்த்த பின்னர் முடி முழுவதும் தேய்க்கவும். முடியின் மேல் முதல் நுனி வரை அப்ளை செய்து 20 நிமிடங்களுக்கு பின்னர் முடியை அலசவும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை என மூன்று மாதங்களுக்கு பயன்படுத்தி வர முடி வளர்ச்சியில் மாற்றம் தெரியும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat)

நன்மைகள் என்னென்ன?

  • அரிசி மாவில் உள்ள ஸ்டார்ச் முடி வளர்ச்சிக்கும் முடி பளபளப்பாக இருப்பதற்கும் உதவும். அதுமட்டுமல்லாமல், நுனி முடியில் ஏற்படும் பிளவுகளை தடுக்கிறது.
  • வெந்தயத்தில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இது முடியின் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்தலை தவிர்க்கும். முக்கியமாக, பொடுகு தொல்லை இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.