புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் குடோன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தலைநகர் டெல்லியில் உள்ள உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.
‘இதுகுறித்து இந்த தூதரகம் தமசு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியாவின் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்துக்கு (Kusum) உக்ரைனில் குடோன் உள்ளது. இந்த குடோன் மீது ரஷ்யா நேற்றிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யா இந்தியாவுடன் 'சிறப்பு நட்பு' என்று கூறிக்கொண்டாலும், வேண்டுமென்றே தற்போது இந்திய நிறுவனத்தை குறிவைத்து தாக்கியுள்ளது. இந்த மருந்து குடோனில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான மருந்துகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தாக்குதலில் அவை அழிக்கப்பட்டுள்ளன." என்று அந்த எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டது.
Today, a Russian missile struck the warehouse of Indian pharmaceutical company Kusum in Ukraine.
— UKR Embassy in India (@UkrembInd) April 12, 2025
While claiming “special friendship” with India, Moscow deliberately targets Indian businesses — destroying medicines meant for children and the elderly.#russiaIsATerroristState https://t.co/AW2JMKulst
இந்த தாக்குதல் குறித்து விரிவான தகவல் வெளிவராத நிலையில், உக்ரைனுக்கான இங்கிலாந்து தூதர் மார்ட்டின் ஹாரிஸ் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "ரஷ்ய நாட்டின் ட்ரோன்கள் கீவ்வில் உள்ள ஒரு பெரிய மருந்துக் கிடங்கை முற்றிலுமாக அழித்துவிட்டன, முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகளின் இருப்புக்கள் எரிந்துவிட்டன. உக்ரேனிய பொதுமக்களுக்கு எதிரான ரஷ்யாவின் பயங்கரவாத செயல் தொடர்கிறது," என குறிப்பிட்டிருந்தார்.
ஏவுகணை தாக்குதலா? இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து குசும் ஹெல்த்கேர் நிறுவனம் வலைத்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாங்கள் உக்ரைன், மால்டோவா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், கென்யா, ஐவரி கோஸ்ட், பெனின், புர்கினா பாசோ, எத்தியோப்பியா, நைஜர், கேமரூன், மாலி மற்றும் தான்சானியா உள்ளிட்ட 29 நாடுகளில் குடோன்கள் வைத்துள்ளோம். ஆனால், தற்போது உக்ரைனில் உள்ள எங்களது குடோனில் நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு பல முயற்சிகளுக்கு பின் அரங்கேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது” எனக் குறிப்பிட்டிருந்தது.
ரஷியாவிடம் முழுவதுமாக போரை நிறுத்தும்படி அமெரிக்கா ரஷ்யாவிடம் வலியுறுத்தியபோது அதனை ரஷ்யா மறுத்து வெள்ளிக்கிழமையுடன் சரியாக ஒரு மாதமாகிறது. இந்த போக்கை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, "அமைதிக்கு ஒரே தடையாக இருப்பது ரஷ்யா” என குற்றம்சாட்டியுள்ளார்.
This morning Russian drones completely destroyed a major pharmaceuticals warehouse in Kyiv, incinerating stocks of medicines needed by the elderly and children. Russia’s campaign of terror against Ukrainian civilians continues. pic.twitter.com/jlgUMPOzcz
— Martin Harris (@MartinHarrisOBE) April 12, 2025
மேலும், "மார்ச் 11 முதல் ஏப்ரல் 11 வரை, ரஷ்யா உக்ரைன் மீது பல்வேறு வகையான தாக்குதல்களை நடத்தியுள்ளது. கிட்டத்தட்ட 70 ஏவுகணைகள், 2,200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 6,000க்கும் மேற்பட்ட வான்வழி குண்டுகளை வீசியுள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.