சென்னை: லோகேஷ் கனகராஜ் கதை எழுதி தயாரிக்கும் திரைப்படமான ’பென்ஸ்’ திரைப்படத்தில் நடிகை மடோனா செபாஸ்டியன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி நடிக்கக்கூடிய ’பென்ஸ்’ திரைப்படத்தை ‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகியப் படங்களின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ படத்தின் வெற்றி மூலம் 'LCU' என்றழைக்கப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெஸ் (Lokesh Cinematic Universe) எனும் புதிய சினிமா உலகத்தை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார்.
கார்த்தியின் ’கைதி’, கமல்ஹாசனின் ’விக்ரம்’ மற்றும் விஜய்யின் ’லியோ’ ஆகிய திரைப்படங்கள் இந்த 'LCU' சினிமா உலகத்திற்குள் கட்டமைக்கப்பட கதைக்களம், கதாபாத்திரங்களால் உருவாக்கப்பட்டது. இதைப் பற்றிய சிறு தகவல் கூட ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ’பென்ஸ்’ திரைப்படத்தில் நிவின் பாலி வில்லனாக நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு வெளியிட்டது. வால்டர் என்ற கதாபாத்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நிவின் பாலி குரூரமான வில்லனாக இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை க்ளிம்ஸ் வீடியோ மூலம் அறிவித்தனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள தகவல் 'LCU' யூனிவர்ஸ் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்த்தியுள்ளது. பென்ஸ் திரைப்படத்தில் மடோனா செபாஸ்டியன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான லியோ திரைப்படத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்திருந்த எலிசா தாஸ் கதாபாத்திரத்தில் தான் பென்ஸ் திரைப்படத்திலும் வருகிறார் என கூறப்படுகிறது.
ஏற்கனவே பென்ஸ் திரைப்படமானது 'LCU' யூனிவர்ஸ் திரைப்படம் என கூறப்பட்டுள்ளதால் இந்த கதை லியோவில் கூறப்பட்ட கதைக்கும் முந்தைய கதையாக இருக்கும் என தெரிகிறது. மடோனோ செபாஸ்டியன் மட்டுமல்லாமல் சம்யுக்தா மேனன், பிரியங்கா மோகன் ஆகியோரும் பென்ஸ் திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மானின் நிகழ்ச்சியை டிக்கெட் வாங்கியும் காண முடியாதவருக்கு ரூ.55,000 இழப்பீடு! நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு உத்தரவு!
லியோ திரைப்படத்திற்கும் பென்ஸ் திரைப்படத்திற்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லாவிட்டாலும் 'LCU' யூனிவர்ஸின் பல தொடர்புகள் இந்த கதையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி நட்சத்திர நடிகர்களாக இருக்கக்கூடியவர்கள் எல்லோரும் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது என்பது பெரியளவில் சாத்தியமில்லாமல் இருந்த நிலையை இந்த 'LCU' சினிமா உலகம் இதனை சாத்தியப்படுத்தியுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து பென்ஸ் படத்தை தயாரிக்கின்றன.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.