ETV Bharat / health

வைட்டமின் D அதிகமுள்ள டாப் 5 உணவுகள் இதோ!..மழைக்காலத்தில் மறக்காமல் சாப்பிடுங்கள்! - Vitamin D rich Foods

Vitamin D rich Foods in tamil: வைட்டமின் டி நமக்கு சூரிய ஒளியின் வழியாக அதிகமாக கிடைக்கிறது என்றாலும் மழைகாலங்களில் அல்லது சூரிய ஒளி கிடைக்காத சமயங்களில் உடலுக்கு தேவையான வைட்டமின் டி பெறுவது எப்படி என்று இதில் பார்ப்போம்

author img

By ETV Bharat Health Team

Published : Sep 10, 2024, 11:27 AM IST

Updated : Sep 10, 2024, 11:34 AM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty images)

ஹைதராபாத்: வைட்டமின் டி-யின் சிறந்த ஆதாரம் என்றால் காலையில் வரும் சூரிய ஒளி தான். ஆனால், வாழ்க்கை முறை மாற்றத்தால் காலையில் வரும் சூரிய ஒளியை பார்க்க கூட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அத்தி பூத்தாற் போல, என்றாவது ஒரு நாள் காலையில் எழுந்தால், "சூரியனை பார்த்து எத்தனை நாளாச்சு" என கண்டிப்பாக சொல்லிவிடுவோம்.

ஆனால், உண்மையை சொல்ல போனால், வைட்டமின் டி குறைபாட்டால் சிறிய எலும்பு பிரச்சனை முதல் பெரும் பிரச்சனைகள் என எக்கச்சக்கமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதிலும், மழைக்காலங்களில் சொல்லவே தேவையில்லை. இப்படியான சந்தர்பங்களில் இயற்கையாகவே வைட்டமின் டி எப்படி பெறலாம்? என்பதை தெரிந்து கொள்வோம்.

மீன்: தேசிய சுகாதார நிறுவன அறிக்கையின் படி, கொழுப்பு நிறைந்த சால்மன், சூரை, கானாங்கெளுத்தி, மத்தி ஆகியவற்றில் கால்சியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களுடன் வைட்டமின் டி நிறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மழைக்காலங்களில் மீன் வகைகளை உட்கொள்வதால் வைட்டமின் டி குறைபாட்டை தடுக்கலாம்.

காளான்கள்: வெயிலில் வளரும் சில வகை காளான்களில் அதிகளவு வைட்டமின் டி இருப்பதாக பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லட்சுமி கிலாரு கூறுகிறார். மேலும், இதில், கால்சியம், பி1,பி2,பி5 மற்றும் தாமிரம் (Copper) இருப்பதால், இவற்றை மழைக்காலத்தில் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்.

முட்டை: வைட்டமின் டி பெற முட்டை ஒரு சிறந்த வழியாகும். இதில், வைட்டமின் டி மற்றும் புரதம் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், மஞ்சள் கருவில் கொழுப்பு உள்ளடக்கம் அதிகமாக உள்ளதால், தினசரி ஒரு முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது.

பால் மற்றும் தயிர்: உடலுக்கு வைட்டமின் டி வழங்க பால் மற்றும் தயிர் உதவியாக இருக்கிறது. மேலும், கால்சியம் மற்றும் புரதங்களும் நிறைந்துள்ளன. எனவே, மழைக்காலங்களில் இவற்றை உட்கொள்வதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சூரியகாந்தி விதைகள்: வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளில் இவையும் ஒன்று. சூரியகாந்தி விதைகளை தினமும் ஒரு டீஸ்பூன் அல்லது சாலட் மற்றும் தயில் சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வைட்டமின் டி பற்றாக்குறையை நீக்குவதாக கூறப்படுகிறது. இது தவிர, காட் லிவர் ஆயில் (Cod liver oil) தானியங்கள், சீஸ், சோயாபீன்ஸ், ஓட்ஸ் ஆகியவற்றிலும் வைட்டமின் டி நிறைந்துள்ளதால், தினசரி உணவில் எதாவது ஒரு வகையில் வைட்டமின் டி-ஐ எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் லட்சுமி.

வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாமா?: பலருக்கு தினசரி உணவில் இருந்து போதுமான வைட்டமின் டி கிடைப்பதில்லை. இது போன்ற சூழ்நிலைகளில் வைட்டமின் டி சப்ளிமெண்டஸ் ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இருப்பினும், மருத்துவர் ஆலோசனையின்றி வைட்டமின் டி சப்பிளிமெண்ட் உட்கொள்ள கூடாது என்கிறார் மருத்துவர்.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Sep 10, 2024, 11:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.