சென்னை: தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த நடிகராக கொண்டாடப்படுபவர் கமல்ஹாசன். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநர், திரை எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமைகளையும் மிகச்சிறப்பாக செய்து காட்டக்கூடியவர். தமிழ் திரையுலகில் அனைவராலும் மறுப்பேதுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் மிகப்பெரும் ஆசிரியர் என்றே கமல்ஹாசனை குறிப்பிடலாம்.
நடிப்பு, இயக்கம் என அவர் பங்காற்றக்கூடிய எதிலும் பரிசோதனை முயற்சிகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு மக்களிடையே கொண்டு சேர்ப்பவர் கமல்ஹாசன். சினிமாவில் பயன்படுத்தப்படும் கண்டுபிடிக்கப்படும் புதிய புதிய தொழில்நுட்பங்களையும் தமிழ் சினிமாவில் முதன் முறையாக பரிசோதித்து பார்த்து பயன்படுத்தக் கூடியவர் கமல்ஹாசன் தான்.
மௌன படம், டிடிஎஸ் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் சினிமா என சினிமாவின் அடுத்த கட்டத்தை அவரே முன்னெடுத்திருக்கிறார். பின்னால் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப மேம்பாடுகளையும் முன்னமே கனித்து கூறியுள்ளார் கமல்ஹாசன்.
From cinema to Silicon, the tools evolve—but our thirst for what’s next remains. Inspired by my visit to Perplexity HQ in San Francisco, where Indian ingenuity shines through @AravSrinivas and his brilliant team building the future—one question at a time.
— Kamal Haasan (@ikamalhaasan) April 10, 2025
Curiosity didn’t kill… pic.twitter.com/7Xe1WyIawC
தற்போது மக்களிடையே மிக இயல்பாக மாறியுள்ள ஓடிடி கலாச்சாரம் குறித்தும் கைபேசியிலேயே படம் பார்ப்பது குறித்தும் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் சொன்னபோது யாரும் நம்பவில்லை. திரையரங்க அனுபவத்திற்கு எதிராக பேசுகிறார் என கடுமையாக அதனை எதிர்த்தனர். ஆனால் தற்போது அது நடந்திருக்கிறது.
அடுத்தகட்டமாக தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு என்றழைக்கப்படும் ஏஐ (Artificial intelligence) தொழில்நுட்பத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் கமல்ஹாசன். சமீபத்தில் கூட அமெரிக்காவிற்கு சென்று ஏஐ தொடர்பாக படித்து விட்டு திரும்பினார் கமல்ஹாசன்.
இந்நிலையில் மீண்டும் அமெரிக்கா சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள பெர்ப்ளெக்ஸிட்டி (Perplexity) எனும் ஏஐ தொழில்நுட்ப நிறுவனத்தின் CEO அரவிந்த் ஸ்ரீனிவாஸனை சந்தித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ”சினிமா டூ சிலிக்கன். தொழில்நுட்பங்கள் தொடர்ந்து மேம்பட்டு கொண்டே இருக்கிறது.
அடுத்த என்ன என்பது எப்போதும் உத்வேகம் அளிக்கக்கூடியது. இந்தியர் ஒருவர் தலைமை வகிக்கும் பெர்ப்ளெக்ஸிட்டி தலைமையகத்திற்கு சென்றதால் நான் மேலும் உத்வேகம் அடைந்தேன். வருங்காலத்தை கட்டமைக்கும் சிறப்பான குழுவிற்கு தலைமை வகிக்கும் அரவிந்த் ஸ்ரீனிவாசனை சந்தித்தேன் என குறிப்பிட்ட்டுள்ளார்.
The brightest minds of the creator economy in Media, Entertainment, AI, Sports, and Technology are converging at the #NABShow2025 in Las Vegas.
— Raaj Kamal Films International (@RKFI) April 7, 2025
And leading the way — the OG disruptor, @ikamalhaasan — a visionary who shaped the future long before others imagined it.#NABShow2025… pic.twitter.com/WhqGEyRD7a
ஏஐ தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் வேகசில் நடைபெற்ற சினிமா தொடர்பான அனைத்துலக தொழில்நுட்பக் கண்காட்சியில் கமல்ஹாசன் கலந்துகொண்டிருந்தார். ஏஐ தொழில்நுட்பங்கள் கலைத்துறையில் எவ்வாறு செயல்படவுள்ளன என்பது பற்றி இவ்வாண்டு நிகழ்ச்சியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கற்றுக்கொண்டே இருக்கும் கமல்ஹாசன், தனது திரை வாழ்வில் நிறைவு செய்யாமல் விட்ட ’மருதநாயகம்’, ’மர்மயோகி’ போன்ற பல்வேறு படங்களை ஏஐ தொழில்நுட்பம் மூலம் மீண்டும் உருவாக்குவாரா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: இந்த ஆண்டின் அதிக வசூல் அஜித்தின் ’குட் பேட் அக்லி’ தான்... முதல் நாள் வசூல் நிலவரம்
தற்போது கமல்ஹாசன் தனது 234வது படமான ‘தக் லைஃப்’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியுள்ளார். 37 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இந்தியன் 3’திரைப்படத்தில் எஞ்சியுள்ள காட்சிகளில் நடிக்க இருக்கிறார். இதுதவிர ஆக்ஷன் இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.