கொளுத்தும் கோடை வெப்பத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உணவில் சில மாற்றங்களைச் செய்வது அவசியம். கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பதால், உடல் வெப்பநிலையும் உயரும். இது சோர்வு, நீரிழப்பு மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே கோடை காலத்தில் நாம் உட்கொள்ளும் உணவில் அதிக கவனம் செலுத்தி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்நிலையில், கோடையில் நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
உணவில் சேர்க்க வேண்டிய உணவுகள்:
- பழங்கள் மற்றும் காய்கறிகள்: கோடை காலத்தில் உணவில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம். அவை உடலை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. வெள்ளரிக்காய், தர்பூசணிகள், எலுமிச்சை, ஆரஞ்சு, முலாம் பழம், கீரைகள் மற்றும் சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

- எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த உணவுகள்: எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. தினசரி ஒரு இளநீர் குடிப்பது நீரிழப்பினால் ஏற்படும் பிரச்சனையை தடுக்கின்றது. இது வியர்வை மூலம் இழக்கப்படும் எலக்ட்ரோலைட்டுகளை மீட்டெடுக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல், நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும்.
- புரோபயாடிக்குகள் கொண்ட உணவுகள்: புரோபயாடிக்குகள் கொண்ட உணவுகள் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதிலும் குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். எனவே கோடை காலத்தில் உணவில் மோர், தயிர் மற்றும் பழ ஸ்மூத்திகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- புரதங்கள் நிறைந்த உணவுகள்: உணவில் புரதங்கள் நிறைந்த கிரில் செய்யப்பட்ட அல்லது வேகவைத்த உணவுகளைச் சேர்க்கவும். இது செரிமானத்தை எளிதாக்கவும் ஆற்றலைப் பராமரிக்கவும் உதவுகிறது. சால்மன், டுனா போன்ற மீன் வகைகளையும், சிக்கன் பிரெஸ்ட், டோஃபு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: உடல் எடையை குறைப்பது முதல் இதய ஆரோக்கியம் வரை - இளநீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? |

கோடையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்?
- உப்பு அதிகம் உள்ள உணவுகள்: கோடையில் உப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வது நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும். எனவே அதிக அளவு உப்பு உள்ள பாக்கெட் உணவுகள் மற்றும் பாஸ்ட் ஃபுட் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
- கொழுப்பு நிறைந்த உணவுகள்: கொழுப்பு நிறைந்த உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யும். இது செரிமானத்தை மெதுவாக்கி அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. எனவே கோடைக்காலத்தில் வறுத்த மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக கிரில் செய்யப்பட்ட அல்லது வேகவைத்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

- குளிர் பானங்கள் மற்றும் பழச்சாறுகள்: குளிர் பானங்கள் உடலுக்கு உடனடியான புத்துணர்ச்சியை தருகின்றது. ஆனால் இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கவும் காரணமாகின்றன. எனவே பழச்சாறுகள் குடிக்கும்போது சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் பழச்சாறுகள் குடிப்பதை தவிர்க்கவும்.
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.