கோயம்புத்தூர்: கோவையில் எனது ஆர்மோனியம் வாசிக்க படாத இடமே இருக்காது. என் அண்ணன் எனக்கு முதன்முதலில் வாங்கி கொடுத்த ஆர்மோனிய பெட்டி கோவையில் செய்ததுதான் என இசைஞானி இளையராஜா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்வு இன்று நடைபெறு உள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஜூன் 6) இளையராஜா கோவை வந்தார். அப்போது அவர் தனியார் நட்சத்திர விடுதியில் விளம்பரதாரர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவருக்கு ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து மேடையில் பேசிய அவர், “நான் பேச்சாளர் அல்ல. நான் ஒரு பாட்டாளி. பாட்டாளி என்பவன் பாடுபவன், பாடுபட்டு வேலை செய்பவன். ஆனால், இங்கே பாடுபட்டு உழைப்பவர்கள் அதிகம் அவர்களின் பாடு வேறு, எனது பாடு வேறு. எங்கெங்கோ சிற்றோடைகள் நதியாக இணைவது போல், இங்கு ஒரு நோக்கத்திற்காக அனைவரும் வந்து ஒன்று கூடியுள்ளீர்கள்.
கோவையில் என் காலடி படாத இடமே கிடையாது. இங்கு எனது ஆர்மோனியம் வசிக்காத இடங்களே கிடையாது. நான் வைத்திருக்கும் ஆர்மோனியம் கோவையில் செய்தது. என் அண்ணன் இங்கேதான் ஒருவரிடம் ஆர்மோனியம் வாங்கினார்.

இதையும் படிங்க: எதிர்ப்பிற்கும் எதிர்பார்ப்பிற்கும் இடையில் வெளியான ’தக் லைஃப்’... முதல் நாள் வசூல் நிலவரம்! |
இப்போது வரை அது என்னிடம் தான் இருக்கிறது. கோவைக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு எப்போது இருக்கும். கோவையை நான் பிரிவது கிடையாது” எனக் கூறினார். இதையடுத்து அவர் அனைத்து விளம்பரதாரர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி
கோவைப்புதுார் ஜி ஸ்கொயர் செவன் ஹில்ஸ் சிட்டி மைதானத்தில், இன்று மாலை 6:00 மணியிலிருந்து இரவு 10:30 வரை இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், 20-க்கும் மேற்பட்ட பாடகர்கள், 40-க்கும் மேற்பட்ட பாடல்களை பாட உள்ளனர். மேலும் இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமர்ந்து ரசிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.