ETV Bharat / entertainment

பிக்பாஸ் நிகழ்ச்சியை இவர்தான் தொகுத்து வழங்க வேண்டும் - யாரை சொல்கிறார் கூல் சுரேஷ்? - cool suresh about big boss show

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 6:23 PM IST

Cool Suresh: விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொல் திருமாவளவன் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று அந்த நிகழ்ச்சி சார்ந்த ஒருவர் பேசினார். என்ன தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்க தில் வேண்டும் என தோழர் சேகுவேரா திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கூல் சுரேஷ் பேசினார்.

கூல் சுரேஷ்
கூல் சுரேஷ் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை பிரசாத் லேபிளில் 'தோழர் சேகுவேரா' திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (ஆக 10) நடைபெற்றது. இப்படம் வரும் செப் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், படத்தின் தயாரிப்பாளர் அனிஷ் அட்மின் பிரபு, இயக்குநர் அலெக்ஸ், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயளாலர் முத்தரசன், நடிகர் சத்யராஜ், நடிகர் ரவி மரியா, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய கூல் சுரேஷ்,"மேடையில் பேசி கைதட்டல் வாங்கும் அளவுக்கு நான் பெரிய பேச்சாளர் இல்லை. அடுத்த முறை யூடியூப் சூப்பர் ஸ்டார், கூல் சுரேஷ் கட்சித் தலைவர் என்று தன்னை அழைக்குமாறு நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் கேட்டுக்கொண்டார். பூவுடன் சேர்த்து நாரும் மணக்க வேண்டும்.

இது சாதாரண மேடை இல்லை, சகாப்தம் படைக்கும் மேடை, சனாதனத்தை எதிர்க்கும் மேடை, சாமானியனுக்கும் உதவும் மேடை, சரித்திரம் படைக்கும் மேடை. வால்டர் வெற்றிவேல் படத்தை 50வது நாள் நான் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன். அவ்வளவு பெரிய நடிகருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை தற்போது நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க போவதில்லை என்று அறிவித்து விட்டார். அவருக்கு பதில் தொல் திருமாவளவன் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று அந்த நிகழ்ச்சி சார்ந்த ஒருவர் பேசினார். என்ன தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்க தில் வேண்டும். கமல் நல்லவர் தான். செய்தியாளர்களை பார்த்து மாற்றி எதுவும் எழுத வேண்டாம் என்றார்.

மேலும், ஒரு சில டோல் கேட் போனால் என்னுடன் செல்ஃபி எடுத்து கொண்டு பணம் வாங்காமல் விட்டு விடுவார்கள். ஆனால் ஒரு பகுதி டோல்கேட்டில் (விக்கிரவாண்டி என்ற குரலுக்கு இல்லை அது வட மாநிலம் என்று சமாளித்தார்) மட்டும் வர முடியாது. இதை சொன்னால் வழக்குப்பதிவார்கள் என்று கலகலப்பாக பேசினார். மேலும் 2026 இல் கூல் சுரேஷ் கட்சி திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்" என்று பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "துணிச்சலான கொள்கை கூட்டம் சினிமாவுக்கு வர வேண்டும்" - 'தோழர் சேகுவேரா' பட விழாவில் சத்யராஜ் பேசியது என்ன? - Actor sathyaraj

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.