ETV Bharat / health

Cancer-ஐ விரட்டும் 5 முக்கிய ஆயுர்வேத மூலிகைகள் - ஆய்வில் தகவல்! - AYURVEDIC HERBS FOR CANCER

பூண்டில் உள்ள சேர்மங்கள் புற்றுநோய் கட்டிகளை எதிர்த்து போராடுவதாக நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் இதழில் வெளியான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty images)
author img

By ETV Bharat Health Team

Published : March 19, 2025 at 11:30 AM IST

Updated : March 19, 2025 at 2:57 PM IST

2 Min Read

ஆயுர்வேத மூலிகைகள் எனப்படும் இயற்கை மூலிகைகள் உடல், மன ஆரோக்கியத்தை ஒருங்கிணைக்கின்றன. இந்த மூலிகைகள் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயுர்வேத மூலிகைகளை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக, புற்றுநோய்க்கான சிகிச்சையில் பன்முக அணுகுமுறை தேவைப்படுகிறது. இந்த அணுகுமுறை உள் மருத்துவ தலையீடுகள், வெளிப்புற சிகிச்சை முறைகள், உணவு முறை பரிசீலனைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு கூறுகளை ஒருங்கிணைக்கிறது. சில ஆயுர்வேத மூலிகைகள் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதிலும், புற்றுநோய் சிகிச்சையில் கூட உதவுவதிலும் பயனுள்ளதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அவை என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நெல்லிக்காய்
நெல்லிக்காய் (Getty images)

நெல்லிக்காய் : நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளின் வளமான மூலமாகும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் இன்றியமையாததாக இருக்கிறது. நெல்லிக்காயின் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் புற்றுநோயைத் தடுக்கவும், ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. NIH-இல் வெளியிட்ட ஆய்வில், நெல்லிக்காய் சக்தி வாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதை உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் நன்மை பயக்கும்.

சீந்தில் அல்லது குடுச்சி மூலிகை
சீந்தில் அல்லது குடுச்சி மூலிகை (Getty images)

பூண்டு: பூண்டு அதன் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த பண்புகள் செல்களை சேதத்திலிருந்து பாதுகாப்பதன் மூலமும் சேதமடைந்த மரபணுக்களை சீராக்க உதவுவதன் மூலமும் புற்றுநோயைத் தடுக்க உதவுகின்றன. பூண்டில் உள்ள பண்புகள், பல்வேறு வகையான வயிறு, மார்பகம், கணையம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்களின் வளர்ச்சியை எதிர்த்து போராடுவதாக, நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது.

அஸ்வகந்தா
அஸ்வகந்தா (Getty images)

புற்றுநோய் கட்டிகளுக்கு எதிராக போராடும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆர்கனோசல்பர் சேர்மங்கள் பூண்டில் உள்ளன. உடலின் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்தும் இஞ்சியின் திறன் ஆயுர்வேத புற்றுநோய் தடுப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையும் படிங்க: கர்ப்பப்பை வாய் புற்றுநோய்: பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? தடுப்பது எப்படி?

மஞ்சள்: மஞ்சள் என்பது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஆயுர்வேத மூலிகையாகும். மஞ்சளில் உள்ள குர்குமின் போன்ற சேர்மங்கள், சில சந்தர்ப்பங்களில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதைக் சில ஆய்வுகள் காட்டுகின்றன. கூடுதலாக, மஞ்சள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் மற்றும் காயங்களை குணப்படுத்தும். புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுப்பதிலும் இது ஒரு பங்கை வகிக்கிறது. இது ஆயுர்வேத புற்றுநோய் மேலாண்மையில் ஒரு அத்தியாவசிய மூலிகையாக அமைகிறது.

மஞ்சள்
மஞ்சள் (Getty images)

அஸ்வகந்தா: அஸ்வகந்தா அதன் அடாப்டோஜெனிக் பண்புகளுக்காக அறியப்படுகிறது. இது உடல் மன அழுத்தத்தைச் சமாளிக்கவும் ஒட்டுமொத்த மீள்தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. அஸ்வகந்தாவின் வேர் மட்டுமல்லாமல், இலைகளின் சாறு கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கவும் புற்றுநோயைத் தடுப்பதாக ஆய்வு கூறுகிறது. அஸ்வகந்தாவின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் மற்றும் வீக்கத்தை எதிர்த்துப் போராடும் திறன் புற்றுநோய் சிகிச்சையில் முக்கிய பங்கை வகிக்கிறது.

சீந்தில்: சீந்தில் அல்லது குடுச்சி மூலிகை, அதன் நோய் எதிர்ப்பு சக்தி பண்புகளுக்கு பிரபலமானது. நச்சு நீக்கும் புத்துணர்ச்சியூட்டும் தாவரமாக இருக்கும் இந்த மூலிகை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

புற்றுநோய் விழிப்புணர்வில் 'வண்ணமயமான ரிப்பன்கள்'..ஒவ்வொன்றும் குறிப்பது என்ன?

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

Last Updated : March 19, 2025 at 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.