இன்றைய கால கட்டத்தில் உடலில் LDL, அதாவது கெட்ட கொழுப்பின் அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது. இந்தப் பிரச்னை உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட, வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரிடமும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகக் கருதப்படும் உணவு முறை மற்றும் உடற்பயிற்சி தொடர்பான ஒழுக்கமற்ற மற்றும் சமநிலையற்ற பழக்க வழக்கங்களே இதற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன.
கொலஸ்ட்ராலை சைலண்ட் கில்லர் என்கின்றனர் மருத்துவர்கள். கொலஸ்ட்ரால் காரணமாக இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கிறது. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு பல ஆபத்தான நோய்களின் அபாயத்தையும் உருவாக்குகிறது. எனவே, கொழுப்பைக் கட்டுப்படுத்த வாழ்க்கை முறையிலும் உணவுப் பழக்கத்திலும் மாற்றங்களைச் செய்வது முக்கியம். அந்த வகையில் கொலஸ்ட்ரால் என்றால் என்ன? ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் படிந்தால் ஏற்படும் அறிகுறிகள் என்னென்ன? என்பதை பார்க்கலாம்.

கெட்ட கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் என்பது செல் சவ்வுகளில் காணப்படும் எண்ணெய் நிறைந்த ஸ்டீராய்டு ஆகும். இது ரத்த நாளங்களில் பிளேக் உருவாவதற்கு காரணமாகிறது. இது ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூளை பக்கவாதம் போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது. இருப்பினும், வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் அதிக கொழுப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

கெட்ட கொழுப்பின் அறிகுறிகள்:
- நெஞ்சு வலி அல்லது அசௌகரியமாக உணர்வது. குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது இந்த பிரச்சனையை எதிர்கொள்வது.
- கால்களில் வலி அல்லது தசைப்பிடிப்பு. குறிப்பாக நீண்டநேரம் நடக்கும் போது அல்லது நிற்கும் போது இந்த பிரச்னையை சந்திப்பது.
- முழங்கை, முழங்கால், கைகள் அல்லது பிட்டம் பகுதிகளில் உள்ள தோலில் மஞ்சள் படிவுகள் ஏற்படுவது. இது சாந்தோமாஸ் என்றழைக்கப்படுகிறது.
- அடிக்கடி தலைச்சுற்றல் அல்லது ஒற்றைத் தலைவலியை எதிர்கொள்வது.
- சுவாசிப்பதில் சிரமம். நெஞ்சு வலியுடன் மூச்சுத் திணறல் ஏற்படுவது.
- எப்போதும் சோர்வாக உணர்வது
- செரிமான பிரச்சனை
- மாரடைப்பு அறிகுறிகள்: திடீரென சமநிலை இழப்பு, மூச்சுத் திணறல், குமட்டல் மற்றும் நெஞ்சு வலி
- தாடையில் வலி
- கழுத்தின் பின்புறத்தில் வலி
- இதையும் படிங்க: கோடை காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
கொலஸ்ட்ரால் பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் உணவுகள்:

வால்நட்: வால்நட்டில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தினமும் காலை உணவில் சில வால்நட்ஸை எடுத்துக் கொள்வது அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதனால் இதய நோய் அபாயமும் குறையும்.
பாதாம்: பாதாம் நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பாதாம் பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிடுவது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்பதைக் காட்டுகிறது.
ஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெய்யில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த எண்ணெய் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது என்கின்றனர்.
ஆளி விதைகள் : பல ஊட்டச்சத்துக்களுடன், ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன. ஆளி விதைப் பொடியை காலையில் 3 மாதங்கள் தொடர்ந்து உட்கொள்வது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
உடற்பயிற்சி: காலையில் நடைபயிற்சி மற்றும் வாரத்திற்கு ஏழு நாட்கள் உடற்பயிற்சி செய்வது, ரத்தத்தில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும். வழக்கமான ஏரோபிக் உடற்பயிற்சி ரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
ஆரஞ்சு ஜூஸ்: வைட்டமின் சி நிறைந்த ஒரு கிளாஸ் ஆரஞ்சு சாற்றை அதிகாலையில் குடிப்பதால் கொழுப்பின் அளவு குறையும் என்று தேசிய சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆரஞ்சுப் பழத்தில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன.
இதையும் படிங்க: கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? நீங்க செய்ய வேண்டிய 7 விஷயம் இதான்! கெட்ட கொழுப்பை குறைக்கும் 5 சூப்பர் ஃபுட்ஸ்..தொப்பையும் கடகடவென குறையும்! |
பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்