சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை (ஏப்ரல் 10) சென்னை விமான நிலையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி பேசுகையில், “’ஜெயிலர் 2’ திரைப்படம் படப்பிடிப்பு நன்றாக சென்று கொண்டிருக்கிறது.
குமரி அனந்தன் ஒரு தூய்மையான அரசியல்வாதி, நல்ல மனிதர். அவரின் குடும்பத்தாருக்கு என்னுடைய என்னுடைய அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயிலர் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியுள்ளோம். எப்போது முடியும் என தெரியவில்லை. கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
மேலும் இன்று வெளியாகியுள்ள அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் குறித்து கேட்டபோது, ”அதற்கு எனது வாழ்த்துக்கள் கடவுள் ஆசிர்வதிப்பார்” என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார் புறப்பட்டு சென்றார். முன்னதாக ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது.
மேலும் இந்தப் படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவையை அடுத்த கேரளா மாநிலம் சோலையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்த ரஜினிகாந்த் அங்கும் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அளித்த பேட்டியில், ”ஜெயிலர் 2 படத்தின் படப்பிற்காக வந்திருப்பதாகவும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என கூறினார். கோவை சுற்றி புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் பண்டிகை கொண்டாட்டத்திற்கு திரும்பிய திரையரங்குகள்... அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் கொண்டாட்டம்!
கோவை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் வந்தவுடன் திரண்டு இருந்த ரசிகர்கள் தலைவா, தலைவா, என குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர். பின்னர் காரில் ஏறியவாறு கையசைத்து ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். விமான நிலையத்தில் இருந்து ஆனைகட்டி செல்லும் ரஜினிகாந்த் அங்குள்ள சச்சிதானந்தா சுவானி ஆசிரமத்தில் தங்கி இருந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.