சென்னை: தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரீஷ் கல்யாண். ’பார்க்கிங்’, ’லப்பர் பந்து’ என அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களைத் தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ’டீசல்’. மிக நீண்ட நாட்களாக உருவாகி வரும் இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். ’அடங்காதே’ படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி இப்படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் ஹரீஷ் கல்யாணுடன் அதுல்யா ரவி, வினய், கருணாஸ், அனன்யா, விவேக் பிரசன்னா உடபட பலர் நடிக்கின்றனர். எம்.எஸ்.பிரபு, ரிச்சர்ட் எம் நாதன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். ஹரீஷ் கல்யாண் படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக ’டீசல்’ உள்ளது. தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட் வழங்க, எஸ்.பி. சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படம் மூலம் ஹரீஷ் கல்யாண் முதல்முறையாக முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் நடிக்கிறார். ‘டீசல்’ படத்திலிருந்து முதலில் வெளியான ’பீர் சாங் சமூக’ வலைதளங்களில் வைரலாகி பல்வேறு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாகிராமில் அந்த பாடலை பயன்படுத்தாமல் ரீல் செய்யாதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு பிரபலமானது.
தற்போது ’டீசல்’ படத்திலிருந்து இரண்டாவது பாடல் ’தில்லுபரு ஆஜா’ வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிலம்பரசன் மற்றும் பாடகர் ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். சிலம்பரசனின் குரலில் வெளியாகிருக்கும் இப்பாடல் கேட்பதற்கு ஆட்டம் போட வைக்கும் பாடலாக உள்ளது. சிம்புவின் குரலில் அவ்வளவு எனர்ஜியாக இப்பாடல் ஒலிக்கிறது. ஒருவேளை இது ஹரீஷ் கல்யாணின் ஒப்பனிங் பாடலாக இருக்கலாம். அந்தளவிற்கு பாடலும் நடனமும் அமைந்துள்ளன.
இதையும் படிங்க: விரைவில் தொடங்கவிருக்கும் ‘மரகத நாணயம் 2’... மாஸ் அப்டேட் தந்த நடிகர் ஆதி
சாமானியனின் வாழ்க்கையில் நடக்கும் ஆக்ஷன் சம்பவங்களை சொல்லும் கதையாக இருக்கும் என இப்படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி முன்பே கூறியுள்ளார். ’டீசல்’ திரைப்படம் இவ்வருடம் மார்ச் மாதம் வெளியாக வாய்ப்புகள் உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சிம்பு சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Happy Birthday, STR na! @SilambarasanTR_ ❤️🤗
— Harish Kalyan (@iamharishkalyan) February 3, 2025
You’ve been a true inspiration to me..your incredible versatility and talent have always pushed me to explore my own potential. You have always supported and loved me like a brother & it means the world.
Oru surprise on the way &… pic.twitter.com/RlmCPhr1GF
சிம்பு ரசிகர்களையும் ஹரீஷ் கல்யாண் ரசிகர்களையும் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது இப்பாடல் என இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஹரீஷ் கல்யாண் நடிப்பில் ’நூறு கோடி வானவில்’ திரைப்படமும் இன்னும் வெளியாகாமல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.