தருமபுரி: மலையாள திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான ஷைன் டாம் சாக்கோ குடும்பத்துடன் விபத்தில் சிக்கினார். இதில் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தமிழில் குட் பேட் அக்லி, பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள ஷைன் டாம் சாக்கோ, மலையாள திரையுலகின் முக்கிய நடிகராக அறியப்படுகிறார். இவர் தனது குடும்பத்துடன் மருத்துவ சிகிச்சைகாக கேரளா திருச்சூரில் இருந்து பெங்களுரு நோக்கி ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த பாறையூர் அருகில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் மீது மோதி பெரும் விபத்துக்குள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சி.பி.சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவல்துறையினர் உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஷைன் டாம் சாக்கோவின் தந்தையின் உடலை பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் காயம் அடைந்த நடிகர் ஷைன் தாம் தாகோ அவரது தாய் மற்றும் அவரது சகோதரரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஷைன் டாம் சாக்கோ, அவரது தாய் மரியா கார்மல் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரும் விபத்தில் காயமடைந்துள்ளனர்.
அவர்களை காவல்துறையினர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காயமடைந்த ஷைன் டாம் சாக்கோவிற்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவருக்கு கைகளில் அதிக அளவு வலி இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அவரை எக்ஸ்ரே பரிசோதனை செய்தனர் அதில் அவரது கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. மேலும் ஷைன் டாம் சாக்கோவின் தாயார் மரியா கார்மலுக்கு விபத்தில் இடுப்பு எலும்பு விலகியுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இருவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷைன் டாம் சாக்கோ குடும்பத்தினரை தர்மபுரி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் சாந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனையடுத்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் அவரது தாயார் இவர்கள் மூன்று பேரும் மேல் சிகிச்சைக்காக சொந்த ஊரான திருச்சூருக்கு தனியார் அவசர சிகிச்சை வாகனத்தில் சென்றனா்.
இதையும் படிங்க: சூப்பர் ஹீரோ கதையை இயக்கும் லோகேஷ் கனகராஜ்... அப்டேட் கொடுத்த அமீர்கான்!
இந்நிலையில் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட ஷைன் டாம் சாக்கோ தந்தையின் உடல் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வந்துள்ளனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்து உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பான புகாரில் சிக்கினார். அந்த செய்தியின் மூலம் மலையாள திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகின. இதற்கிடையில், உடல் நலமில்லாமல் ஷைன் டாம் சாக்கோ சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.