ETV Bharat / entertainment

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாரா சிம்பு? மேலாளர் சொன்ன பிரத்யேக தகவல்! - bigg boss season 8

Actor Silambarasan hosting Bigg Boss: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், நடிகர் சிம்பு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக ரசிகர் மத்தியில் பரவலாக கூறப்பட்டது. இதுகுறித்து அவரது மேலாளர் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக தகவலை இங்கு காணலாம்.

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 7, 2024, 8:04 PM IST

நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் கமல்ஹாசன்
நடிகர்கள் சிலம்பரசன் மற்றும் கமல்ஹாசன் (Credits - Actor Silambarasan 'X' page)

சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்தியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, கடந்த 2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டது. இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறையைச் சார்ந்த பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் இருக்கும் இந்த நிகழ்ச்சி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து விலகுவதாக நேற்று அவர் அறிவித்திருந்தார்.

நடிகர் கமல்ஹாசன் தக் லைஃப், கல்கி 2ஆம் பாகம், இந்தியன் 3 உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்ட நிலையில், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகியது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் (Disnep Plus Hotstar) 24 மணி நேரமும் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் தற்காலிகமாக விலகியபோது நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக ரசிகர்கள் பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து எமது செய்தியாளர் நடிகர் சிம்புவின் மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, "நடிகர் சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக வரும் தகவலில் உண்மையில்லை. இதுகுறித்து யாரும் தொடர்பு கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்த ஆண்டு நடைபெற உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை நடிகர் விஜய் சேதுபதி அல்லது நடிகர் சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் தொகுத்து வழங்க உள்ளதாகவும் ரசிகர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. மேலும், ஏற்கனவே நிகழ்ச்சியை தொகுத்த ரம்யா கிருஷ்ணனின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'அவெஞ்சர்ஸ்' படத்திற்காக பிரமாண்ட ஹாலிவுட் இயக்குநருடன் இணையும் தனுஷ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.