இந்தியா மற்றும் சீனாவில் வளரும் நீர் வாழ் தாவரமான யூரியால் ஃபாக்ஸ் (Euryale Fox) செடியின் விதைகள் தான் மக்கானா. இவை ஃபாக்ஸ் நட் (Fox Nuts) என்றும் தாமரை விதை (Lotus seeds) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள ஏராளமான மருத்துவ நன்மைகளுக்காகவே கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பீகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.இந்த விதைகள் அறுவடை செய்யப்பட்டு உலர வைக்கப்படுகிறது. பின்னர், தேவைக்கு ஏற்ப லேசாக வறுத்து உட்கொண்டால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிற்றுண்டியாக இருக்கும்.
எலும்புகளை பலப்படுத்துகிறது: மக்கானாவில் உள்ள கால்சியம் உள்ளடக்கம் எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிப்பதிலும், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், கொழுப்பின் அளவைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், மெக்னீசியம் உள்ளடக்கம் புரத தொகுப்பு, தசை சுருக்கங்கள் மற்றும் நரம்பு செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது: மக்கானாவில் காலிக் அமிலம், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் எபிகாடெசின் போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இந்த சேர்மங்கள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தடுக்கின்றன. இது இதய நோய், புற்றுநோய் மற்றும் வகை 2 நீரிழிவு போன்ற நாள்பட்ட நிலைமைகளிலிருந்து பாதுகாக்கின்றன.

தாமரை விதையில் உள்ள கரையக்கூடிய பாலிசாக்கரைடுகள் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடுவதாக NCBI இதழில் வெளியான ஆய்வு கூறுகிறது. மேலும், மக்கானாவில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கத்தைக் குறைக்க உதவக்கூடும் என்றும், முடக்கு வாதம், கீல்வாதம்,தோல் அழற்சி மற்றும் குடல் அழற்சி போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு உதவுவதாகவும் ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது.
இரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகள் மீது நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், இவை எலிகளின் இரத்த சர்க்கரை ஒழுங்குமுறையை மேம்படுத்துவதாகவும், ஆக்ஸிஜனேற்ற நொதிகளை அதிகரிப்பதாக 2015ம் ஆண்டு NCBI இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மகானா விதைகளிலிருந்து எடுக்கப்படும் குறிப்பிட்ட சேர்மங்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்ட எலிகளில் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை சீராக்குவதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது.
எடை இழப்பிற்கு உதவுகிறது: தாமரை விதைகளில் உள்ள அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து எடை இழப்பிற்கு வழிவகுக்கிறது. புரதம் உணவு பசியைக் குறைத்து பசியைக் கட்டுப்படுத்தும். அதே நேரத்தில் நார்ச்சத்து நாள் முழுவதும் வயிறு நிரம்பிய உணர்வை தருகின்றது. நார்ச்சத்து இடுப்பை சுற்றியுள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து எடை இழப்பிற்கு வழிவகுப்பதாக ஆய்வு கூறுகிறது.
ஊட்டச்சத்துக்கள்: தாமரை விதைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பல நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மக்கானாவில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளன. இதனை மாலை நேரங்களில் ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
இதையும் படிங்க: |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.