ETV Bharat / health

புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் டைப் 2 நீரிழிவு நோய்: ஆய்வில் தகவல்! - TYPE 2 DIABETIC AND CANCER

டைப் 2 நீரிழிவு நோய் உள்ள ஆண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் நான்கு மடங்கு அதிகமாகவும், பெண்களுக்கு ஐந்து மடங்கு அதிகமாகவும் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty images)
author img

By ETV Bharat Health Team

Published : April 5, 2025 at 1:13 PM IST

2 Min Read

நாடு முழுவதும் பரவலாக காணப்படும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோயும் ஒன்று. நீரிழிவு நோய் முன்பு வயதானவர்கள் இடையே அதிகம் காணப்பட்ட நிலையில், இன்று வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கிறது. உடல்நலப் பிரச்சினைகளுக்கு நீரிழிவு நோய் முக்கிய காரணியாக இருக்கிறது. குறிப்பாக, டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடல் பருமன் தொடர்பான கல்லீரல் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மான்செஸ்டர் பல்கலைக்கழகம், தேசிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் (NIHR) மற்றும் மான்செஸ்டர் உயிரி மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தினர். 95,000 பேரின் சுகாதாரத் தரவுகளை பகுப்பாய்வு செய்த நிலையில், டைப் 2 நீரிழிவு நோய்க்கும் புற்றுநோய்க்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆண்களை விட பெண்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உடல் பருமன் தொடர்பான புற்றுநோயின் ஆபத்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு 48 சதவீதமாகவும், பெண்களுக்கு 24 சதவீதமாகவும் உள்ளது. ஆண்களில் குடல் புற்றுநோய்க்கான ஆபத்து 27% மற்றும் பெண்களில் 34% என்றும், கணைய புற்றுநோய்க்கான ஆபத்து ஆண்களில் 74% என்றும், பெண்களில் இரு மடங்கு அதிகமாகவும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டைப் 2 நீரிழிவு நோய் உள்ள ஆண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் நான்கு மடங்கு அதிகமாகவும், பெண்களுக்கு ஐந்து மடங்கு அதிகமாகவும் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தி கார்டியன் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. நீரிழிவு நோய் உடல் பருமன் தொடர்பான புற்றுநோய்களுடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். முந்தைய சில ஆய்வுகளின்படி, உடல் பருமன் 13 வகையான புற்றுநோய்களுக்கு வழிவகுப்பதாக கூறுகிறது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க என்ன செய்வது?: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், நீரிழிவு மற்றும் உடல் பருமனுடன் தொடர்புடைய புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது முக்கியம் . அதற்கு, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க: கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறதா? இந்த 10 அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதையாக இருங்கள்!

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும்: நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது முக்கியம். இது வீக்கம் மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதற்கு நன்மை பயக்கும். இது புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கவும் உதவும்.

ஆரோக்கியமான உணவுமுறை: உணவில் நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சேர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களைத் தவிர்க்கவும்.

உடற்பயிற்சி: நீரிழிவு நோயாளிகள் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். எனவே வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

இதையும் படிங்க: உயர் ரத்த அழுத்த பிரச்னைக்கு இனி மருந்து மாத்திரை வேண்டாம்: இந்த 16 வழிகள் போதும்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.