ETV Bharat / entertainment

ரூ.21.29 கோடி கடன்... 30% வட்டி... நடிகர் விஷாலுக்கு உத்தரவு போட்ட நீதிமன்றம்! - VISHAL VS LYCA PRODUCTIONS CASE

லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21.29 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நடிகர் விஷால்
நடிகர் விஷால் (X /@VishalKOfficial)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 5, 2025 at 1:44 PM IST

1 Min Read

சென்னை: நடிகர் விஷால் தரப்பு, லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன், வழக்குச் செலவு தொகையையும் சேர்த்து தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த ஒப்பந்தத்தை மீறி படங்களை வெளியிட்டதால், பணத்தை திருப்பித் தர உத்தரவிடக் கோரி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ரூ.15 கோடி ரொக்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்தது.

இந்நிலையில், முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷாம், உயர் நீதிமன்ற உத்தரவின் படி பணத்தை செலுத்தாததாலும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததாலும், நேரில் ஆஜராக விஷாலுக்கு உத்தரவிடப்பட்டிருந்தார். அதன்படி, அவரும் நேரில் ஆஜரானார். அவருக்கு உயர் நீதிமன்றம் கண்டனமும் தெரிவித்திருந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, சொத்து விவரங்களை விஷால் தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: “இங்கிட்டு வேணாம், அங்கிட்டு கொடுங்க” தஞ்சையில் நூதன முறையில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்!

அதில் 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்குகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனக்குச் சொந்தமான வீட்டின் கடன் தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூன் 5) மீண்டும் நீதிபதி பி.டி.ஆஷாம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடனும், வழக்குச் செலவு தொகையையும் லைகா நிறுவனத்துக்கு விஷால் தரப்பு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.