ETV Bharat / health

எந்தெந்த உணவுகளை எதனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது? ஆய்வு சொல்வது என்ன? - WRONG FOOD COMBINATION

சரும ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் தயிர் மற்றும் மீனை ஒன்றாக எடுத்துக்கொள்வதால் urticaria என்ற நிலை உண்டாக்கும் என்கிறார் தோல் மருத்துவர் மோனிஷா.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : June 11, 2025 at 12:11 PM IST

2 Min Read

சாப்பிடும் உணவுகள் எதுவாக இருந்தாலும் அவை துரிதமாக செரிமானமாக வேண்டும். அதற்கேற்ப உணவுப்பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. ஆனால், நமது அறியாமையால் ஒன்றாக சேர்த்து சாப்பிடும் சில உணவுப் பொருட்கள் செரிமான அமைப்பை குழப்பி ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு இடையூறு ஏற்படுத்தும் என்கிறது Effect of food combinations and their co-digestion on total antioxidant capacity under simulated gastrointestinal conditions என்ற தலைப்பில் NCBI இதழில் வெளியான ஆய்வு.

செரிமான செயல்முறையை தாமதமாக்கி உடலுக்கு அசெளகரியத்தையும் ஏற்படுத்தும். இதனால் குடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும். இப்படியிருக்க சில எதிர்எதிர் உணவு பொருட்கள் சிலவற்றை பற்றியும் அவற்றை ஏன் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தயிர் - மீன்: தயிரையும் மீனையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது போன்ற வார்த்தைகளை சிறுவயதில் இருந்து கண்டிப்பாக கேட்டு வளர்ந்திருப்போம். ஆனால், இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பதை அறிந்திருக்கமாட்டோம். தயிர் குளிர்ச்சி மிக்கது. மீன் இயற்கையாகவே வெப்பமானது. இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது வயிறு சார்ந்த பிரச்சனைகளை உண்டாக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

இரண்டு பொருளும் ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகள் என்பதால் சிலருக்கு இது urticaria என்ற சரும ஒவ்வாமை நிலையை உண்டாக்கும். அதனால் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என்கிறார் தோல் மருத்துவர் டாக்டர் மோனிஷா. இந்த இரு பொருட்களை அடிக்கடி ஒன்றாக சாப்பிடுவது குடலில் இயற்கையான செயல்பாட்டை சீர்குலைக்கும்.

டீ - மசாலா பொருட்கள்: டீயுடன் ஸ்நாக்ஸ் சேர்த்து பருகுவது பலருடைய வழக்கம். டீயுடன் வடை, சமோசா, பஜ்ஜி, பிஸ்கட் போன்றவற்றை உட்கொள்வோம். ஆனால், இது சில ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? டீயுடன் உப்பு கலந்த அல்லது வறுத்த ஸ்நாக்ஸ் வகைகளை சாப்பிடுவது உடலில் இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கக்கூடும். மேலும், இது உணவின் ஊட்டச்சத்து மதிப்பையும் குறைக்கும். அஜீரணத்தும் வழிவகுக்கும். அதனால், டீயை தனியாக சாப்பிடுவதை நல்லது. மூலிகை டீ, கசாயம் பருகுவது செரிமானத்திற்கு சிறப்பானது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)

பால் - சிட்ரஸ் பழங்கள்: பாலில் எலுமிச்சை பழ சாற்றை பிழிந்தால் பால் திரிந்துவிடும். அதனால், பால் அருந்திய உடனேயே சிட்ரஸ் நிறைந்த உணவுப்பொருட்களை உட்கொள்வது ஏற்றது அல்ல. இவை, வயிற்று அசெளகரியத்தை வழிவகுக்கும் மற்றும் உணவுப்பொருட்களில் இருக்கும் கால்சியத்தை உறிஞ்சுவதை தடுக்கும்.

பழம் - பால் பொருட்கள்: பாலும் பழமும் நாம் சிறுவயதில் இருந்து ஒன்றாக உட்கொண்ட உணவுப்பொருளாகும். தற்போதும், மில்க்‌ஷேக், ஸ்மூத்தி போன்றவற்றில் பழத்துடன் பாலை கலந்து குடிக்கிறோம். ஆனால், பாலுடன் பழங்களை சேர்ப்பது செரிமானத்தை மெதுவாக்கும். குறிப்பாக, பால் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், பழங்களோ விரைவாக செரிமானமாகி விடும்.

இவற்றை இரண்டையும் ஒன்றாக இணைத்து சாப்பிடும் போது நொதித்தல் செயல்முறையில் மாறுபாட்டை ஏற்படுத்தும். வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்கும். பழங்களை தனியாக சாப்பிடுவது சிறந்தது. பாலுக்கு பதிலாக நட்ஸ் வகைகளுடன் பழங்களை சேர்த்து சாப்பிடலாம்.

இதையும் படிங்க:

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.