நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இதய ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் வாழ்க்கை முறை நோய்களாக மாறிவிட்டன. ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை இந்த நோய் அபாயத்தை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. WHO-ன் கூற்றுப்படி உலகளவில், 830 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறத்தில், உலகளவில் 220 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. பல நோய்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் இந்த இரண்டு பிரச்சனைகளையும், அன்றாட வாழ்வில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் தடுக்கலாம் என்கிறது ஆய்வு. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
நெல்லிக்காய்: நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த நெல்லிக்காய் சிறந்த தேர்வாகும். நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த ஆதாரமாக இருப்பதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் கொழுப்பைக் குறைக்கவும் உதவும் என 2019ம் ஆண்டு NCBI இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது.
அதுமட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் நெல்லிக்காய் உதவுகிறது. வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற செயல்முறையை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும். இவை அனைத்தும் இரத்த குளுக்கோஸ் அளவை நிலையான அளவில் பராமரிக்க உதவும்.
இலவங்கப்பட்டை தண்ணீர்: நெஞ்செரிச்சல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை மற்றும் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரைக் குடிப்பது நல்லது. இது இரத்த சர்க்கரை அளவையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். இலவங்கப்பட்டையில் உள்ள சேர்மங்கள் வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த லிப்பிட் அளவுகளுக்கு எதிராக செயல்படுகின்றன என 'Cinnamon: a nutraceutical supplement for the cardiovascular system' என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 2050ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 73% மக்களுக்கு நீரிழிவு பாதிப்பு: எச்சரிக்கும் ஆய்வு - தப்பிப்பது எப்படி? |
இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் மிளகிற்கு உண்டு. மிளகில் காணப்படும் ஆல்கலாய்டு பைப்பரின், நன்மைகளை அதிகரிக்கவும், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தவும் உதவும். இந்த பானம் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் சிறந்தது.
வெந்தய நீர்: நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு இயற்கை மூலப்பொருள் தான் வெந்தயம். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்கும் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க உதவும். இது இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதிலும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும் உதவுகிறது.
இருபது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸைக் குறைக்க உதவுகின்றன என்பதைக் காட்டுகின்றன. இது Role of Fenugreek in the prevention of type 2 diabetes mellitus in prediabetes என்ற தலைப்பில் NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தைச் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர நீரிழிவு நோய் ஏற்படுத்தும் பாதிப்பை தடுக்கலாம்.
மஞ்சள்: இரத்த சர்க்கரை அளவையும் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த மஞ்சள் கலந்த நீர் ஒரு சிறந்த தேர்வாகும். மஞ்சளில் உள்ள சேர்மமான குர்குமின், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கவும் உதவும். மஞ்சள் கலந்த நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தவும், கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும். இந்த பானம் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதற்கும் சிறந்தது.
ஆளி விதைகள்: ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. காலை உணவில் ஆளி விதைகளைச் சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும். இது கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானத்தை மெதுவாக்கவும் உதவும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்