சென்னை: இயக்குரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் இயக்கிய முதல் படம் 'கோமாளி'. ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்த கோமாளி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற பிரதீப் ரங்கநாதன், அடுத்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்தார். இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றதுடன் இவருக்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 70 கோடிக்கு மேல் செய்தது.
இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'love insurance kompany' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பு பெற்றது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி, முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே.சூர்யா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்திற்கு 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என தலைப்பிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து LIC நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தலைப்பு உள்ளதாகவும், தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு தொடருவோம் என படக்குழுவிற்கு எச்சரிக்கை விடுத்தது. இதனைத்தொடர்ந்து படத்தின் தலைப்பு 'love insurance kompany' என மாற்றப்பட்டது.
இதையும் படிங்க: இளம் தலைமுறையின் இசை நாயகன்... ’ராக்ஸ்டார்’ அனிருத் பிறந்தநாள் ஸ்பெஷல்!
இளமை துள்ளும் படமாக உருவாகியுள்ள LIK படத்தில் இருந்து தீமா (Dheema) என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. அனிருத் பிறந்தநாளை ஒட்டி வெளியாகியுள்ள இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். காதல் கொஞ்சும் வரிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'நானும் ரவுடி தான்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படங்களின் வெற்றியை தொடர்ந்து love insurance kompany பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்