ETV Bharat / international

"நைஜீரியாவில் வெள்ளம்" - உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரிப்பு; 100க்கும் மேற்பட்டோர் மாயம்! - RAIN DEATH NIGERIA

நைஜீரியாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாக நைஜர் மாநிலத்தின் செஞ்சிலுவை சங்கத் தலைவர் கிடியோன் அதாமு கூறியுள்ளார்.

பிரதிநிதித்துவ படம்
பிரதிநிதித்துவ படம் (AFP)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 1, 2025 at 11:01 PM IST

2 Min Read

அடாஹா: மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பருவ மழை பெய்து வருகிறது. நைஜா் மாகாணத்தில் வியாபாரிகள் ஒன்று கூடும் முக்கிய சந்தை நகரமான 'மோக்வா' வெள்ளத்தில் மூழ்கியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது. நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 10 கிலோமீட்டர் தொலைவில் உடல்கள் மீட்கப்பட்டதால் இறப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது.

இங்கு 250க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டது, 2 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன என்று நைஜர் மாநில அவசர மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் அவுடு ஹுசைனி தெரிவித்து உள்ளார். மேலும் சக்திவாய்ந்த நைஜர் ஆற்றில் உடல்கள் அடித்துச் செல்லப்படுவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் ஹுசைனி அச்சம் தெரிவித்துள்ளார்.

நைஜர் மாநிலத்தின் செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் கிடியோன் அதாமு கூறும் போது, ''நீர்வழியின் சதுப்பு நிலக் கரைகளுக்கு எதிர் பக்கத்தில் உள்ள ஜெப்பாவை நோக்கி தேடல் குழுக்கள் சென்று கொண்டிருக்கின்றன. புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை வரை பெய்த மழையால் மோக்வா பாதிக்கப்பட்டது. காயமடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காணவில்லை." என்று அதாமு கூறியுள்ளார்.

வழக்கமாக 6 மாதங்களுக்கு நீடிக்கும் நைஜீரியாவின் மழைக்காலம் இந்த ஆண்டு இப்போது தான் துவங்குகிறது. கனமழை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு காரணமாக வெள்ளம் பாய்ந்து ஆண்டுதோறும் பேரழிவை ஏற்படுத்தி மேற்கு ஆப்பிரிக்க நாடு முழுவதிலும் நூற்றுக்கணக்கான மக்களை கொல்கிறது.

காலநிலை மாற்றம் மிகவும் தீவிரமான வானிலை முறைகளுக்கு வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். தலைநகர் அபுஜாவில் இருந்து சாலை வழியாக சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்தில் வசிக்கும் மக்கள் இன்னும் உறவினர்களை தேடி வருகின்றனர்.

அரசு ஊழியர் முகமது டாங்கோ (29) தான் வளர்ந்த ஒரு வீட்டை சுட்டிக்காட்டி கூறும்போது, ''இந்த வீட்டில் குறைந்தது 15 பேரை நாங்கள் இழந்து விட்டோம். தற்போது சொத்து முழுமையாக இல்லாமல் போய்விட்டது. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்."என்றார்.

இது தொடர்பாக தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நைஜீரியாவில் போதிய வடிகால் வசதியின்மை, நீர்வழிகளில் வீடு கட்டுதல் மற்றும் வடிகால்வாய்கள், நீர்வழிகளில் கழிவுகளை கொட்டுதல் போன்றவற்றால் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கிறது.

நீர்வழிகளில் கட்டடங்கள் கட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் வடிகால் வாய்க்கால் மற்றும் நதிப் பாதைகளை தெளிவாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை சரியான நேரத்தில் இந்த துயர சம்பவம் நினைவூட்டுகிறது" என தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "வடகிழக்கு மாநிலங்களில் கனமழை" - வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு; ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிப்பு!

இந்நிலையில் அதிபர் போலா டினுபு கூறும்போது, ''கட்டிடம் இடிந்து விழுந்ததால் மக்கள் எங்கிருந்து பயணம் செய்தார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை. பேரிடர் மீட்புப் பணிகளுக்கு பாதுகாப்புப் படையினர் உதவி வருகிறது." என்று அதிபர் போலா டினுபு தெரிவித்துள்ளார்.

யாம் வியாபாரி சபுவர் பாலா (50) கூறும்போது, ''நான் என் உள்ளாடைகளை மட்டுமே அணிந்திருந்தேன். இப்போது கூட நான் அணிந்திருப்பது யாரோ எனக்கு கடனாக கொடுத்தது தான். என் செருப்புகளைக்கூட என்னால் காப்பாற்ற முடியவில்லை. அழிவு காரணமாக எனது வீடு எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை." என்று யாம் வியாபாரி சபுவர் பாலா கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.