ETV Bharat / entertainment

கேரள முதல்வர் பினராயி விஜயனைப் புகழ்ந்த சிவகார்த்திகேயன்... ‘மறக்க முடியாத நினைவு’ என நெகிழ்ச்சி பதிவு! - SIVAKARTHIKEYAN SPEECH

Sivakarthikeyan at Kerala: கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றியுள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன்
சிவகார்த்திகேயனுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் (@Siva_Kartikeyan X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : April 15, 2025 at 5:11 PM IST

2 Min Read

கண்ணூர்: கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பினராயி ஊரின் கலாசார மரபுகளையும் பிரதிபலிக்கும் வகையில் ’பினராயி பெருமா’ நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெறும். இந்தாண்டுக்கான பினராயி பெருமா நிகழ்வு கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றிருந்தார்.

அங்கு நிகழ்வுக்கு முன்பு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார். இது குறித்த தனது முகநூல் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். அதில், “கண்ணூர், பினராயி பகுதீல் நடைபெற்ற பினராயி பெருமா கலை மற்றும் கலாச்சார விழாவில் அழைப்பின் பெயரில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

கேரளாவின் மாண்புமிகு முதலமைச்சர் திரு.பினராயி விஜயன், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. முஹம்மது ரியாஸ், மாண்புமிகு சபாநாயகர் திரு. A. N. ஷம்சீர், நடிகர் ஆசிஃப் அலி, மற்றும் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ‘தி இந்து’ திரு.ராம் இவர்கள் அனைவருடனும் மேடையைப் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. கேரள மக்களின் அன்பும், அரவணைப்பும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த மறக்க முடியாத நினைவுகளுக்கு மிக்க நன்றி” என பகிர்ந்துள்ளார்.

இந்த நிகழ்வில் சிவகார்த்திகேயன், “இன்று மதியம் முதலமைச்சரை அவரது வீட்டில் சந்தித்தேன். எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம், மகிழ்ச்சி என்னவென்றால் நான் அவருடன் அமர்த்து குடும்பத்தைப் போல உணவருந்தினேன். மிக மகிழ்ச்சியாக இருந்தது. மேடையில் இருக்கக்கூடிய அனைத்து பெரியவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நான் முதன்முதலாக பினராயி பெருமா நிகழ்விற்கு வருகிறேன்.

இந்த நிகழ்விற்கு வந்ததில் ரொம்பவே மகிழ்ச்சி. நான் இவ்வளவு நாட்களாக முதலமைச்சருடைய பெயர்தான் பினராயி என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது தான் அது இந்த ஊரின் பெயர் என தெரிந்தது. 'பொறந்த ஊருக்குப் பெருமை சேரு. வளர்ந்து நாட்டிற்குப் புகழைச் சேரு' என சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'முரட்டுக்காளை' படத்தில் ஒரு பாடல் இருக்கிறது.

அந்த வரிகள் எவ்வாறு உண்மை என முதலமைச்சரை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். ஓர் ஊரின் பெயரைத் தாங்கி இன்று ஒரு உதாரணமாக மாறியிருக்கார். முதல் முறையாக விஷு பண்டிகை கொண்டாடப்படும் நேரத்தில் நான் கேரளாவில் இருக்கிறேன். நீங்கள் அதனை எப்படி கொண்டாடுகிறீர்கள் என்பதையும் பார்க்கிறேன். என்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் கொடுக்கிற அன்புக்கும் வரவேற்புக்கும் நன்றி.

அதிலும் 'அமரன்' திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். அதற்கு மிகப்பெரிய நன்றி. இந்த ஊரைச் சேர்ந்த இந்து ரேபாக்கா வர்க்கீஸ் பற்றிய திரைப்படம். மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி அவர். அவருடைய உறுதியைப் பார்க்கும்போது கேரள பெண்களின் உறுதியை தெரிந்துகொள்ள முடிகிறது. நான் இப்போது எங்கு சென்றாலும் என்னை மம்முட்டி என்று தான் அழைக்கிறார்கள்.

கலை மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடக்கூடிய ஒரு ஊர் சிறப்பானதாக இருக்கும். அதனால் தான் கேரளா சிறப்பான மாநிலமாக இருக்கிறது. கலையையும் பண்பாட்டையும் கொண்டாடும் வகையில் இந்த 'பினராயி பெருமா' நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள். இப்படியான விஷயம் எனக்கு ஊக்கம் கொடுக்கீறது. இன்று இந்தியா முழுவதும் பலரும் ரசிக்கிற சினிமாவாக மலையாள சினிமா இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய்யின் ’ஜன நாயகன்’ படத்தில் இணையும் ராப் பாடகர் ஹனுமன்கைண்ட்!

கடந்த மாதம் கூட நடிகர் கமல்ஹாசன் பேசும்போது 'கேரளாவை பாருங்கள். அனைவருடைய நடிப்பும் அற்புதமாக இருக்கும். பெரிய கதாபாத்திரம், சின்ன கதாபாத்திரம் என்கிற விஷயத்தையெல்லாம் தாண்டி அனைவரின் நடிப்பும் நன்றாக இருக்கும்' எனன சொன்னார். அதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் தனித்துவம் வாய்ந்த சினிமாத்துறை இது” என பேசினார்.

முன்னதாக உரையாற்ற ஆரம்பிக்கும் முன் மலையாளத்தில் பேச ஆரம்பித்தார். பின்பு நான் மலையாளத்தில் பேசினால் உங்கள் மலையாளம் மறந்து விடும் என நகைச்சுவையாக கூறி முழுக்க தமிழில் உரையாற்றினார் சிவகார்த்திகேயன்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.