மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் உறவுகளைப் பலப்படுத்தும் நோக்கிலும் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைப் பேணும் வகையிலும் தூதரகங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டில் இந்திய தலைமை தூதரகம் கான்பெர்ராவில் உள்ளது. துணைத் தூரதரகங்கள் ஆஸ்திரேலியாவின் பிற பகுதிகளிலும் உள்ளன.
இந்நிலையில் மெல்போர்னில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் மீது மர்ம நபர்கள் நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்திய துணைத் தூதரகம் அமைந்துள்ள கட்டடத்தின் முன்பு உள்ள நுழைவுவாயிலில் வைக்கப்பட்டு இருந்த பெயர் பலகை அடித்து உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய காவல் துறையினரிடம் இந்தியத் தலைமை தூதரக உயர் அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 11) புகார் அளித்தனர்.
இது குறித்து இந்தியத் தூதரக அலுவலகத்தின் எக்ஸ் பதிவில், “மெல்போர்னில் உள்ள இந்தியத் துணைத் தூதரக வளாகத்தில் உள்ள பெயர் பலகையை அடையாளம் தெரியாதவர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியா அரசிடம் புகார் எழுப்பப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள இந்தியத் தூதரக மற்றும் தூதரக வளாகங்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலியா காவல்துறையினர் யாரையும் கைது செய்யவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய விக்டோரியா பகுதி காவல்துறையினர், “இந்த சம்பவம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையே மாலை முதல் அதிகாலை 1.00 மணிக்குள் நடந்திருக்க வேண்டும். மெல்போர்னில் உள்ள இந்தியத் துணைத் தூதரக வளாகத்தில் உள்ள பதாகை சுவரில் உடைக்கப்பட்டு, கிறுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும், ஆஸ்திரேலியா டுடே பத்திரிகை வெளியிட்ட செய்தியில், “இந்த சம்பவம் கடந்த ஆண்டுகளில் நடந்த சர்வதேச பதற்றம் நிலையை நினைவு கூர்கிறது. இந்த தாக்குதலை அவமதிப்பு சம்பவமாக பார்க்க வேண்டும். ஏற்கனவே, கடந்த ஆண்டுகளில் இது போன்று இந்தியத் தூதரக வளாகத்தின் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்வு நடந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிகழ்வு குறித்து செய்தி போர்டல் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஆஸ்திரேலியா வாழ் இந்தியர் ஒருவர் கூறுகையில், “வெறுப்பு அல்லது மதச்சார்பினால் தூண்டப்பட்ட செயல்களுக்கான தண்டனை சட்டத்தை விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலனின் அரசாங்கம் இந்த ஆண்டு இயற்றியது. இதனால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம்.
இதையும் படிங்க: மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உள்ள தொடர்பு - ராணாவிடம் கேள்வி எழுப்பும் என்ஐஏ! |
இந்த சம்பவம் ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்களை கவலை அடைய செய்துள்ளது. மெல்போர்ன் முழுவதும் உள்ள இந்து கோயில்கள் மற்றும் இந்திய அரசு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட இடங்களைக் குறி வைத்துத் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது” என அவர் கவலை தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.