வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் இரவானால் கிட்சனை கரப்பான் பூச்சிகள் ஆக்கிரமித்து விடுகின்றதா? இரவில் தண்ணீர் குடிக்கலாம் என்று சமையலைறையில் உள்ள லைட்-ஐ ஆன் செய்தால் காய்கறி, பாத்திரங்கள் என் அங்கும் இங்குமாய் கரப்பான் பூச்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறதா? உலகளவில் மனிதர்களுக்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படுவதற்கு கரப்பான் பூச்சி முக்கிய காரணம் என்கிறது NCBI இதழில் வெளியான ஆய்வு.
கரப்பான் பூச்சிகள் கடிக்காது. இருப்பினும், கரப்பான் பூச்சி காலில் உள்ள பாக்டீரியாக்கள் மனிதர்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அந்த வகையில், கரப்பான் பூச்சியை எப்படி அழிப்பது? மற்றும் அவற்றால் ஏற்படும் உடல்நல பாதிப்பு என்னென்ன? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

டைபாய்டு காய்ச்சல்: கரப்பான் பூச்சிகள் பரப்பும் பாக்டீரியாவால் ஏற்படக்கூடிய கடுமையான நோய் டைபாய்டு. கரப்பான் பூச்சிகள் பரப்பும் சால்மோனெல்லா டைஃபி (Salmonella Typhi) என்ற பாக்டீரியா டைபாய்டு காய்ச்சலுக்கு வழிவகுக்கும் என்கிறது WHO. இந்த பாக்டீரியா நாம் குடிக்கக்கூடிய அசுத்தமான நீர் அல்லது நாம் உண்ணக்கூடிய அசுத்தமான உணவு வழியாக உடலில் நுழைகிறது. காய்ச்சல், பலவீனம், தலைவலி, சில நேரங்களில் மலச்சிக்கல் மற்றும் சில நேரங்களில் வயிற்றுப்போக்கு ஆகியவை டைபாய்டு காய்ச்சலின் அறிகுறியாக இருக்கிறது.
காலரா: காலரா என்பது கரப்பான் பூச்சிகளால் பரவக்கூடிய மற்றொரு நோயாகும். இது பெரும்பாலும் சரியான சுகாதாரம் பராமரிக்கப்படாவிட்டால் ஏற்படுகிறது. காலரா பாதிப்பு ஏற்பட்டால் நோயாளிக்கு வயிற்றுப்போக்கு, நீர்ச்சத்து இழப்பு, வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
வயிற்றுப்போக்கு: ஷிகெல்லா பாக்டீரியா அல்லது அமீபாக்களால் ஏற்படும் வயிற்றுப்போக்கும் கரப்பான் பூச்சிகளால் ஏற்படலாம். பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படுவதோடு இரத்தம் வெளியேறும். நோயாளிக்கு வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் நீடித்த காய்ச்சல் கூட ஏற்படலாம். இதை எதிர்கொள்ள, குறிப்பிட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இரைப்பை குடல் அழற்சி, ஆஸ்துமா: கரப்பான் பூச்சியின் எச்சம், உமிழ்நீர் மற்றும் உடல் பாகங்கள் ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என The Cockroach and Allergic Diseases என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தும்மல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.
கரப்பான் பூச்சிகளால் ஏற்படும் தொற்று அல்லது நோய்களைத் தடுக்க, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது, உணவை மூடி வைப்பது, குப்பைத் தொட்டிகளை தொடர்ந்து கழுவி சுத்தம் செய்வது அவசியம். வருமுன் காப்பது சிறந்தது என்பதால், கரப்பான் பூச்சிகள் வராமல் தடுக்க உதவும் தெளிப்பான்களை பயன்படுத்தவும்.

கரப்பான் பூச்சிகளை அழிப்பது எப்படி?:
- தரைகள் மற்றும் சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மற்றும் ஓட்டைகளை அடைக்கவும்
- நீர் கசிவு ஏற்படும் குழாய்களை சரிசெய்யவும்
- எப்போதும் வீட்டில் உள்ள பகுதிகளை ஈரப்பதமாக வைத்திருக்காதீர்கள்
- அனைத்து குப்பைத் தொட்டிகளையும் இறுக்கமாக மூடவும்
- காற்று புகாத கொள்கலன்களில் உணவை சேமிக்கவும் (அலமாரிகளில் உள்ள உணவு உட்பட)
- பயன்பாட்டிற்குப் பிறகு உடனடியாக அழுக்கு பாத்திரங்களை சுத்தம் செய்யவும்
- செல்லப்பிராணி உணவு கிண்ணத்தை சுத்தம் செய்யவும்
- மேசைகள், கவுண்டர்கள், அடுப்பு மேல் மற்றும் தரைகளில் சிந்திக்கிடக்கும் உணவு துண்டுகளை துடைக்கவும்
- தரைகளை தவறாமல் துடைக்கவும்
- அலமாரிகள் மற்றும் டிராயர்களில் இருந்து குப்பைகளை அகற்றவும்
இதையும் படிங்க: |
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.