சென்னை: தமிழ் திரையுலகின் மிக முக்கியமான இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், ஹிந்தி, மலையாலம் என இந்திய அளவில் பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஆனாலும் திரைப்பட இசை, ஆல்பம் பாடல்கள் போன்றவற்றால் ‘தமிழ்’ மொழியை உலகறியச் செய்யும் சீரிய பணியினையையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் புத்தாண்டு நாளை முன்னிட்டு, இன்று தமிழ் மொழிக்கான பிரம்மாண்டமான பெருமைச்சின்னம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இந்த பெருமைச் சின்னம் முதலில் டிஜிட்டல் வடிவில் வெளியிடப்படுவதாகவும் பின்பு இதற்கென தனியாக எதிர்காலத்தில் இது கட்டடமாகவும் வரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.
‘ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே’ போன்ற திரைப்பட பாடல்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டிற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ போன்ற பாடல்கள் மூலமாகவும் தமிழ் பெருமையை உலகெங்கும் கொண்டு சென்றுள்ளார்.
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🌸🌹#thamizh #perumaichinnam pic.twitter.com/VNjjDCWIEg
— A.R.Rahman (@arrahman) April 14, 2025
தமிழிற்கு பெருமை சின்னம் அமைக்கப்படுவதைப் பற்றி ஏ.ஆர்.ரகுமான் அறிவித்ததில் இருந்து அனைவரும் இதனை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவரது பாடல் ஒன்றை பாடி வீடியோ மூலம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ’ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’மலர்கள் கேட்டேன்’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் என்ற குழு தமிழ் மொழிக்கான ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழில் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருப்பதாகவும் கூறியுள்ளார். தொன்மையான மொழியான தமிழ் சார்ந்த ஆய்வுகளை ஊக்குவிப்பதற்கும் இதன் மூலம் வாய்ப்புகள் உருவாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மற்றொரு இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி தயாரிப்பில் தமிழி எனும் ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.
‘தமிழ்’ உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.
— A.R.Rahman (@arrahman) April 14, 2025
இப்படி புதுமை குன்றாத நம் தமிழின்… pic.twitter.com/5bY3aEKhy4
இதையும் படிங்க: செப்டம்பரில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'மதராஸி'!
தமிழ் மொழியின் தொன்மையை விளக்கக்கூடிய ஆவணப்படம். அது போன்ற ஒரு படைப்பை ஏ.ஆர்.ரகுமானிடமும் எதிர்பார்க்கலாம். மேலும் அவர் எந்த நிகழ்வுகளுக்கு எங்கு சென்றாலும் இயல்பாக தமிழில் பேசி விடுவார். உலகளவில் உயரிய திரை விருதான ஆஸ்கர் விருதைப் பெற்ற போதும் தமிழில் பேசியே தன்னுடைய உரையை ஆரம்பித்தவர் ஏ.ஆர்.ரகுமான்.