ETV Bharat / international

போப் பிரான்சிஸ் மறைவு: புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார்? வியூப்பூட்டும் நடைமுறைகள்! - HOW NEW POP ELECTED

புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டவுடன், வாக்களிக்க தகுதியான அனைத்து கார்டினல்களும் வெளியுலக தொடர்பை முற்றிலும் துண்டித்துக்கொள்வார்கள்.

போப் பிரான்சிஸ் (கோப்புப் படம்)
போப் பிரான்சிஸ் (கோப்புப் படம்) (AP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 21, 2025 at 8:39 PM IST

2 Min Read

வாடிகன்: கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து, புதிய போப் எப்படி தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக நீண்டநாட்களாக சிகிச்சையில் இருந்து வந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் இன்று இயற்கை எய்தினார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு 266-வது போப் ஆண்டவராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், போப் பிரான்சிஸ் மறைவையொட்டி புதிய போப் ஆண்டவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார், அதற்கான தகுதிகள் என்னென்ன? என்பது குறித்து இங்கு காணலாம்.

புதிய போப்பை யார் தேர்ந்தெடுக்க முடியும்?

80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி புதிய போப் தேர்வுக்கான ரகசிய நடைமுறைகளை தொடங்குவார்கள். வாக்களிக்களிக்க தகுதியான கார்டினல்களின் எண்ணிக்கை இதுவரை 120 ஆக இருந்த நிலையில், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட விதிகளின்படி இந்த எண்ணிக்கை 136 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகள் போப் இறந்த 15-20 நாள்களில் இருந்து தொடங்கும். இந்த தேர்வு மிகவும் ரகசியமாக முறையில் நடத்தப்படும். வாடிகனில் உள்ள தேவாலயத்தில் வைத்து புதிய போப்புக்கான தேர்வு நடைமுறைகள் தொடங்கப்படும்.

போப் பிரான்சிஸ் (கோப்புப் படம்)
போப் பிரான்சிஸ் (கோப்புப் படம்) (AP)

போப் தேர்வில் உள்ள நடைமுறைகள்:

புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டவுடன், வாக்களிக்க தகுதியான அனைத்து கார்டினல்களும் வெளியுலக தொடர்பை முற்றிலும் துண்டித்துக்கொள்வார்கள். தொலைப்பேசி உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டில் இருந்தும் விலகி இருக்கும் கார்டினல்கள், புதிய போப் தேர்வாகும் வரை தங்களிடம் வேறு யாரும் தொடர்பு கொள்ள முடியாத படியே இருப்பார்கள். போப் தேர்வு பற்றிய தகவல்கள் வேறு யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்ற காரணத்தால் பல தசாப்தங்களாக இந்த வழிமுறைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

புதிய போப்பை அறிவிக்கும் வழிமுறைகள்:

ரகசியமாக நடைபெறும் இந்த நடைமுறையில் புதிய போப்பாக தேர்வு செய்யப்படும் நபருக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் வரை தொடர்ந்து வாக்கெடுப்பு நடைபெறும். இதில் பெரும்பான்மை கிடைக்கப்பெற்று புதிய போப் தேர்வு செய்யப்பட்டால், புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் என்பதை சுவாரசியமான முறையில் அறிவிப்பார்கள்.

இதையும் படிங்க: ஆடம்பரத்தை விரும்பாத மாமனிதர்... யார் இந்த போப் பிரான்சிஸ்?

அதாவது, வாடிகனில் போப் தேர்வு நடைபெறும் தேவாலயத்தில் இருந்து வெள்ளைநிற புகையை வெளியிடுவார்கள். அவ்வாறு வெள்ளைநிற புகை வந்தால், போப் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம். மாறாக போப் தேர்வில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றால் கருப்பு நிற புகை வெளியிடப்படும்.

போப் தேர்வு செய்யப்பட்டவுடன் புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள சம்மதித்தவுடன் இதற்கான அறிவிப்பு செயிண்ட் பீட்டர் தேவாலயத்தில் வெளியாகும். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு புதிய போப் ஆசீர்வாதம் வழங்குவார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.