ETV Bharat / entertainment

‘நீங்க தவறா புரிஞ்சுகிட்டது’ என் தப்பு இல்ல - கன்னட மொழி விவகாரம் குறித்து கமல்ஹாசன் விளக்கம்! - KAMAL HAASAN PRESS RELEASE

Kamal Haasan Press Release: கன்னட மொழி குறித்து தனது கருத்து சர்ச்சையான நிலையில் தற்போது விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் (@RKFI X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : June 3, 2025 at 2:23 PM IST

2 Min Read

சென்னை: 'தக் லைஃப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் “தமிழில் இருந்து வந்தது தான் கன்னடம்” என கமல்ஹாசன் பேசியதைத் தொடர்ந்து அவருக்கு கர்நாடகா முழுவதும் தீவிரமாக எதிர்ப்பு எழுந்து வருகிறது. மேலும் கமல்ஹாசன் தன்னுடைய கருத்திற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடாகாவில் வெளியிட மாட்டோம் என கர்நாடகா திரைப்பட சம்மேளம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் தனது கருத்து குறித்து விளக்கம் தெரிவித்து கர்நாடகா திரைப்பட சம்மேளனத்தைக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கர்நாடக மக்கள் மீதுள்ள ஆழ்ந்த மரியாதையின் காரணமாக, நான் பின்வருவனவற்றை நேர்மையுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

'தக் லைஃப்' இசை வெளியீட்டு விழாவில் நான் கூறிய கருத்து டாக்டர் ராஜ்குமார் குடும்பத்தின் மீதும், குறிப்பாக சிவராஜ்குமார் மீதும் உள்ள உண்மையான அன்பினால் கூறப்பட்டது. ஆனால் அந்த கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு பொருத்தமில்லாத வகையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்பது வேதனையளிக்கிறது.

நாம் அனைவரும் ஒன்று என்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கவே நான் விரும்பினேன். எந்த விதத்திலும் கன்னட மொழியை குறைத்து மதிப்பிடும் நோக்கில் கூறவில்லை. கன்னட மொழியின் வளமான மரபு குறித்து எந்த சந்தேகமும் இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் பெருமைமிகு இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.

அதனை நான் நீண்டகாலமாக மதித்து வருகிறேன். என் வாழ்க்கை முழுவதும், கன்னட மொழி பேசும் மக்கள் எனக்கு வழங்கிய அன்பையும் பாசத்தையும் நான் பொக்கிஷமாக நன்றியுடன் நினைக்கிறேன்.கன்னட மொழியின் மீதான என் அன்பு உண்மையானது. கன்னடர்கள் தங்கள் தாய்மொழியின் மீது கொண்டுள்ள அன்பினை மிகுந்த மரியாதையோடு பார்க்கிறேன்.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் - மற்றும் இந்த நாட்டின் அனைத்து மொழிகளுடனும் எனது பந்தம் மனமார்ந்தது மற்றும் நிலையானது. இந்திய மொழிகள் அனைத்திற்குமான சம மரியாதைக்காக நான் எப்போதும் நின்றுள்ளேன். மேலும் ஒரு மொழியின் ஆதிக்கத்திற்கு திணிப்பதற்கும் எதிர்த்து வந்துள்ளேன்.

ஏனெனில் அத்தகைய சமநிலையின்மை இந்திய ஒன்றியத்தின் மொழியியல் கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது. என்னுடைய மொழி சினிமா, அதைத்தான் நான் பேசுகிறேன். சினிமா என்பது அன்பையும் பந்தத்தையும் மட்டுமே அறிந்த உலகளாவிய மொழியாகும். நம் அனைவருக்கும் இடையிலான உறவையும் ஒற்றுமையையும் வலியுறுத்தவே அந்த கருத்தை கூறினேன்.

இதையும் படிங்க: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேச்சு - கர்நாடக நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் என்ன?

என் மூத்தவர்கள் எனக்குக் கற்றுக்கொடுத்த இந்த அன்பையும் உறவினையும் நான் பகிர்ந்துகொள்ள விரும்பினேன். இந்த அன்பிலும் உறவிலும் தான் சிவராஜ்குமார் இசை வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டார். என்னுடைய கருத்தின் காரணமாக சிவன்னா (சிவராஜ்குமார்) சந்தித்த சங்கடத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன்.

ஆனால் எங்களுக்கிடையிலான உண்மையான அன்பும் மரியாதையும் எப்போதும் நிலைத்திருக்கும். இதன் பின் மேலும் வலுவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சினிமா மக்களுக்கிடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். அவர்களை பிரிக்கும் சுவராக இருக்கக் கூடாது. இதுவே என்னுடைய கருத்தின் நோக்கமாக இருந்தது.

நான் ஒருபோதும் பொது அமைதியின்மைக்கும் வெறுப்பிற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. இனியும் விரும்ப மாட்டேன். என் வார்த்தைகளின் உண்மையான உணர்வு ஏற்றுக்கொள்ளப்படும். இந்த தவறான புரிதல் தற்காலிகமானது, நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு இது தான் வாய்ப்பு என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் கமல்ஹாசனும் பல்வேறு சூழ்நிலைகளில் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை மறைமுகமாகவும் நேரடியாகவும் திட்டவட்டமாக தெரிவித்து வந்தார். ’தக் லைஃப்’ திரைப்படத்தை கர்நாடகவில் பிரச்சனையில்லாமல் வெளியிடுவதற்கு அவர் அளித்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கமல்ஹாசனின் இத்தகைய விளக்கம் பட வெளியீட்டை சுமுகமாக மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உட்பட பலர் நடித்துள்ள ’தக் லைஃப்’ திரைப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.