ETV Bharat / health

காமா கத்தி கதிரியக்க அறுவை சிகிச்சை - மூளை கோளாறு சிகிச்சையில் புது யுகம் படைக்கும் கிம்ஸ் மருத்துவமனை! - MOST ADVANCED GAMMA KNIFE CENTRE

அறுவை சிகிச்சை மூலம் கீறல் இல்லாமல் மூளை பகுதியில் சிகிச்சையளிக்கும் திறனுக்காக காமா கத்தி கதிரியக்க அறுவை சிகிச்சை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் மேம்பட்ட காமா கத்தி கதிரியக்க மையத்தின் தொடக்க விழாவில் பிற மூத்த மருத்துவ நிபுணர்களுடன் கிம்ஸ் குழும மருத்துவமனைகளின் தலைவர் மருத்துவர் பாஸ்கர் ராவ் (இடமிருந்து ஐந்தாவது) உள்ளார்.
இந்தியாவின் மிகவும் மேம்பட்ட காமா கத்தி கதிரியக்க மையத்தின் தொடக்க விழாவில் பிற மூத்த மருத்துவ நிபுணர்களுடன் கிம்ஸ் குழும மருத்துவமனைகளின் தலைவர் மருத்துவர் பாஸ்கர் ராவ் (இடமிருந்து ஐந்தாவது) உள்ளார். (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2025 at 11:05 PM IST

3 Min Read

ஹைதராபாத்: நரம்பியல் அறுவை சிகிச்சையில் குறிப்பிடத்தக்க புதுமையான மைல்கல் ஆக, ஹைதராபாத்தில் மூளை சிகிச்சை தொழில்நுட்பத்தில் கீறல் அல்லாத உலக தரத்திலான நவீனமான காமா கத்தி கதிரியக்க அறுவை சிகிச்சை முறையை கிம்ஸ் மருத்துவமனை தொடங்கி உள்ளது.

புதிய வசதி: இது தொடர்பாக கிம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், "சிக்கலான மூளை கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும், நோயாளிகளுக்கு பாதுகாப்புடன், விரைவான முறையில் சிகிச்சை அளிக்கக் கூடிய மரபார்ந்த மூளை அறுவை சிகிச்சைக்கு மாற்றாக உயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை மூலம் கீறல் இல்லாமல் மூளை பகுதியில் சிகிச்சையளிக்கும் திறனுக்காக காமா கத்தி கதிரியக்க அறுவை சிகிச்சை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உயர் தரத்திலான கதிர்வீச்சு கற்றைகளை மையமாகக் கொண்டு ஒரு மில்லிமீட்டர் அளவுக்கும் குறைவான துல்லியமான முறையில் மூளைக்குள் ஆழமான அசாதாரணமான சிகிச்சை மேற்கொள்ளவும் இது உபயோகிக்கப்படுகிறது. இந்த நடைமுறையானது வலியற்றது, ரத்தம் அதிகம் தேவையில்லை, வெளிநோயாளியாக மருத்துவமனையில் அனமதிக்கப்பட்டு இந்த சிகிச்சை பெறலாம். ஒரே நாளில் பெரும்பாலான நோயாளிகள் வீடு திரும்ப முடியும்.

உகந்த சிகிச்சை முறை: குறிப்பாக மூளை வளர்சிதை மாற்றம் (புற்றுநோய் மற்றும் புற்றுநோய் அற்ற), தமனி நரம்புக் குறைபாடுகள் , ஒலி நரம்பு மண்டலக் கட்டிகள், பிட்யூட்டரி கட்டிகள் மற்றும் ட்ரைஜீமினல் நியூரால்ஜியா மற்றும் கால்-கை வலிப்பு போன்ற செயல்பாட்டுக் கோளாறுகள் போன்ற சிகிச்சைகளுக்கு இந்த நவீன தொழில்நுட்பம் சாதகமானதாக இருக்கும். கட்டி இருக்கும் இடம் அல்லது உடலின் நிலை, வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை முறை உகந்ததாக இருக்கும்,"என்று கூறப்பட்டுள்ளது.

கிம்ஸ் மருத்துவமனையின் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை ஆலோசனை நிபுணர் மருத்துவர் மானஸ் பாணிக்ராஹி, "காமா கத்தி கதிரியக்க சிகிச்சை முறையானது நரம்பியல் அறுவை சிகிச்சை, நரம்பு-புற்றுநோய் மருத்துவத்தில் முன்னுதாரணமான மாற்றத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. இத்துடன், கீறல் அற்ற தொழில்நுட்பத்தில் சிக்கலான, நுட்பமான மூளை தொடர்பான நிலைகளுக்கு துல்லியமான, நோயாளிகளின் உயிருக்கு அதிக ஆபத்து இன்றி நம்மால் சிகிச்சை அளிக்க முடியும். தென் இந்தியா மற்றும் அருகாமையில் உள்ள பிராந்தியங்களில் உள்ள நோயாளிகளுக்கு இந்த வசதி மூளை அறுவை சிகிச்சையில் மாற்றமாக இருக்கும்,"என்று கூறினார்.

புது யுகம்: கிம்ஸ் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் மருத்துவர் பொல்லினேனி பாஸ்கர் ராவ், " கிம்ஸ் மருத்துவமனையில் மிகவும் நவீனமான காமா கத்தி கதிரியக்க சிகிச்சை முறையை தென் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கின்றோம். கீறல் அற்ற மூளை சிகிச்சையில் இது ஒரு குறிப்பிடத்தக்க புது யுகமாக விளங்குகிறது. துல்லியம் மற்றும் நோயாளிக்கு வசதியான முறையை அளிக்கும் உலக தரத்திலான உடல்நல சேவையை அளிப்பதில் எங்களுடைய கடமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த நவீன தொழில்நுட்பம் திகழ்கிறது.

இதையும் படிங்க: வைட்டமின் டி குறைபாடு இருப்பதை எச்சரிக்கும் 8 அறிகுறிகள்!

மூளையை திறந்து அறுவை சிகிச்சை மேற்கொள்வதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சிக்கலான நரம்பியல் கோளாறு நிலைகளுக்கு பாதுகாப்பான மற்றும் விரைவாக குணம் அடைவதற்கான வாய்ப்புகளை நாங்கள் அளிக்கின்றோம். இந்த மாற்றத்துக்கான தொழில்நுட்பத்தை உபயோகித்து உயர்ந்த தரத்திலான பாதுகாப்பை, வழங்குவதற்கு எங்களது நிபுணர் குழு முழு அளவில் தயாராக உள்ளது. இந்த தொடக்கமானது, ஹைதராபாத் நகரை நவீன மருத்துவ புதுமைகளுக்கான மையமாக நிலை நிறுத்துகிறது,"என்று கூறினார்.

பக்க விளைவுகள் குறைவு: கிம்ஸ் மருத்துவமனையில் உள்ள புதிய காமா கத்தி கதிரியக்க சிகிச்சை மையம், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள், மற்றும் மேம்பட்ட கதிரியக்க அறுவை சிகிச்சையில் பயிற்சி பெற்ற மருத்துவ இயற்பியலாளர்கள் ஆகியோருடன் தற்போதைய நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இந்த தொடக்கமானது ஹைதராபாத் நகரை நவீன மருத்துவ தொழில்நுட்பத்துக்கான மையமாக மற்றும் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவ சேவைகள் மையமாக நிலை நிறுத்துகிறது. இந்த வசதிகளுடன் தெலங்கானா, ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு சேவை செய்வது மட்டுமின்றி, இந்தியாவின் பிற பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் இந்த சிகிச்சை அளிக்கப்படும். மூளை சிகிச்சையில் குறைவான அபாயத்தைக் கொண்ட சிகிச்சையைக் கோரும் அண்டை நாடுகளின் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.

காமா கத்தி கதிரியக்க சிகிச்சையானது மூளையில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்குப் பரவக் கூடிய மூளை மெட்டாஸ்டேஸ்கள் - புற்றுநோய் நோயாளிகளுக்கான ஒரு அதிரடி மாற்றத்தை வழங்குகிறது. நவீன, கீறல் அற்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மருத்துவமனையில் தங்கி இருக்காமல், அறுவை சிகிச்சைக்கான தேவை இன்றி ஒரே முறையில், பல்வேறு எண்ணிக்கையிலான மூளை கட்டிகளை மருத்துவர்களால் அகற்ற முடியும். மரபார்ந்த கதிரியிக்க தெரபி சிகிச்சை போல் அல்லாமல், காமா கத்தி கதிரியக்க சிகிச்சையானது, கட்டிகளின் மீது மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆரோக்கியமான மூளை திசுக்களை பாதுகாக்க உதவுகிறது. நினைவிழத்தல் போன்ற பக்க விளைவுகளின் அபாயம் குறைவாகும். இந்த நடைமுறையானது விரைவாக, வலியற்ற வகையில் இருக்கும். பெரும்பாலான நோயாளிகள் அறுவை சிகிச்சை முடிவுற்ற நாளிலேயே வீட்டுக்குத் திரும்பலாம். பல்வேறு புற்றுநோயாளிகளிடையே நல்ல தரமான வாழ்க்கையையும், புதிய நம்பிக்கையையும் அளிக்கிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.