ஹைதராபாத்: இப்போதெல்லாம் அலர்ஜியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பருவத்தைப் பொருட்படுத்தாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயெதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால், இடைவிடாத தும்மல், மூக்கு ஒழுகுதல்,இருமல், கண்களில் நீர் வடிதல் என நாட்களை நிம்மதியாக கடக்க முடிவதில்லை என பலரும் வேதனையடைகின்றனர்.
அதிலும், இந்த ஒவ்வாமை மழைக்காலத்தில் அதிக தொல்லை தரக்கூடியது. இதை சரி செய்ய பல முயற்சிகளை எடுத்தாலும் தோல்வியில் தான் முடிகின்றன. ஆனால், இதற்கு ஆயுர்வேதத்தில் நல்ல தீர்வு இருக்கிறது என்கிறார் பிரபல ஆயுர்வேத நிபுணர் காயத்ரி தேவி. வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அலர்ஜியை குணப்படுத்தும் மருந்தை தயாரிப்பது எப்படி? இந்த தொகுப்பில் காண்போம்..
தேவையான பொருட்கள்:
- மஞ்சள் தூள் - 30 கிராம்
- சோம்பு தூள் - 60 கிராம்
- மள்ளித்துள்ள - 60 கிராம்
- சுக்குத்தூள் - 10 கிராம்
- மிளகு தூள் - 10 கிராம்
செய்முறை:
- முதலில் இரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், சோம்பு தூள் மற்றும் மல்லித்தூளை சேர்த்துக்கொள்ளாவும்
- அதன் பிறகு, சுக்குத்தூளை மேலே உள்ள பொடிகளுடன் சேர்க்கவும்
- அதன் பிறகு மிளகுத் தூளை சேர்த்து நன்கு கலக்கினால் மருந்து தயார்
பயன்படுத்துவது எப்படி?:
- தினசரி சமையலில், மசாலாப் பொருளாகப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஆயுர்வேத நிபுணர் காயத்ரி. எண்ணெய் அல்லது நெய் சேர்த்து காய்கறிகளை போட்ட பின்னர், நாம் தயார் செய்து வைத்துள்ள பொடியையும் சிறிதளவு சேர்த்து சாப்பிட்டு உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
- இல்லையென்றால், சாதத்தில் சிறிதளவு இந்த பொடியை சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: இரத்த சோகையா? தினமும் இதை இரண்டு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்..ஆயுர்வேத வைத்தியம் உங்களுக்காக! |
மஞ்சள்: காலங்காலமாக மஞ்சளை ஆன்டிபயாடிக்காக நாம் பயன்படுத்தி வருகிறோம். காரணம், உடல் ஒவ்வாமையை அகற்ற இது சிறந்த மருந்தாக உள்ளது. தினமும், இரவு தூங்க செல்வதற்கு முன் சூடான பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்து குடித்து வந்தால் அலர்ஜி குறையும்.
சோம்பு: நம் வீடுகளில் எளிதாக கிடைக்கும் பொருட்களில் சோம்புவும் ஒன்று. இதுவும் உடல் ஒவ்வாமைய குறைக்க பயன்படும் நல்ல மருந்து என்கிறார்.
கொத்தமல்லி: நமது அன்றாட உணவில் முக்கிய பங்காக இருக்கும் மல்லி, அலர்ஜியை குறைக்க பெரும் உதவியாக இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
- ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்