ETV Bharat / international

போர் பதற்றத்திற்கு இடையே இஸ்ரேலியர்கள் மீது கத்திக்குத்து.. ஒருவர் உயிரிழப்பு.. மூவர் படுகாயம்! - stabbing attack

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 2:08 PM IST

stabbing attack in Israel: இஸ்ரேலின் டெல் அவிவ் புறநகர் பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit- Etv Bharat)

இஸ்ரேல்: இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபரில் ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் சிலர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேல் ராணுவத்தினர் 251 பேர் காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 39 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாலஸ்தீனத்தில் உள்ள அகதிகள் முகாம், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களையும் இஸ்ரேல் தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

ஹமாஸ் தலைவர்: இதற்கிடையில், ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசெஷ்கியானின் கடந்த ஜூலை 30ஆம் தேதி பதவி ஏற்றார். இவரது பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே பங்கேற்றார். இதற்காக ஈரான் தலைநகரம் தெஹ்ரானுக்கு அவர் சென்றிருந்தார். இந்நிலையில், தனது வீட்டில் தங்கி இருந்த இஸ்மாயில் ஹனியேவும், அவரது பாதுகாவலரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பல்வேறு நாடுகளும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதற்கு பழிதீர்க்கப்படும் என ஈரான் பகிரங்கமாக எச்சரித்தது. மேலும், இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தவும் ஈரான் அரசு உத்தரவிட்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் சூழல் நிலவி வருகிறது.

கொலை: இந்நிலையில், டெல் அவிவ் புறநகர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 70 வயதுடைய பெண் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் என்றும், அவர் மேற்குக் கரையில் வசிப்பவர் என்றும் கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 70 மற்றும் 68 வயதுடைய 2 முதியவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், 26 வயதுடைய நபர் ஒருவர் காயம் அடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மேட்டூர் தண்ணீர் திறப்பால் சிக்கியுள்ள நாய்கள்.. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.