ETV Bharat / entertainment

தனுஷ் முதல் ரஜினி வரை... அடுத்தடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் நடிகர்கள் யார்? - Mari Selvaraj

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 8, 2024, 6:23 PM IST

Mari Selvaraj: மாரி செல்வராஜ் பைசன் படத்தை தொடர்ந்து, தனுஷ், கார்த்தி, ரஜினி ஆகியோரது படங்களை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் (Credits - mariselvaraj84 instagram account)

சென்னை: தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தத்ரூபமாக திரையில் காட்டுபவர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் சில படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன், நெல்லையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக பார்க்கப்பட்ட மாரி செல்வராஜ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், உதயநிதி உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படத்தை இயக்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை இப்படம் உரக்க பேசிய விதத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது வாழை என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

மேலும் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இதனைத்தொடர்ந்து தனுஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதன் பின்னர், மாரி செல்வராஜ் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தையும், நடிகர் ரஜினிகாந்துடன் ஒரு படத்தையும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களை வைத்து படம் இயக்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'மின்மினி' படத்தின் இசைக்கு நல்ல வரவேற்பு.. முதல் படத்திலேயே கலக்கிய ரஹ்மான் மகள்! - Khatija rahman

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.