சென்னை: நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலிவுட்டில் 3 படங்கள், தென்னிந்திய சினிமாவில் தங்கலான், டிமாண்டி காலனி, டபுள் ஐஸ்மார்ட் ஷங்கர் உள்ளிட்ட 8 படங்கள் வெளியாகிறது.
தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். சுதந்திரத்திற்கு முன்னதாக கோலார் தங்கச் சுரங்கத்தில் மக்கள் சந்தித்த பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் மினுக்கி, தங்கலானே ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், நாளை தங்கலான் திரைப்படம் தியேட்டரில் வெளியாகவுள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது. முன்பதிவில் இந்திய அளவில் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் என்ற மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள தங்கலான் திரைப்படம், விக்ரம் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிமாண்டி காலனி 2: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டிமாண்டி காலனி 2’. டிமாண்டி காலனி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. டிமாண்டி காலனி முதல் பாகம் வெளியான போது படம் முழுவதும் ரசிகர்களுக்கு முழு திகிலூட்டும் அனுபவத்தைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து, டிமாண்டி காலனி 2 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்டிரி 2 (Stree 2): ராஜ்குமார் ராவ், ஸ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி நடிப்பில் உருவாகி நாளை வெளியாகவுள்ள பாலிவுட் திரைப்படம் ‘ஸ்டிரி 2’. பிரபல சினிமா வர்த்தக நிறுவனம் சாக்னில்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டிக்கெட் முன்பதிவில் 13 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும், முதல் நாளில் இப்படம் ரூ.50 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேல் கேல் மேய்ன் (khel khel mein): அக்ஷய் குமார், வாணி கபூர், டாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள பாலிவுட் படம் ‘கேல் கேல் மேய்ன்’. சாக்னில்க் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 15,000 டிக்கெட் விற்றுள்ளதாகவும், முதல் நாளில் 9 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிஸ்டர் பச்சன் (Mr.bachchan): நடிகர் ரவி தேஜா, பாக்யாஸ்ரீ போர்ஸ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் நாளை வெளியாகும் தெலுங்கு திரைப்படம் ‘மிஸ்டர் பச்சன்’. இப்படம் டிக்கெட் முன்பதிவில் ரூ.30 லட்சம் வசூலித்துள்ளதாகவும், முதல் நாள் ரூ.8 கோடி முதல் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விஜய், அஜித் போன் கால், 'கோட்' படம் பற்றி அஜித் கூறியது என்ன?... வெங்கட் பிரபு கூறிய சுவாரஸ்ய தகவல்கள்! - Venkat Prabhu about GOAT Movie