சென்னை: சென்னை, ஹைதராபாத் ஐபிஎல் போட்டியை காண அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் சேப்பாக்கம் மைதானம் வந்திருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியா முழுவதும் பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை, ஹைதராபாத் இடையேயான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் பவுலிங் தேர்வு செய்தது. சென்னை அணிக்கு புதிய ஓப்பனிங் ஜோடியாக ரஷித், மாத்ரே ஆகியோர் களமிறங்கினர்.
ஷமி சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தார். ரஷித் டக் அவுட்டானார். இதனையடுத்து களமிறங்கிய சாம் கரண் 9 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் பவர்பிளேவில் 6 பவுண்டரிகள் அடித்த ஆயுஷ் மாத்ரே 30 ரன்களுக்கு அவுட்டானார். இந்த நேரத்தில் ஜடேஜா, டெவால்ட் பிரேவிஸ் ஜோடி அதிரடியாக ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 21 ரன்களுக்கு அவுட்டான நிலையில், பிரேவிஸ் சிக்சர் மழை பொழிந்தார். பிரேவிஸ் 42 ரன்கள் எடுத்த நிலையில், கமிண்டு மெண்டிஸ் அற்புதமான கேட்ச்சில் அவுட்டானார்.
அடுத்து வந்த ஹூடா(22), தோனி (6), சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில், சென்னை அணி 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி ஏமாற்றினார். டிராவிஸ் ஹெட் 19 ரன்களுக்கு அவுட்டான நிலையில், இஷன் கிஷன் அதிரடியாக ரன்கள் சேர்த்தார்.
44 ரன்களுக்கு அவர் அவுட்டான நிலையில், பின்னர் வந்த அனிகேத் வர்மா 19 ரன்களுக்கு நடையை கட்டினார். பின்னர் களமிறங்கிய மெண்டிஸ் (32), நிதிஷ் ரெட்டி (19) ரன்களுக்கு அவுட்டாகாமல் ரன்கள் சேர்த்து ஹைதராபாத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். இப்போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ’பிளே ஆஃப்’ சுற்று வாய்ப்பை சென்னை அணி கிட்டதட்ட இழந்தது.
இதையும் படிங்க: முடிச்சு விட்டீங்க போங்க... கடைசி வாய்ப்பையும் இழந்த சென்னை! ஹைதராபாத் அபார வெற்றி!
சேப்பாக்கம் மைதானத்தில் அஜித்குமார்: நேற்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை காண நடிகர் அஜித்குமார் தனது மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்தார். மேலும் அவருடன் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவியும் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். அஜித்குமாரை மைதானத்தின் திரையில் காட்டிய போது ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அஜித்குமார் தற்போது தீவிரமாக கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான ’குட் பேட் அக்லி’ திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.