வெல்லம் மற்றும் தேன் ஆகிய இரண்டும் அதன் மருத்துவ பண்புகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. பலரும் வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இந்த இரண்டை தேர்வு செய்கின்றனர். இரண்டும் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், அழகையும் மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேன் மற்றும் வெல்லம் இரண்டில் உள்ள வேறுபாடுகள், நன்மைகள் என்ன? இரண்டில் எது சிறந்தது என்பதை பார்ப்போம்.
வெல்லம் நன்மைகள்: வெல்லத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள் பி1, பி6, சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. தினமும் வெல்லம் சாப்பிடுவது நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது. முக்கியமாக, இது இரத்த சோகையைப் தடுப்பதாக நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. இது இரத்தத்தை சுத்திகரித்து, இதயம் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இது கண்கள், வயிறு மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கத்தையும் குறைப்பதாகவும் ஆய்வு கூறுகிறது. தினசரி சிறிதளவு வெல்லம் உட்கொள்வது செரிமான அமைப்பு சரியாக செயல்பட உதவுகிறது. வெல்லம் கலந்த தண்ணீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சோர்வு மற்றும் சோம்பலை நீக்கி உடனடி ஆற்றலை அளிப்பதாக தெரியவந்துள்ளது. இதனுடன், தசைகள் மற்றும் எலும்புகளும் வலுவாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தேனில் உள்ள நன்மைகள்: நம்மில் பலர் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்துகிறோம். இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களுடன் அதிக எண்ணிக்கையிலான ஆக்ஸிஜனேற்றிகளும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், உயர்தர தேனில் பீனாலிக் அமிலங்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன மற்றும் நாள்பட்ட நோய்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பதாக NCBI இதழில் Honey and health என்ற தலைப்பில் வெளியான ஆய்வு கூறுகிறது.
மேலும், பலர் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் எடை இழப்பு, இதய நோய், இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் ஆகியவை கட்டுப்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. கொடிய நோய்களுக்கு எதிராகப் போராடுவதற்கான வலிமையுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும் என்று கூறப்படுகிறது. தேனில் பொட்டாசியம், மெக்னீசியம், புரதம், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் வைட்டமின்கள் பி6 மற்றும் சி ஆகியவை நிறைந்துள்ளதாக விளக்கப்பட்டுள்ளது.
இரண்டில் எது சிறந்தது? : வெல்லம் மற்றும் தேன் இரண்டிலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆனால், இரண்டையும் ஒப்பிடுகையில் தேனில் அதிக கலோரிகள் இருக்கின்றன. இது எடை அதிகரிப்பதற்கும் இரத்த குளுக்கோஸ் அதிகரிப்பதற்கும் பங்களிக்கிறது. தேனின் நன்மைகளைப் பெற விரும்பினால், அதை சிறிய அளவுகளில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.