ETV Bharat / entertainment

கம்பேக் கொடுத்தாரா வடிவேலு? ஹாட்ரிக் அடித்தாரா சுந்தர்.சி?... ’கேங்கர்ஸ்’ பட விமர்சனம் - GANGERS MOVIE X REVIEW

Gangers Movie X Review: சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியில் வெளியாகியிருக்கும் ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

கேங்கர்ஸ் பட போஸ்டர்
கேங்கர்ஸ் பட போஸ்டர் (@AvniCinemax_ X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 24, 2025 at 5:40 PM IST

2 Min Read

சென்னை: தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நகைச்சுவை கூட்டணியான சுந்தர்.சி மற்றும் வடிவேலு 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் இனைந்துள்ள திரைப்படம் ’கேங்கர்ஸ்’, இன்று (ஏப்ரல் 24) உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியுள்ள இத்திரைப்படத்தை சுந்தர்.சியே இயக்கியுள்ளார்.

முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படத்தில் வடிவேலு, சுந்தர்,சியுடன் கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த், பகவதி பெருமாள், மைம் கோபி, ஹரிஷ் பேரடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ளார்.

சில ஆண்டுகளாக வடிவேலுவின் நகைச்சுவை கதாபாத்திரங்களும் சரி திரைப்படங்களும் சரி பெரிய அளவில் வரவேற்பை பெறாததால் சுந்தர்.சியுடன் வடிவேலு இணைந்துள்ள இப்படத்தினை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இன்று படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியின் நகைச்சுவை நன்றாக இருப்பதாகவும் வடிவேலு மீண்டும் நகைச்சுவை அதகளம் செய்துவிட்டதாகவும் தங்கள் கருத்துகளை இணையத்தில் கூறி வருகின்றனர். மேலும் திரைப்படமானது பழைய நகைச்சுவை திரைப்படங்களைப் போல இருக்கிறது எனவும் சமூக வலைதளங்களில் ’கேங்கர்ஸ்’ திரைப்படம் குறித்த தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் தனியார் பக்கம் பதிவிட்டுள்ள விமர்சனத்தில், சிறப்பான முதல் பாதியும் அதனை தொடர்ந்த பொழுதுபோக்கு நிறைந்த இரண்டாம் பாதியும் கேங்கர்ஸ் திரைப்படத்தின் நேர்மறையான விசயங்கள். சுந்தர்.சி மற்றும் வடிவேலு என இருவரையும் சேர்த்து திரையில் பார்ப்பது நன்றாக இருக்கிறது. தியேட்டரில் சென்று கலகலப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் இது என பதிவு செய்துள்ளனர்.

மற்றொரு எக்ஸ் தள விமர்சனத்தில், படத்தின் முதல் பாதி நன்றாகவும் இரண்டாம் பாதி அதனை விட நன்றாகவும் இருந்தது. சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியின் நகைச்சுவையில் அதகளம் செய்துள்ளனர். நகைச்சுவை, ஆக்‌ஷன், கதையின் உணர்வுப்பூர்வமான விசயங்கள் என எல்லாம் சரிவர நிறைந்துள்ளன.

முக்கியமாக கடைசி 30 நிமிடங்கள் மிக கலகலப்பான நகைச்சுவைப் பகுதியை கொண்டிருக்கின்றன. ஆச்சரியப்படுத்தக்கூடிய சிறப்பு தோற்றங்களும் படத்தில் இருக்கின்றன. சுந்தர்.சியின் முந்த படங்களின் ரெஃபரன்ஸ்களும் படத்தில் நிறையவே உள்ளன என பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏன் நாங்க சிம்ரனுடன் நடிக்க கூடாதா? ... நடிகர் சசிகுமார் கேள்வி!

எக்ஸ் தள விமர்சனத்தில், கதை, திரைக்கதை மற்றும் நடிகர்கள் தேர்வு அனைத்து நன்றாக உள்ளது. ஆனால் நகைச்சுவை சுந்தர்.சி - வடிவேலு கூட்டணியின் முந்தைய படங்களை தொடவில்லை. தேவையில்லாத ஆக்‌ஷன் காட்சிகளை தவிர்த்து நகைச்சுவையாகவே சென்றிருக்கலாம். ஆனாலும் பள்ளி ஆசிரியர் ஒருவரை சம்பந்தே இல்லாமல் நடனம் ஆட வைப்பதெல்லம் அநியாயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எக்ஸ் தள பதிவில், முதல் பாதியை இரண்டாம் பாதி நகைச்சுவை கலகலப்பாக உள்ளது. வடிவேலு தான் படத்தை தாங்கியுள்ளார். அவரது நகைச்சுவை சிறப்பாக உள்ளது. நமது ஊர் மணி ஹெய்ஸ்ட் போன்ற கதைக்களத்தில் சிறப்பாக நகைச்சுவை செய்துள்ளனர். முதல் பாதியில் வடிவேலு இல்லாத காட்சிகளை இன்னும் சிறப்பாக மாற்றியிருக்கலாம் என பதிவு செய்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.