சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சூரி, கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான 'விடுதலை முதல் பாகம்' திரைப்படத்திற்கு பிறகு கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இனிமேல் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பத்தில்லை என்றே முடிவெடுத்துள்ளார். கனமான நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார் சூரி.
விடுதலை திரைப்படத்திற்கு பிறகு 'கருடன்', 'கொட்டுக்காளி' ஆகிய படங்கஇல் நடித்திருந்தார். கொட்டுக்காளி திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாரட்டு பெற்றது. சூரியின் நடிப்பும் மக்களால் கொண்டாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தற்போது 'மாமன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபலமான விலங்கு வெப் சீரிஸின் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கி வருகிறார். 'கருடன்' படத் தயாரிப்பு நிறுவனமான லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். 'மாமன்' படப்பிடிப்பு தளத்திற்கு சிவகார்த்திகேயன் வந்த வீடியோவை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். அப்பதிவில், 'மாமன்' படப்பிடிப்பு தளத்திற்கு வந்து அன்பை பகிர்ந்ததற்கு நன்றி தம்பி சிவகார்த்திகேயன் என குறிப்பிட்டுள்ளார்.
Thanks a lot Thambi @Siva_Kartikeyan for spreading your love and gracing us with your presence on the #Maaman sets. Your aura brought so much happiness and joy to all of us.❤️ pic.twitter.com/qDVtk8PE7R
— Actor Soori (@sooriofficial) April 11, 2025
சிவாகார்த்திகேயன் சூரியை அண்ணன் என்றே அழைத்து வருகிறார். 'மாமன்' படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் சூரி, ராஜ்கிரண் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரிடமும் நேரம் ஒதுக்கி சிவகார்த்திகேயன் பேசுவதை வெளியான வீடியோவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். முன்னதாக சூரி நடித்த 'கொட்டுக்காளி' திரைப்படத்தை சிவகார்த்தியேன் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த காலத்தில் அவருடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் அதிகம் நடித்தது சூரி தான். சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணிக்கென்று தனி ரசிகர் கூட்டம் இன்றும் இருக்கிறது. ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’சீமராஜா’ என பலரின் விருப்ப பட்டியலில் இந்த கூட்டணியின் படங்கள் உண்டு. கடைசியாக இருவரும் ’டான்’ திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
அதன் பிறகு தற்போது படப்பிடிப்பு தளத்திலேயே இருவரும் சந்தித்துள்ளனர். மீண்டு இணைந்து நடிக்க வாய்ப்பிருக்கிறதா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ’மாமன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. கதாநாயகியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்கிறார்.
இதையும் படிங்க: ’பெருசு’, ’எமகாதகி’, ’சாவா’, ‘ஜென்டில்வுமன்’ என இந்த வார ஓடிடியில் குவியும் படைப்புகள்!
Actor @Siva_Kartikeyan made a surprise visit to our @sooriofficial's #Maaman sets! What a delightful day filled with laughter and fun on the set 😀
— LARK STUDIOS (@larkstudios1) April 11, 2025
Directed by @p_santh
A @HeshamAWmusic Musical
Produced by @kumarkarupannan @larkstudios1 _ #RajKiran @AishuL #Swasika pic.twitter.com/Tfvwamrnj5
ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்யன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு, 'ஹிருதயம்', 'குஷி', 'ஹாய் நானா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த மலையாள இசையமைப்பாளர் ஹெஷேம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்.
விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கற்றுது தமிழ் ராம் இயக்கத்தில் சூரி, நிவின் பாலி இணைந்து நடித்த ’ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்னும் வெளியாகவில்லை.