ETV Bharat / health

உயர் ரத்த அழுத்த பிரச்னைக்கு இனி மருந்து மாத்திரை வேண்டாம்: இந்த 16 வழிகள் போதும்! - NATURAL WAYS TO CONTROL HIGH BP

சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால் உணவில் தேவைக்கு அதிகமான உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : April 4, 2025 at 11:15 AM IST

2 Min Read

இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில், குடும்ப நிர்வாகம், குழந்தைகள் படிப்பு, நேர நிர்வாகம், பண பிரச்சனை, அலுவலகத்தில் அதிகாரியின் கண்டிப்பு என பல பிரச்னைகள் வரிசை கட்டி நிற்கின்றன. பெரும்பாலான இந்திய நடுத்தர வர்க்கத்தினர், அன்றாட வாழ்க்கையில் இந்த பிரச்னைகளை கடந்து செல்கின்றனர். இதனால், மனஅழுத்தத்தோடு, உயர் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. இந்த உயர் ரத்த அழுத்த பிரச்சனை, இதய கோளாறுகளுக்க்கு வழிவகுக்கின்றன.

தப்ப முடியாது என்றாலும், நமது அன்றாட வாழ்க்கையில் சில மாற்றங்களை கொண்டு வந்தாலே மருந்து மாத்திரைகளின் உதவி இல்லாமல் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். அந்த வகையில், இயற்கையாக ரத்த அழுத்தத்தை குறைக்க, நாம் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க என்ன செய்வது?:

  1. நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது முக்கியம். வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடைப்பயிற்சியும், 75 நிமிடங்கள் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.
  2. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். காய்கறிகள், பழங்கள், கீரைகள், பால் சார்ந்த பொருட்கள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
  3. இயற்கை சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். மீன் எண்ணெய், செம்பருத்தி தேநீர், மோர் மற்றும் பூண்டு போன்றவற்றை சாப்பிட வேண்டும்.
  4. மெக்னீசியம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். காய்கறிகள், பால் பொருட்கள், கோழி இறைச்சி மற்றும் முழு தானியங்களை சாப்பிட வேண்டும்.
  5. கால்சியம் நிறைந்த உணவை உண்ண வேண்டும்.
  6. சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்பதால் உணவில் தேவைக்கு அதிகமான உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும்.
  7. குடிப்பழக்கத்தை குறைக்க வேண்டும். முடிந்த வரையில், மதுவை தவிர்ப்பது நல்லது
  8. காஃபின் நுகர்வு குறைக்கப்பட வேண்டும்
  9. டார்க் சாக்லேட் மற்றும் கோகோ சாப்பிடலாம்
  10. எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
  11. புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும்.
  12. செயற்கை இனிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளைக் குறைக்க வேண்டும்.
  13. பாலிபினால்கள் அதிகம் உள்ள பெர்ரிகளை சாப்பிடுங்கள்
  14. தியானம் போன்றவற்றை செய்ய முயற்சிக்கலாம்
  15. ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் நிம்மதியாக தூங்குவது அவசியம்
  16. மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருங்கள். அதற்கு, மனதிற்கு பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.

இரத்த அழுத்தம் எவ்வளவு இருக்க வேண்டும்?

  • சாதாரண ரத்த அழுத்தம் - 120/80 மிமீ Hg க்கும் குறைவாக இருப்பது
  • உயர் ரத்த அழுத்தம் - 120/80 முதல் 129/79 mmHg வரை
  • உயர் ரத்த அழுத்தம் நிலை 1 - 130/80 முதல் 139/89 மிமீ Hg
  • உயர் ரத்த அழுத்தம் நிலை 2 - 140/90 மிமீ Hg அல்லது அதற்கு மேல் இருப்பது
  • தீவிர நிலை - ரத்த அழுத்தம் 180/120 மிமீ Hg க்கு மேல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

இதையும் படிங்க:

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.