சென்னை: ஐபிஎல் வரலாற்றில் முதன் முறையாக ஆர்சிபி அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று (ஜூன் 3) அகமதபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கோப்பையே வெல்லாத அணியாக இருந்த பெங்களூர் அணி, முதல் முறையாக தனது கோப்பை கனவை நிறைவேற்றியுள்ளது. பெங்களூர் அணி ரசிகர்கள் சிறப்பான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோப்பை வென்றுள்ள பெங்களூர் அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் திரை பிரபலங்களான இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன், சிவராஜ்குமார் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Congratulations @RCBTweets on your first ever @IPL trophy!! #IPL2025 well fought @PunjabKingsIPL https://t.co/1FdzHxASBd
— venkat prabhu (@vp_offl) June 3, 2025
இயக்குநர் வெங்கட் பிரபு, உங்களது முதல் ஐபிஎல் கோப்பைக்கு வாழ்த்துகள் ஆர்சிபி. பஞ்சாப் அணியினர் கடுமையாக போராடினர் என தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு மே மாதம் 3ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏற்கனவே அவர் இட்டிருந்த பதிவை பகிர்ந்து இந்த வாழ்த்தை தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து பதிவில், "கோப்பை வென்ற பெங்களூர் அணிக்கு வாழ்த்துகள். ஆச்சரியங்கள் நிறைந்த இந்த தொடரில் சிலிர்ப்பூட்டும் முடிவு இது. விராட் கோலி நீங்கள் பல வருடங்களாக இந்தக் கனவைச் சுமந்து வருகிறீர்கள். இன்றிரவு, இந்த கோப்பை உங்களுக்கு உண்மையிலேயே பொருத்தமாக இருக்கிறது.
Well done, @RCBTweets! A thrilling end to a season full of surprises.@imVkohli, you have carried this dream for years and tonight, the crown truly suits you. #KingKohli 👑
— M.K.Stalin (@mkstalin) June 3, 2025
Expecting a strong comeback from @ChennaiIPL next season.#IPLfinal #IPL2025 #RCBvPBKS pic.twitter.com/sOLvpS21rU
அடுத்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி முழு பலத்துடன் மீண்டு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் பெங்களூர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் ’தக் லைஃப்’ வெளியீட்டை தள்ளி வைத்த கமல்ஹாசன்!
விஜய் தேவரகொண்டா தனது பதிவில், பெங்களூர் அணி மற்றும் ஆர்சிபி ரசிகர்களுக்கு வாழ்த்துகள். அதீதமான ஆற்றலோடும் ஆர்வத்தோடும் அன்போடும் இந்த கோப்பைக்காக நீண்ட நாட்கள் காத்துள்ளீர்கள். மகிழ்ச்சியாக உள்ளது.
Congratulations to @RCBTweets, all RCB fans ❤️
— Vijay Deverakonda (@TheDeverakonda) June 3, 2025
you have waited with so much energy and passion and love.
It's a happy happy moment to see.
முன்னதாக இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஆர்சிபி அணி பேட்டிங்க் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை இழந்துள்ள ஆர்சிபி அணி 190ரன்கள் எடுத்தது. இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்கத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தது.
கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மேட்ச்சில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 29 ரன்கள் தேவைப்பட்டபோது ஸ்கோர் 162/7 என இருந்தது. ஆனால் 22 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்றது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.