இந்திய சமையலறைகளில் பிரதானமாக இருக்கக் கூடிய மசாலாப் பொருட்களில் ஒன்று ஏலக்காய். இதற்கு இருக்கும் தனித்துவமான சுவையும், மனமும், உணவிற்கு கூடுதல் சுவையையும் மனத்தையும் வழங்குகிறது. நாம் விரும்பி குடிக்கும் டீயில் இருந்து ரசித்து ருசித்து உண்ணும் பிரியாணி வரை பல்வேறு ரெசிபிகளில் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காயில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடுவதில் உதவுகிறது. பைட்டோதெரபி ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், ஏலக்காய் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளைக் குறைக்கவும் உதவும். இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் நன்மை பயக்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தினசரி இரவு உணவிற்குப் பிறகு ஒரு ஏலக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
ஏலக்காயில் உள்ள சத்துக்கள்:
- புரதம்
- கொழுப்பு
- கால்சியம்
- பாஸ்பரஸ்
- சோடியம்
- இரும்புச்சத்து
- மெக்னீசியம்
- வைட்டமின் சி
- நியாசின்
செரிமானத்தை மேம்படுத்துகிறது: இரவு உணவிற்குப் பின் ஏலக்காய் சாப்பிடுவது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும். இது வயிறு கோளாறு, அஜீரணம் மற்றும் வாயு போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது: உணவுக்குப் பிறகு ஏலக்காய் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதிலும் கலோரிகளை எரிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். இது ஆற்றல் மட்டங்களை மேம்படுத்தவும், அதிகப்படியான கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும் உதவும். அது மட்டுமல்லாமல், ஏலக்காய் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
வாய் துர்நாற்றம் நீங்கும்: ஏலக்காய் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்க உதவும். அதன்படி, உணவுக்குப் பிறகு ஏலக்காயை மென்று சாப்பிடுவது சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்து, வாய் துர்நாற்றத்தைத் தடுக்க உதவும். இது வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும் பொருட்களுக்கு இயற்கையான மாற்றாகும்.
நச்சு நீக்கி: ஏலக்காயில் நச்சுகளை அகற்றும் டையூரிடிக் பண்புகள் உள்ளன. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவும். இது கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கும் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்தும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் ஏலக்காய் நன்மை பயக்கும்.
நெஞ்செரிச்சல் நீங்கும்: ஏலக்காய் நெஞ்செரிச்சலைப் போக்கவும், வயிற்றில் உள்ள அமிலங்களை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. இது நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் அஜீரண அறிகுறிகளைக் குறைக்க உதவும்.
தூக்கத்தை ஊக்குவிக்கும்: ஏலக்காய் தூக்கத்தை ஊக்குவிக்கிறது மற்றும் நரம்புகளை தளர்த்த உதவுகிறது. கூடவே, மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவும். இது தூக்கத்தை மேம்படுத்தவும், நிம்மதியாக தூங்கும் நேரத்தை அதிகரிக்கும்.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்: ஏலக்காய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகள் ஏலக்காயை உட்கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிக்க முடியும்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.